Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / பத்திரத்தை வாங்க 2 லட்சம் லஞ்சம்; 2 பேர் கைது!
NKBB Technologies

பத்திரத்தை வாங்க 2 லட்சம் லஞ்சம்; 2 பேர் கைது!

பத்திரத்தை வாங்க 2 லட்சம் லஞ்சம்; 2 பேர் கைது!

காஞ்சிபுரம்  மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பெறுவதற்கு ரூபாய் 2 லட்சம் லஞ்சம் கேட்டு முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் பெற்ற பதிவுத்துறை ஊழியர்  மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம்,  வாலாஜாபாத் வட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்த பத்மாவதி என்பவரிரன் தந்தை சொத்தினை தனது சொத்திற்கான பவர் பத்திரத்தை பத்மாவதிக்கும் அவரது சகோதரர் பச்சையப்பன் ஆகியோருக்கு வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பச்சையப்பன் போலி ஆவணங்கள் மூலம் இந்த சொத்தினை அபகரித்து விற்பனை செய்துள்ளார்.

சில காலத்திற்குப் பிறகு இதனை அறிந்த  பத்மாவதியின் மருமகன் உலகநாதன் இம்மோசடியை அறிந்து இதனை ரத்து செய்ய கோரி காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இது காலதாமதம் ஏற்பட்டதால் நீதிமன்றத்தை நாடி இதற்கான உத்தரவை பெற்று அதனை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்த நிலையில் மீண்டும் பத்திரம் பெறுவதற்கு மாவட்ட பதிவாளர் அலுவலக ஊழியர் நவீன்குமார் ரூபாய் 2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதை அளிக்க மனமில்லாத பத்மாவதியின் மருமகன் உலகநாதன் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரினை பெற்று லஞ்ச ஒழிப்பு துறையினர், அவர் கேட்ட லஞ்சத்தின் முன்பணமாக ரூபாய் ஒரு லட்சம் வழங்க ஒப்புதல் தெரிவிப்பதாகவும் அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்.

பின்னர் அன்பழகன் பதிவாளர் அலுவலகத்தில் இப்பணத்தை வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட பதிவுதுறை ஊழியர் நவீன்குமார், தற்கால ஊழியராக பணிபுரிந்து வரும் சந்தோஷ்பாபுவிடம் இந்த பணத்தை அளித்துள்ளார். மறைந்திருந்து இவற்றை பார்த்த  லஞ்ச ஒழிப்புத் துறையினர் இருவரையும் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூபாய் இரண்டு லட்சம் கேட்டு அதற்கு முன்பணமாக ரூபாய் ஒரு லட்சம் பெற்ற நிலையில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Bala Trust

About Admin

Check Also

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகருக்கு வருகை தர உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து விளாங்குடி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES