Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் (page 118)

செய்திகள்

All News

மூன்றாவது இடத்தில் தமிழகம் டாஸ்மாக் படுகொலை… மது விற்பனையை அங்கீகரிக்கும் திராவிட திமுக அதிமுக கட்சிக ளை நம்ப வேண்டாம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி

இந்தியாவில் மதுவால் அதிகமானவர்கள் உயிரிழக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் மத்திய பிரதேசம் இரண்டாவது இடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும், கர்நாடகா நான்காவது இடத்திலும், அரியானா ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழா மது அருந்தாதே மது பழக்கம் உன்னை அழைப்பது மட்டுமின்றி உன் குடும்பத்தையே ஒருநாள் தெருவில் நிற்க வைக்கும் எனவே மது விற்பனையை அங்கீகரிக்கும் திராவிட திமுக, அதிமுக கட்சிகளை நம்பாதே என இளைஞர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

திருவொற்றியூர் மெட்ரோ டெபோட்டில் பரபரப்பு

திருவொற்றியூர் மெட்ரோ டெபோட்டில் பரபரப்பு

திருவொற்றியூரில் , வார்டு 6 , சக்தி கணபதி நகரில் பல வருண்டங்களாக குடி நீருக்காக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இந்த விஷயம் சம்பந்தமாக பல முறை அதிகாரிகளை சந்தித்து மெட்ரோ குடிநீர் வழங்கக்கோரி மனுக்கள் கொடுத்து உள்ளனர். மெட்ரோ குடிநீர் துறையும், 1 மாதத்தில் முடிக்கிறோம், என்று சொல்லி சொல்லி 2 வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இந்த நிலையில் மாதத்தின் 2 சனிக்கிழமை மக்கள் குறை கேட்கும்/ தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று சக்தி கணபதி நகர் பொது மக்கள் மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வட சென்னை மாவட்ட துணை தலைவரும் இணைந்து அதிகாரிகளை சந்தித்து பேசி உள்ளனர். இதில் அதிகாரிகளின் பதில் வழக்கம் போல் இருந்த நிலையில் ஆத்திரம் அடைந்த மக்கள், அதிகாரிகளிடம் தங்கள் குறையை கோவமாக கொட்டி தீர்த்தனர், இதில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. பின்பு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்ட துணை தலைவர் திரு ஜேம்ஸ் மார்ட்டின் அவர்கள், அதிகாரிகளிடம் தங்கள் ஆறுதல் வார்த்தைகள் இதுவரை போதும் இனி வேண்டாம், அடுத்த குறை தீர்ப்பு கூட்டத்திற்குள் குடிநீர் குழாய்கள் ஏற்படுத்தி தர வேண்டும் , அதற்கு திருவொற்றியூர் மெட்ரோ நிர்வாகம் வேகமாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த பின்னர், மெட்ரோ அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் நாங்கள் பணியை முடிப்போம் என்று உறுதி அளித்த பிறகு, மக்கள் களைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருவொற்றியூர் மெட்ரோ டெபோட் சுமார் 1 மணி நேரம் பரபரப்பாக தென்பட்டது.

சீன அதிபரின் வருகையை காட்டி 76,000 கோடி வரை தள்ளுபடி மறைக்கப்பட்டதா?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமான மத்திய அரசின் அவலம் சாடுகிறார் தமிழ்நாடு இளைஞர் கட்சி மாநில துணைச் செயலாளர் க.முகமது அலி:

தற்போது வெளியாகியுள்ள செய்தியான எஸ்பிஐ வங்கி வாராக்கடன் தள்ளுபடி இந்திய தேசத்தை அச்சத்தில் ஆழ்த்தும் ஒரு செய்தியாக பார்க்கப்படுகிறது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கப்பட்டு இச்செய்தி ஊடகங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமான நிர்வாகத்தின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. சிறுவர்கள் தான் பறிகொடுத்த பொருட்களை பக்கத்தில் இருப்பவரிடம் இருந்து திருடிக்கொண்டு அந்த பொருள் தன்னுடையது என்று பறைசாற்றுவது போல் மத்திய அரசுக்கு இணக்கமான தொழிலதிபர்களின் கடன்கள் சுமார் 76 ஆயிரத்து600 கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்து இந்திய அரசின் ரிசர்வ் வங்கியிடமிருந்து எடுத்துக்கொண்ட மத்திய அரசு செயல்பாடு சிறுபிள்ளைத்தனமாக அறியப்படுகிறது. இப்பேர்பட்ட நிர்வாகம் தொடருமேயானால் இந்திய தேசத்தின் பொருளாதாரம் மட்டுமல்ல இந்திய நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிநபரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் இதற்குப் பிறகும் தன்னை மாற்றிக் கொள்ளாத மத்திய அரசு செயல்பட்டால் இந்திய நாடு பொய்யுரைக்கும் நாடு என்று உலக நாடுகள் மத்தியில் உறுதி செய்யப்பட்டு விடும். இச்செயலை தமிழ்நாடு இளைஞர் கட்சி இன் மாநிலத் துணைச் செயலாளர் க.முகமது அலி அவர்கள் வருத்தங்களுடன் கூடிய கண்டனத்தை தெரிவித்தார்.

 

 

 

 

இந்தியாவின் இரண்டாவது சுதந்திர தினம் அக்டோபர் 12…

இந்தியாவின் இரண்டாவது சுதந்திர தினம் அக்டோபர் 12

மக்களுக்கான தகவல்களை பெற்று நாட்டு நலனை மேம்படுத்த உருவான தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமலான தினம் இன்று…

அரவக்குறிச்சி தொகுதியில் ஓர் அரசியல் மாற்றம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி

அரவக்குறிச்சி தொகுதியில் ஜல்லிக்கட்டில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சி தேர்தல் களத்தை சந்திக்க இளைஞர் காளைகளை வரவேற்பதாக அரவக்குறிச்சி தொகுதியில் ஓர் அரசியல் மாற்றம் என்ற தலைப்பில் அறிவித்துள்ளது.

அரவக்குறிச்சி வாக்காளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முகாம்கள் நடத்தப்படும் இடங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என மாநில துணைச்செயலாளர் க.முகமது அலி அவர்கள் அறிவித்தார்.

மாமல்லபுரத்தில் வேட்டி சட்டையில் ஜின்பிங்கை வரவேற்ற மோடி

சீன அதிபரை வரவேற்க தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் மோடி வருகை.

மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு பகுதியில் சீன அதிபரை பிரதமர் மோடி தற்போது அழைத்துச் செல்கிறார். தமிழர்களின் சிற்பக் கலையை அதிசயத்துடன் ரசித்து பார்க்கிறார் கன அதிபர்,
இதை அடுத்து ஐந்து ரதம் பகுதிக்கு இருவரும் செல்கி றார்கள். மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு பகுதியில் சீன அதிபரை பிரதமர் மோடி தற்போது அழைத்துச் செல்கிறார்.

தமிழர்களின் சிற்பக் கலையை அதிசயத்துடன் ரசித்து பார்க்கிறார் கன அதிபர், இதை அடுத்து ஐந்து ரதம் பகுதிக்கு இருவரும் செல்கிறார்கள்.

அரசியல் பழகு

?முன்னுரிமை?
? நண்பர்களே, தினமும் மாலை 7-8 மணிக்குள் நம் பேஸ்புக் நேரலை
?தயவுசெய்து பங்கேற்று ஒரு ஊடாடும் அமர்வை உருவாக்கவும்
?TNYP கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் பற்றிய நம் எல்லா கேள்விகளையும் தெளிவுபடுத்த முடியும்,
?சமூகப் பிரச்சினைகளில் நிலைப்பாடு
தினசரி ஒரு தலைப்பை எடுத்து விவாதிப்போம்
?தவறவிடாதீர்கள்

?தயவுசெய்து நேரடி ஒளிபரப்பில் கருத்துத் தெரிவிக்கவும், பகிரவும்
? புரிந்துகொள்ளுதலுக்கும் ஆதரவிற்கும் நன்றி

*அரசியல் பழகு – ஒரு கலந்துரையாடல்*
தினம் இரவு 7 மணி முதல் 8 மணி வரை
நேரடி ஒளிபரப்பில் பங்குகொள்வோம்
Fb.me/tnyparty

போனஸ் என்றால் என்ன? இந்தியர்னா சும்மாவா?

இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்தது…!! ( வருடத்திற்கு 52 வாரங்கள்). ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல் படுத்தினார்கள் 4வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பளமாக கொடுத்தனர்…!!(12×4=48 வாரங்கள்). அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும்.

இந்தியர்னா சும்மாவா?

அதனை தரும்படி 1930-1940 களில் மஹாராஷ்டிரா வில் உள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது 1 மாத சம்பளம் வஞ்சிக்கப் படுவதாக போராடினார்கள்.அதன் விளைவாக அந்த ஒரு மாத சம்பளத்தை எப்போது எப்படி கொடுக்கலாம் என பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள்.அப்போது தான் தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக போனஸ் என்ற பெயரில் முதன் முதலில் 1940ம் வருடம் ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கப்பட்டது.

பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது.ஆக போனஸ் என்பது விடுபட்ட-கொடுக்கப்படாத- நமக்குரிய (சேர வேண்டிய) ஒரு மாத சம்பளம்.

இன்றைக்கு பல மக்களுக்கு இந்த சரித்திர நிகழ்வு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. !!

இணைய செய்தித்தாள் தொடங்க வேண்டுமா? Want to start online News Website?

இணைய செய்தித்தாள் தொடங்க வேண்டுமா? Want to start online News Website?

மிகக் குறைந்த விலையில் உங்களது இணைய செய்தித்தாள் என் கே பி பி டெக்னாலஜிஸ் நிறுவனம் மூலமாக ரூபாய் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செய்து தரப்படும்.

இதில் டொமைன் ஹோஸ்டிங் உள்ளடங்கும் மேலும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் வேண்டுமெனில் அதுவும் மிக மிக குறைந்த விலையில் செய்து தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மற்றும் அனைத்து வகையான தொழில்களுக்கும் முறையாக இணையதளம் செய்து தரப்படும்.

இப்படிக்கு,
NKBB Technologies,
9965557755.

7ம் தேதி முதல் வினியோகம் – பொங்கல் பரிசு

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வரும் 7-ந்தேதி முதல் அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்படுகிறது.கடந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் தொகுப்பு பச்சை நிற ரேசன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.சர்க்கரை பெறக்கூடிய குடும்ப அட்டை வைத்து இருப்பவர்களுக்கு இதுவரை பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் நடுத்தர மற்றும் வசதி படைத்த குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர்.ஆனால் இந்த வருடம் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2 கோடியே ஒரு லட்சம் குடும்பத்தினர் இதன் மூலம் பயன் அடைகிறார்கள்.இடைத்தேர்தல் நடைபெறும் திருவாரூர் மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இடைத்தேர்தல் முடிந்த பின்னர் திருவாரூர் மாவட்டத்திற்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தபோது தி.மு.க. ஆட்சியிலும் சரி, ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போதும் கூட அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. 1000 ரூபாய் பணமும் வழங்கப்படவில்லை.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் முதன் முதலாக அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.ஏழைகள், வசதி படைத்தவர்கள் என்று பாகுபாடு பார்க்காமல் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொருட்கள் வாங்குகின்ற அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் கிடைக்கும்.

இதன் மூலம் அரசுக்கு ரூ.1,974 கோடியே 17 லட்சம் செலவாகிறது. பொங்கல் பொருட்கள் தொகுப்பிற்கு மட்டும் ரூ.257 கோடியே 52 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சிரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கும். இந்த பொருட்களுடன் பை ஒன்றும் வழங்கப்படும்.

பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் அனைத்து ரேசன் கடைகள் மூலம் குடும்பதாரர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வழங்கப்படும். ஒவ்வொரு அட்டைத்தாரர்களோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ நேரில் சென்று பெற்று கொள்ள வேண்டும்.பொங்கல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு பேக்கிங் செய்யும் பணி நடைபெறுகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டு இருப்பதால் காகித பையில் பொருட்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

பொங்கல் பரிசு 7-ந்தேதி முதல் அனைத்து ரேசன் கடைகளிலும் கிடைக்கும் வகையில் இத்திட்டத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.அதனை தொடர்ந்து அடுத்த வாரம் முதல் 13-ந்தேதி வரை பொங்கல் பரிசு அனைவருக்கும் கிடைக்கும்.நெரிசல் இல்லாமல் வழங்கும் வகையில் ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் தினமும் 300 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்க திட்டமிட்டப்பட்டுள்ளது.எந்தெந்த கார்டுகளுக்கு எந்த நாட்களில் பெற்றுக் கொள்வது என்பது குறித்து ரேசன் கடைகளில் அறிவிப்பு வெளியிடப்படும். Courtesy : maalaimalar

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES