Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் (page 62)

செய்திகள்

All News

அண்ணாமலை என்ன கவர்மென்ட் சர்வண்ட்டா! எதுக்கு இசட் பாதுகாப்பு? 3 கோடி செலவாகுது! விளாசிய ஜோதிமணி

அண்ணாமலை என்ன கவர்மென்ட் சர்வண்ட்டா! எதுக்கு இசட் பாதுகாப்பு? 3 கோடி செலவாகுது! விளாசிய ஜோதிமணி

கரூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பை வெளியிடுவேன் என கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

கரூரில் அவர் நேற்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் அண்ணாமலை நான் பெண் என்பதால் பிழைத்துக் கொண்டு போகட்டும் என அவர் விட்டு வைத்திருப்பதாக சொல்லியுள்ளார். இதை சொல்ல அண்ணாமலை யார் என நான் கேட்கிறேன்.

அண்ணாமலையால் என்னை என்ன செய்ய முடியும். அமலாக்கத் துறையை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வேண்டுமானால் என் வீட்டிற்கு அமலாக்கத் துறையை அனுப்பட்டும். என் வீட்டில் கஞ்சி போட்ட காட்டன் புடவைகளை தவிர வேறு எதுவுமே இல்லை.

மணல் மாபியாக்களிடம் பணம் வாங்கி அண்ணாமலை போல் ஆடம்பர வாழ்க்கையை நான் வாழவில்லை. வீட்டுக்கு ரூ 3.70 லட்சம் வாடகை குறித்த கேள்விக்கு அண்ணாமலை இதுவரை பதில் சொல்லவில்லை. அவரை மாதிரி நான் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் இல்லை. பெண்கள் மீது தனிப்பட்ட முறையில் கழிச்சடை அரசியல் நடத்தும் அரசியல்வாதி அண்ணாமலை.

கர்நாடகா மாநிலத்தில் காவல் துறையில் இருந்த கருப்பு ஆடு. 2018 ஆம் ஆண்டு கர்நாடகா தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் தனிப்பெரும் கட்சியாக இருந்த பாஜகவின் எடியூரப்பா மூன்று நாள் முதல்வராக இருந்தார். அப்போது சிக்மக்ளூரில் எஸ்பியாக இருந்தவர் அண்ணாமலை. அப்போது எடியூரப்பா அரசை காப்பாற்றவே அண்ணாமலை ராம்நகருக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களை பணம் வாங்கிக் கொண்டு வளைத்து போடுவதற்காகவே அண்ணாமலை ராம்நகருக்கு அனுப்பப்பட்டார். அது தோல்வி அடைந்தது. இதனால் அண்ணாமலை மீண்டும் சிக்மக்ளூருக்கே சென்றுவிட்டார். அங்கிருந்தும் பெங்களூர் சென்றார். காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அரசியல் அரிச்சுவடி கூட தெரியாத அண்ணாமலைக்கு தமிழக பாஜக தலைவர் பதவி கிடைத்தது, மணல் மாபியாக்களில் 60 லட்சம் ரூபாய் வாங்கியதாக சென்னை பாஜக அலுவலகத்தில் வேலை செய்தவர் வீட்டுக்கு அமலாக்கத் துறை சென்றது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்கவில்லை. இது ஏன் என கேட்டதற்கும் அமலாக்கத் துறை பதில் இல்லை.

அரசு பதவியில் இல்லாத அண்ணாமலைக்கு எதற்கு இசட் பிரிவு பாதுகாப்பு, இதனால் ஆண்டுக்கு ரூ 3 கோடி செலவாகிறது. எம்பி என்ற முறையில் நான் விமானத்தில் முதல் வகுப்பில் கூட பயணிப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில் அவர் என்னை எப்படி கேள்வி கேட்கலாம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அண்ணாமலையின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும்.

அந்த சமயத்தில் அண்ணாமலை எங்கிருக்க வேண்டுமோ அங்கிருப்பார். கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமாரிடம் நான் பணம் வாங்கியதற்கான ஆதாரம் இருந்தால் அண்ணாமலை தாராளமாக வெளியிடட்டும். அண்ணாமலையின் சொத்து மதிப்பு குறித்து நான் அவசியம் ஏற்பட்டால் வெளியிடுவேன் என ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார்.

பெட்கிராட் கூட்டரங்கில் சணல் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு விழா

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்சர் நிறுவனத்தின் சமூக நிதி பங்களிப்புடன் பெட்கிராட் நிறுவனத்துடன் இணைந்து மதுரை எஸ்.எஸ் காலனியில் உள்ள பெட்கிராட் கூட்டரங்கில் சணல் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி கடந்த (25/09/2023) முதல் ஒரு மாத காலமாக நடைபெற்றது.

இந்த பயிற்சியில் 50 பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு 17 வகையான சணல் பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் சொந்தமாக தொழில் தொடங்க வங்கிக் கடன் வழங்குவதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

இந்த பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை அன்று பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பெட்கிராட் தலைவர் எஸ்.கிருஷ்ணவேணி, பொருளாளர் ஜி.சாராள்ரூபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் இ.டிஐ.ஐ உதவி மேலாளர் திருமதி எம்.சுனிதா அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியாளர்களிடம் கலந்துரையாடினார்.

மேலும் அவர்கள் பயிற்சி கற்ற விதம். பொருட்களை சந்தைப்படுத்தும் அனுபவம், சணல் பொருட்கள் உற்பத்தி செய்யும் விதம் குறித்து ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் விஜயவள்ளி நன்றி கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் முத்தூட் பைனான்ஸ் சி.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் சேகரிப்பு மையத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடங்கி வைத்தார்.

மதுரை அன்சாரி நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவக் கழிவுகள் சேகரிப்பு மையத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடங்கி வைத்தார்.

உயிரியல் கழிவு மேலாண்மை விதிகள் 2016-இன்படி அனைத்து சுகாதார மையங்களிலும் உயிரியல் கழிவுகள் சேமிப்பு அமைத்துப் பயன்படுத்த வேண் டும். சுகாதார மையங்களில் உற் பத்தியாகும் உயிரியல் மருத்துவக் கழிவுகளைச் சேமித்து வைத்து 48 மணி நேரத்துக்குள் அதை அகற்றும் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

உற்பத்தியாகும் உயிரியல் மருத்துவக் கழிவுகளை மஞ்சள், சிகப்பு, நீலம், வெள்ளை என்று நான்கு வகைப்படுத்தி சேமித்து அகற்றப்பட வேண்டும். இவ்வாறு வகைப்படுத்தி அகற்றும் போது, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

இந்த உயிரியல் கழிவுகள் சேமிப்பு அறை மதுரை மாவட்டத்தில் 6 நகர்ப்புற ஆரம்ப சுகாதார
மையங்களில் (நகர்ப்புறம் 3, கிராமப்புறம் 3) தனியார் நிறுவ னமான முத்தூட் நிதி நிறுவனத்தின் சமூக பங்களிப்புத் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக, மதுரை மாநகராட்சி அன்சாரி நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், ரூ.50 ஆயிரத்தில் அமைக் கப்பட்ட மருத்துவக் கழிவுகள் சேகரிக்கும் மையத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மண்டல மருத்துவ அலுவலர் ராம்மோகன், மாவட்ட நிர்ணய மருத்துவ அலுவலர் பொன்.பார்த்திபன், முத்தூட் பைனான்ஸ் சி.எஸ்.ஆர் மேலாளர் ஜெயக்குமார் மற்றும் விஜயகுமார், மருத்துவ அலுவலர் ஷோபனா, சுகாதார ஆய்வாளர் கவிதா மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் நிறுவனம் மற்றும் பெட்கிராட் இணைந்து ஜூட் பேக் தயாரிக்கும் இலவச பயிற்சி

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்சர் நிறுவனம் மற்றும் பெட்கிராட் தொழில் பயிற்சி பள்ளி இணைந்து இலவச ஜூட் பேக் தயாரிக்கும் பயிற்சி மதுரை பீ.பீ.குளம் பகுதியில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் அவர்களின் தலைமையிலும், தலைவர் கிருஷ்ணவேணி, பயிற்சியாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். மாமன்ற உறுப்பினர் முரளி கணேஷ் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து அவர் பேசுகையில் :- பகுதி மக்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், சுய தொழில் துவங்க தேவையான அனைத்து உதவிகளையும் தான் செய்து தருவதாக பேசினார்.

மதுரை மாவட்ட தொழில் மைய உதவி பொது மேலாளர் ஜெயா பேசுகையில், தொழில் தெரிந்தவர்கள் மத்திய மாநில அரசுகள் மானியத்துடன் வழங்கும் வங்கி கடனை பெற்று வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என கூறினார்.

இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் பேசுகையில் :- தொழில் முனைவோராக மாறுவதற்கு உங்களின் விடாமுயற்சியும், ஆர்வமும் முக்கியம். தயாரித்த பொருட்களை விற்பனை செய்யவும் விற்பனை கூடம் மற்றும் கண்காட்சி அமைக்கவும் வழிவகை செய்யப்படும்என பேசினார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் தங்கமலர் பேசுகையில் மானியத்துடன் வங்கி கடன் பெறுவது தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளது எனவே சிறப்பாக பயிற்சியை முடிக்க வேண்டும் என கூறினார்.

நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.

மதுரையில் ROYAL SOUCO 1974-1977 முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது

மதுரையில் ROYAL SOUCO 1974-1977 முன்னாள் மாணவர்கள் சார்பாக கீழவெளி வீதியில் உள்ள சௌராஷ்டிரா துவக்க பள்ளியில் பயிலும் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா ஜே.கே.ரமேஷ் மற்றும் கே.என்.கே ரகுநாத் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்தவர்களை முன்னாள் கவுன்சிலர் ஆர்.கே.பாலயோகி வரவேற்று பேசினார்.

ஆர்.கே.விஜயன், எஸ்.ஆர்.சதாசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் ஜே.கே.கிருஷ்ணகுமார், என்.கே.ராகவன், டாக்டர் பி.ஆர்.ஜே கண்ணன், மற்றும் பேராசிரியர் எல்.ஆர் கோவர்தனன், தாளாளர் ஏ.ஆர்.ஜெகந்நாத், வி.கே.விஸ்வநாத், டி.ஆர்.ரவீந்திரநாத், கே.எஸ்.சந்திரசேகரன், டி.எஸ். சௌந்தரராஜன், ராமஈஸ்வர்லால், எம்.டி.மனோகரன், பி.ஆர்.முரளிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் திமுக சிறுபான்மையினர் பிரிவு சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கையெழுத்து இயக்கம்

மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில் திமுக சிறுபான்மையினர் பிரிவு வடக்கு மாவட்டம் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கையெழுத்து இயக்கம் சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறுபான்மை பிரிவு வடக்கு மாவட்ட அமைப்பாளர் எஸ்.எம்.ஜான் செய்திருந்தார்.

இந்நிகழ்வில் திருப்பாலை பகுதி செயலாளர் சசிகுமார், கிழக்கு ஒன்றிய சேர்மன் மணிமேகலை, மீராஜான், கா.கவியரசு, தேவதாஸ், சிங்கராயர், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் மற்றும் ஸ்டாலின், வட்டச் செயலாளர்கள் லட்சுமணன், ராமமூர்த்தி, ஜெங்சிஸ்கான், தம்பி செந்தில் மற்றும் நிர்வாகிகள் ரவி, வேல்முருகன், குருசாமி, அன்பு, கூலு (எ) ஆறுமுகம், விவேக்குமார், தோபினிக்சேவியர், பாலமுருகன், செல்வகுமார், தன்ராஜ், உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்

விருதுநகர் மாவட்டம் கல்லுமடத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி அவர்கள் விருதுநகர் மாவட்டம் கல்லு மடத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் கட்சி கொடியை ஏற்றி வைத்து மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அவருக்கு ஊர் தலைவர், கிராம பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஏ.பி.சைக்கிள் & பிட்னஸ் சேல்ஸ், சர்வீஸ் ஷோரூம் திறப்பு விழா

மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஏ.பி.சைக்கிள் & பிட்னஸ் சேல்ஸ், சர்வீஸ் ஷோரூமை மூத்த மண்டல மேலாளர் பாரதி, ரீஜீனல் மேனேஜர் வினோத்குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை ஷோரூம் உரிமையாளர்கள் 85-வது வார்டு அதிமுக வட்டக்கழக செயலாளர் ஜெயக்குமார், மற்றும் அருணாச்சலம், பிரதீப் ஆகியோர் வரவேற்றனர்.

இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இங்கு ஹெர்குலிஸ், பி.எஸ்.ஏ, ஹீரோ உள்பட அனைத்து கம்பெனியை சேர்ந்த சைக்கிள்கள், உடற்பயிற்சிக்கு தேவையான பிட்னஸ் கருவிகள், குழந்தைகளுக்கான சைக்கிள் மற்றும் பேட்டரி கார்கள் பல மாடல்களில் குறைந்த விலையில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மற்றும் ம.பொ.சி அறக்கட்டளை இணைந்து நடத்திய கருத்தரங்கம்

மதுரையில் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மற்றும் ம.பொ.சி அறக்கட்டளை இணைந்து நடத்திய ம.பொ.சி அவர்களின் புகழைப் போற்றும் விதமாக கருத்தரங்கம்

மதுரை காமராஜர் சாலையில் உள்ள காமாட்சி திருமண மண்டபத்தில் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மற்றும் ம.பொ.சி அறக்கட்டளை இணைந்து நடத்திய தமிழகத்தை மதராஸ் மாகாணம் என்கிற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயரை சூட்டக்கோரி போராடி வெற்றி கண்ட ம.பொ.சி அவர்களின் புகழைப் போற்றும் விதமாக கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாஜக மதுரை மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர்கள் பேராசிரியர் ராம.ஸ்ரீனிவாசன், பொன்.பாலகணபதி, பெருங்கோட்ட பொறுப்பாளர் பேராசிரியர் கதலி நரசிங்க பெருமாள்,மதுரை மாநகர் கோட்ட பொறுப்பாளர் கார்த்திக் பிரபு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே.ஞானேஸ்வரன் சிறப்பாக செய்திருந்தார். மாவட்ட தலைவர்கள் தெய்வேந்திரன் மற்றும் மகாலிங்கம் ஆகியோர் வரவேற்று பேசினர்.

நிகழ்ச்சியின் முடிவில் மண்டல் தலைவர் மணிமாறன் நன்றியுரை கூறினார்.

“பாஜக ஆட்சிக்கான கவுண்டவுன் சங்கை வேலையில்லா இளைஞர்கள் ஊதுவார்கள்” : மல்லிகார்ஜூன கார்கே தாக்கு!

"பாஜக ஆட்சிக்கான கவுண்டவுன் சங்கை வேலையில்லா இளைஞர்கள் ஊதுவார்கள்" : மல்லிகார்ஜூன கார்கே தாக்கு!

இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வர்த்தகம், தொழில் வளர்ச்சி, முதலீடுகள், வேலைவாய்ப்புகள் என அனைத்துத் துறைகளும் முற்றிலும் சிதைந்து போயுள்ளன.

குறிப்பாக வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் இருந்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் வேலையில்லா திண்டாட்டத்தின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கடந்த ஐந்து ஆண்டில் மட்டும் வேலையின்மை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், ஆண்டுக்கு 2 கோடி வேலை என்ற பிரதமரின் வாக்குறுதி என்ன ஆனது? என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டின் வேலையில்லா இளைஞர்கள்தான் பா.ஜ.க ஆட்சிக்கு கவுண்டவுன் என்ற சங்கை ஊதுவார்கள் என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், “நாட்டில் வேலையின்மை விகிதம் 10% க்கும் அதிகமாக உள்ளது. மந்தநிலை மற்றும் பணவீக்கத்திற்கு மத்தியில், மோடி அரசாங்கம் இதுபோன்ற “வேலையின்மை கண்காட்சியை” ஏற்பாடு செய்துள்ளது, இது கோடிக்கணக்கான இளைஞர்களை வீடு வீடாக அலைய வைக்கிறது. நாட்டின் வேலையில்லா இளைஞர்கள்தான் பாஜக ஆட்சிக்கு கவுண்டவுன் என்ற சங்கை ஊதுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES