Tuesday , December 3 2024
Breaking News
Home / Politics / திராவிட மாடல் ‘திமுக’ அரசால் சிறப்பிக்கப்பட்ட இடதுசாரி தலைவர் சங்கரய்யா-முதல் தகைசால் தமிழர் விருது!
MyHoster

திராவிட மாடல் ‘திமுக’ அரசால் சிறப்பிக்கப்பட்ட இடதுசாரி தலைவர் சங்கரய்யா-முதல் தகைசால் தமிழர் விருது!

திராவிட மாடல் 'திமுக' அரசால் சிறப்பிக்கப்பட்ட இடதுசாரி தலைவர் சங்கரய்யா-முதல் தகைசால் தமிழர் விருது!

சென்னை: இந்தியாவின் முதுபெரும் இடதுசாரித் தலைவரான இன்று மறைந்த சங்கரய்யாவுக்கு (வயது 102) தமிழ்நாட்டில் ஆளும் திராவிட மாடல் திமுக அரசு தமது முதலாவது தகைசால் தமிழர் விருது வழங்கி பெருமைப்படுத்தியது.

இந்தியாவின் விடுதலைக்காக சிறைவாசம் அனுபவித்தவர் சங்கரய்யா. 95 வயது வரை தமது போராட்ட குணத்தை இடைவிடாது கடைபிடித்தவர். 95 வயதில் ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்ட களத்தில் நின்றவர் சங்கரயா. இன்று வயது முதுமையின் காரணமாக 102 வயதில் காலமானார். தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பெருந்தலைவர் ‘தோழர்’ சங்கரய்யாவின் மரணம் மிகப் பெரும் பேரிழப்பு.

இடதுசாரித் தலைவராக திகழ்ந்து ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சிறைவாசம் அனுபவித்தவர் சங்கரய்யா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய நிறுவனத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சங்கரய்யா. தமிழ்நாட்டில் 2021-ல் திமுக அரசு மீண்டும் அமைந்த போது, தமிழ்நாட்டுக்கும் தமிழினத்துக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை சிறப்பிக்க ‘தகைசால் தமிழர் விருது’ உருவாக்கப்பட்டது. இந்த தகைசால் தமிழர் விருது முதன் முதலாக முதுபெரும் இடதுசாரித் தலைவர் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது.

தகைசால் தமிழர் விருதை சங்கரய்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார். அப்போது விருதுக்கான ரூ10 லட்சம் காசோலையும் சங்கரய்யாவிடம் வழங்கப்பட்டது. ஆனால் விருதாக தாம் பெற்ற ரூ10 லட்சம் காசோலையை தமிழ்நாடு அரசின் நிவாரண நிதி- கொரானா நிவாரண நிதிக்கே திரும்பி வழங்கி ‘தகைசால்’ தமிழர் என்ற விருதுக்கும் பெருமை சேர்த்தார் தியாகி சங்கரய்யா.

இவர்தான் “தகைசால் தமிழர்..” விருது பணம் 10 லட்சத்தை அப்படியே கொரோனா நிவாரணத்திற்கு அளித்த சங்கரய்யா

சங்கரய்யாவின் 102வது பிறந்த நாளின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் “பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ‘தகைசால் தமிழர்’ சங்கரய்யா அவர்களின் 102-ஆவது பிறந்தநாள்! பொதுவாழ்விலும் பொதுவுடைமை இலட்சியங்களைக் கடைப்பிடிப்பதிலும் நம் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் அவர் நலமுடன் வாழிய பல்லாண்டு என வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆம் இன்றைய இளம் தலைமுறைக்கு பொதுவாழ்வு என்றால் என்ன என்பதற்கு மாபெரும் தீரமிக்க போராளி சங்கரய்யாவின் வாழ்வும் சரித்திரமும் என்றென்றும் பாடமாக இருக்கும் என்பது மிகையல்ல!

பெருந்தலைவர் ‘தோழர்’ சங்கரய்யாவுக்கு ‘செவ்வணக்கம்’!

Bala Trust

About Admin

Check Also

அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக கரூர் விஷன் 2030 நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்….

வணக்கம்..! அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக President செந்தில் விஷ்ணு ராம், CII அமைப்பு சார்ந்த சேர்மன், கோ சேர்மன், …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES