வெள்ளியணை டூ கொல்கத்தா:
ஒரு இலட்சம் மக்களின் ஒருமித்த குரல் – வெள்ளியணை பெரியகுளம் நீர் மேலாண்மை ஆய்வுத் திட்டம்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை,அரசுப்பள்ளி இளம் விஞ்ஞானி மாணவர்கள் கொல்கத்தாவில் நடைபெறும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் மாணவர்கள் அறிவியல் கிராமம் நிகழ்வில் ஆய்வுத் திட்டம் சர்ப்பித்தல் .
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம், புவி கிராமம் துறை, விஞ்ஞான பாரதி அமைப்பு இணைந்து நடத்தும் 5வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை பிஸ்வா பன்கலா கன்வென்ட்சன் சென்டர், அறிவியல் நகரம், கொல்கத்தாவில் நவம்பர் மாதம் 4 முதல் 8 தேதி வரை நடத்தி வருகிறது. இதில் உலக அளவில் 700 விஞ்ஞானிகள், 8,000 பள்ளி, கல்லூரி மாணவர்கள், 12,000 அறிவியல் ஆராய்ச்சி மாணவர் கள் , என 20 ,700 பங்கேற்பாளர்கள் 28 நிகழ்வுகளில் கலந்துக் கொண்டுள்ளனர்.
அதில் ஒரு நிகழ்வாக மாணவர்கள் அறிவியல் கிராமம் என்ற நிகழ்வில் கரூர் மக்களவைத் தொகுதி சார்பாக , கரூர் மாவட்டம், வெள்ளி யணை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும், 10ஆம் வகுப்பு சு.சுகி, 9 ஆம் வகுப்பு கோ.சுகந்த், கா. பசுபதி, சி. நவீன் குமார், மு.விஷ்ணு ஆகிய மாணவர்களும், வழிகாட்டி ஆசிரியராக பெ. தனபால் பட்டதாரி ஆசிரியரும் தேர்வு செய்யப்பட்டு, வெள்ளியணை பஞ்சாயத்து சார்ந்த 13 கிராமங்களின் மக்கள் தொகை, விவசாயம், அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தும், எதிர்கால திட்டமான அனைத்து கிராமங்ளுக்கும் சாலை, குடிநீர், கழிவறை , இளைஞர் வேலைவாய்ப்பு , போக்குவரத்து வசதி, மின் வசதி ஆகியவற்றுடன், ஒரு இலட்சம் மக்களின் ஒருமித்த குரலான வெள்ளியணை பெரிய குளத்திற்கு காவிரியிலிருந்து கடலில் கலக்கும் உபரி நீரை 23 கி.மீ தொலைவில் உள்ள வெள்ளியணைக்கு எடுத்து வரும் ஆய்வுத் திட்டம் ஒன்றை வெள்ளியணை ஊராட்சி, லந்தக் கோட்டை ஊராட்சி, தி.கூடலூர் ஊராட்சி , ஜெகதாபி ஊராட்சி, உப்பிடமங்கலம் பேருரட்சி, முனையனுர் ஊராட்சி, சேங்கல் ஊராட்சி, முத்து ரெங்கன் பட்டி ஊராட்சி, மஞ்சா நாயக்கன்பட்டி ஊராட்சி, அய்யர்மலை வட்டார பகுதிகள் சார்ந்த 90.716 மக்கள் பயனடையும் வகையில் 36, 878 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் ஆய்வுத் திட்டத்தை வெள்ளியணை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயர் திரு . வீ. இராமநாதன் ஐயா மற்றும் மேற்கண்ட ஊர் பொதுமக்கள் சார்பாக ஆய்வுத் திட்டம் தயாரித்து கொல்கத்தாவில் வெள்ளியணை, அரசுப் பள்ளி மாணவர்கள் இன்று 08.11.2019 சமர்ப்பிக்க உள்ளார்கள்.
சர்வதேச அறிவியல் திருவிழாவில் கலந்துக் கொள்ளும் 5 மாணவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் பெ.தனபால் ஆகியோருக்கு 02.11.2019 அன்று கரூர் பிரேம் மஹாலில் சிறப்பான வழியனுப்பும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி கட்டிடக் குழுத் தலைவர் உயர்திரு வீ, இராமநாதன் தலைமை வகித்தார், பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் , அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் (ஒய்வு) உயர்திரு சீனிவாசன் ஐயா அவர்கள்’.பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் செயலாளர் உயர்திரு. ஆ.கிருஷ்ணன். வெள்ளியணைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் உயர்திரு .வே.பொன்னுசாமி, முன்னாள் முதுகலை வணிகவியல் ஆசிரியர் உயர்திரு.அ. கருப்பண்ணன்,முன்னாள் முதுகலை வேதியியல் ஆசிரியர் உயர்திரு . பாலசுப்பிரமணி, கல்வியாளர்கள் உயர் திரு. விடியல் காமராஜ், ஆசிரியர் உயர்திரு. ரவி, ஜல்லிப்பட்டி உயர்திரு.ஞானசேகர், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் செல்லாண்டிபட்டி உயர்திரு முருகேசன் வெள்ளியணை ஊர் முக்கியஸ்தர் உயர்திரு அமிர்தலிங்கம் , மேட்டுப்பட்டி உயர் திரு .மதுரகவி உள்ளிட்ட 1981 – 87 ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர் கள், பெற்றோர்கள் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பினர்.பள்ளி முன்னாள் மாணவி திருமதி.கலாவதி வழியனுப்பும் விழா நிகழ்ச்சிக்கு அறுசுவை உணவுடன் ஏற்பாடு செய்திருந்தார்.
மேலும் கரூர் மாவட்டம், முதன்மைக் கல்வி அலுவலர் உயர்திரு . சி முத்துக்கிருஷ்ணன், கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் உயர் திரு ப.சிவராமன் , குளித்தலை கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் உயர்திரு . மு. கபீர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை ) மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் உயர்திரு மு.பத்தவச்சலம், கரூர் மாவட்டம் உயர்நிலை , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினார்கள்.
அனைவருக்கும் நன்றி.
கொல்கத்தாவிலிருந்து…..
கனவு ஆசிரியர்
பெ.தனபால்,
பட்டதாரி ஆசிரியர்,
அ.ஆ.மே.நி.பள்ளி,
வெள்ளியணை,
கரூர் மாவட்டம்.