மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு M. K. Stalin அவர்கள் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்து (25.08.2023) தொடங்கி வைத்தார்.
வடமதுரை பேரூராட்சி தலைவர் திருமதி பரணி கணேசன், வடமதுரை வட்டார கல்வி அலுவலர் திரு நல்லசாமி, தலைமை ஆசிரியர் திரு சந்திரசேகர், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து விழாவினை சிறப்பித்தனர்.
நேற்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வயிறு குடல் கல்லீரல் கணையம் நோய்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் ஸ்ரீ சக்ரா கேஸ்ட்ரோ சென்டர் மற்றும் ஐயா சதாசிவம் Ex. எம்எல்ஏ நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தும் நவீன நுண்துளை அறுவை சிகிச்சை முகாம் ஐயா சதாசிவம் Ex. எம்எல்ஏ நினைவு அறக்கட்டளை மண்டபம் கரூர் ரோடு அரவக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக, கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக அணி ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன் கந்தசாமி, வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் திரு முகமது அலி, அரவக்குறிச்சி காங்கிரஸ் திரு ரயில்வே ராஜேந்திரன் ஆகியோர்களும் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார் மூத்த காங்கிரஸ் நிர்வாகி திரு தமிழ்மணி அவர்கள்.
மேலும் விவரங்களுக்கு 63 838 783 45 (ஸ்ரீ சக்ரா கேஸ்ட்ரோ சென்டர்) என்ற தொலைபேசியில் அழைக்கலாம்.
அதிமுகவில் இணைந்த தேமுதிக முன்னாள் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர் செல்வகுமார்
மதுரை,ஆக.27-
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களின் முன்னிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர் செல்வகுமார் மற்றும் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் சின்னச்சாமி, இளமி நாச்சியம்மாள், மேரி ராஜேந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் விஜயராஜா, ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஷேக்அப்துல்லா, ராஜா, அண்ணாநகர் பகுதி அவைத்தலைவர்கள் கவிஞர் மணிகண்டன், ரஹமத் பீவி, பகுதி துணைச் செயலாளர் ஆனந்தராஜ்,
மாவட்ட மகளிரணி செயலாளர் அனிதா ரூபி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்கள் திவ்யபாரதி, சுமதி, மாணவரணி துணைச் செயலாளர் மணிகண்ட பிரபு, நெசவாளர் அணி மாவட்ட செயலாளர் பிரகாஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி, தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் செல்வம் உள்பட 150 க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன், அதிமுகவில் இணைந்தார்.
இதற்கான ஏற்பாடுகளை 30-வது வட்டக்கழக செயலாளர் பாம்சி கண்ணன் மற்றும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச்செயலாளர் குறிஞ்சி குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போல் வேடமிட்டு வந்த எம்ஜிஆர் ராஜா என்பவரும் வி.பி.ஆர்.செல்வகுமாருடன் வந்து அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை ரயில் இணையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒன்பது பேர் பரிதாபமாக பலியாகி ஆறு பேர் காயமடைந்தனர்.
விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பின்னர் காயமடைந்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மதுரையில் ரயில் தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரை,ஆக.26-
மதுரை ரயில்வே நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் பரிதாபமாக பலியாகிநர் மேலும் ஆறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தீ விபத்து நடைபெற்ற இடத்தை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமார் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் விபத்து ஏற்பட்டதிற்கான காரணம் மற்றும் விபத்தில் காயமடைந்த பயணிகள் விபரங்கள் குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் விசாரித்தார்.
இதனைத் தொடர்ந்து ரயில் தீ விபத்தில் காயமடைந்து ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளிடம் ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் சிகிச்சை பெறுபவர்களுக்கு பிரட்,பழங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் கூறுகையில்:- மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் பலி ஆகியுள்ளது மிகவும் வேதனையும் வருத்தமும் அளிக்க கூடிய நிகழ்வாக உள்ளது. கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் உத்தரவின் பேரில் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்ததோடு விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தேன்.
ரயில் தீ விபத்தில் பலியான ஒன்பது பேருக்கு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் சார்பிலும் அதிமுக சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரயில்வே துறைக்கென்று தனியாக பேரிடர் மேலாண்மை குழு இருக்கிறது. இந்த ரயில் தீ விபத்துக்கு முக்கிய காரணம் கேஸ் சிலிண்டர் கொண்டு வந்தது தான். இந்த கேஸ் சிலிண்டர்களை எப்படி ரயில்வே போலிஸார் அனுமதித்தார்கள் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்துகள் ஏற்படாதவாறு ரயில்வே துறை அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்…
காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பெறுவதற்கு ரூபாய் 2 லட்சம் லஞ்சம் கேட்டு முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் பெற்ற பதிவுத்துறை ஊழியர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்த பத்மாவதி என்பவரிரன் தந்தை சொத்தினை தனது சொத்திற்கான பவர் பத்திரத்தை பத்மாவதிக்கும் அவரது சகோதரர் பச்சையப்பன் ஆகியோருக்கு வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பச்சையப்பன் போலி ஆவணங்கள் மூலம் இந்த சொத்தினை அபகரித்து விற்பனை செய்துள்ளார்.
சில காலத்திற்குப் பிறகு இதனை அறிந்த பத்மாவதியின் மருமகன் உலகநாதன் இம்மோசடியை அறிந்து இதனை ரத்து செய்ய கோரி காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இது காலதாமதம் ஏற்பட்டதால் நீதிமன்றத்தை நாடி இதற்கான உத்தரவை பெற்று அதனை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்த நிலையில் மீண்டும் பத்திரம் பெறுவதற்கு மாவட்ட பதிவாளர் அலுவலக ஊழியர் நவீன்குமார் ரூபாய் 2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதை அளிக்க மனமில்லாத பத்மாவதியின் மருமகன் உலகநாதன் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரினை பெற்று லஞ்ச ஒழிப்பு துறையினர், அவர் கேட்ட லஞ்சத்தின் முன்பணமாக ரூபாய் ஒரு லட்சம் வழங்க ஒப்புதல் தெரிவிப்பதாகவும் அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்.
பின்னர் அன்பழகன் பதிவாளர் அலுவலகத்தில் இப்பணத்தை வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட பதிவுதுறை ஊழியர் நவீன்குமார், தற்கால ஊழியராக பணிபுரிந்து வரும் சந்தோஷ்பாபுவிடம் இந்த பணத்தை அளித்துள்ளார். மறைந்திருந்து இவற்றை பார்த்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் இருவரையும் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூபாய் இரண்டு லட்சம் கேட்டு அதற்கு முன்பணமாக ரூபாய் ஒரு லட்சம் பெற்ற நிலையில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கனிமவளம் திருட்டு போவதை தடுக்க மாவட்ட அளவிலும், தாலுகா அளவிலும் அமைக்கப்பட்ட பறக்கும் படை என்ன செய்கிறது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
அதேபோல, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது கோர்ட்டு உத்தரவுப்படி குற்றவியல் நடவடிக்கை எடுத்து ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது எனவும் கேள்வியெழுப்பினர்.
அதனை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த குவாரியும் செயல்படாமல் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என குவாரிகளின் செயல்பாட்டுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்
மதுரையில் இன்று அதிகாலை நின்றிருந்த சுற்றுலா ரயிலில் தீப்பற்றியதில் 9 பேர் பலி. 6 பேர் படுகாயமடைந்தனர்
மதுரை,ஆக.26-
மதுரை ரயில்வே நிலையம் அருகே இன்று அதிகாலை நின்றிருந்த சுற்றுலா ரயிலில் தீப்பற்றியதில் 9 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
ரயிலில் பயணிகள் சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டரை கொண்டு சென்றதே விபத்துக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் உ.பி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 3 பேர் பெண்கள், 4 பேர் ஆண்கள் மற்றும் ஒருவரின் அடையாளம் தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மிகப் பயணமாக 60-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் தமிழகம் வந்தனர். இவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனிதத்தலங்களுக்கும் சென்றுள்ளனர். கடைசியாக நேற்று நாகர்கோவிலில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை 3.45 மணியளவில் மதுரை வந்துள்ளனர். புனலூரில் இருந்து வந்த ரயில் மூலம் அவர்கள் மதுரை வந்தனர்.
அவர்கள் வந்த இரண்டு ரயில் பெட்டிகள் தனியாகப் பிரிக்கப்பட்ட மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கனெக்டிங் ரயில் மூலமாக நாளை சென்னை செல்லவிருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் ரயிலில் தீப்பிடித்துள்ளது. ரயிலில் இருந்த பயணிகள் சிலிண்டர் பயன்படுத்தி சமைத்துள்ளனர். அப்போது சிலிண்டர் வெடித்து தீ பிடித்துள்ளது. தீ மளமளவெனப் பரவ ரயில் பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். 55 பேர் உயிர் தப்பியுள்ளனர். சமையல் செய்வதற்காக ரயில் பெட்டியின் ஒருபுறம் உள்ள கதவில் உள்புறம் தாழிடப்பட்டிருந்த நிலையில் பயணிகள் அனைவரும் ஒரே பக்கத்தில் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தீயில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.
விபத்து நடந்த பகுதியில் அமைச்சர் மூர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, காவல் உயரதிகாரிகள், தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் விரைந்து சென்றனர். விபத்துப் பகுதியை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது “நிகழ்விடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சிலிண்டர் வெடித்ததே விபத்துக்குக் காரணம் என 9 பேர் பலியாகியுள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.இதற்கிடையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் பயணிகள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை ரயில் நிலையத்துக்குள்ளும், ரயிலிலும் எடுத்துச் செல்லக் கூடாது என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி பவள விழா நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்பித்தார்
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் 75-ஆம் ஆண்டு பவள விழா நிறைவை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தருமபுரம் ஆதீனத்தின் இவ்விழாவிற்கு 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலை வகித்தார். பின்னர் திருக்குறள் உரைவளம் என்ற நூலை முதலமைச்சர் வெளியிட்டார்.
இவ்விழாவில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் எம். பன்னீர்செல்வம், நிவேதா எம். முருகன், எஸ். ராஜ்குமார், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி. மகாபாரதி, தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி. சாமிநாதன், செயலாளர் முனைவர் இரா. செல்வநாயகம், இந்து சமய அறநிலையத் துறை உயர்நிலை குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தலைமையில் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது
மதுரை,ஆக.25-
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பகுதி, வட்டக்கழக செயலாளர்கள், மகளிரணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.