தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக மதுரையில் உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக மதுரை கோச்சடையில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
பணியிட மாறுதல்களை பதவி உயர்வு மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்த வேண்டும்.
நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் மாநகர சுகாதார செவிலியர்களை பகுதி சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
பணி ஓய்வு பெறும் நாளில் பண பயன்களை வழங்கிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.
இந்நிகழ்விற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.டி துரைக்கண்ணன் தலைமை தாங்கினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார். பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் கே.கண்ணன் வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
இதில் பரமசிவன், ராஜூ, பாண்டிச்செல்வி, ரவிச்சந்திரன், பரமேஸ்வரி, இரா.தமிழ், கிருஷ்ணன் சின்னப்பாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முடிவில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் முருகையன் நிறைவுறை கூறினார்.
மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி மாவட்ட துணைச் செயலாளர் கே ஆர் நீலாராம் – கே.என்.கீதா ஆகியோர் சஷ்டிய பூர்த்தி விழா மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் அருகே உள்ள மதன கோபாலசாமி கோவிலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மத்திய தொகுதி மாவட்ட செயலாளர் வி.பி.மணி, வடக்கு தொகுதி மாவட்ட செயலாளர் அயூப்கான் உள்பட கட்சி நிர்வாகிகள், நண்பர்கள், குடும்பத்தினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா ஜோதிமாணிக்கம் கிராமத்தில் உள்ளது ஜோதிமாணிக்கம் பெருமாள் கோவில். இந்த கோவில் 1.000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
மேலும் மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் இந்த கோவிலுக்கு வந்து வணங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த கோயிலில் கவரா நாயுடு பங்காளிகள் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
மாதா மாதம் ஏகாதசி மற்றும் பௌர்ணமி அன்று பங்காளிகள் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த கோவிலுக்கு வந்து மனமுருகி வேண்டி சென்றால் நினைத்தது நடப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
தேனி மாவட்டம் T.சுப்புலாபுரம், திம்மராசநாயக்கனூர், ஆண்டிப்பட்டி, பொம்மிநாயக்கன் பட்டி, சேடப்பட்டி, ரெங்கசாமிப்பட்டி, மதுரை,திருப்பூர் போன்ற ஊர்களை சேர்ந்த ஜோதிமாணிக்கம் பெருமாள் சாமியை குலதெய்வமாக வழிபடும் பங்காளிகள் அனைவரும் ஒன்றிணைந்து புரட்டாசி அனைத்து சனிக்கிழமைகளிலும் சுவாமியை வழிபடுவதோடு பங்காளிகள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
இந்த புரட்டாசி 4 ஆம் சனிக்கிழமை அன்று நடந்த திருவிழாவில் 1.000 க்கும் மேற்பட்ட ஜோதி மாணிக்கம் பெருமாள் கோவில் பங்காளிகள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னதானத்தை டி.சுப்புலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி அழகுமணி செல்லப்பாண்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
கொடிக்குளம் கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அழகேந்திரன், வெற்றிவேல், கார்த்திகேயன், நாகராஜ், பாண்டி, என்.பெருமாள்ராஜ், ராதாகிருஷ்ணன், செல்லப்பாண்டி, கே.பெருமாள் ராஜா ரகுவரன், செல்லப்பாண்டி பிரதர்ஸ் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த கோவிலில் பரம்பரை பூசாரியாக ரவிச்சந்திரன் இருந்து வருகிறார்
புதுடில்லி: டில்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது.
5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் காங்., எம்.பி ராகுல், மூத்த தலைவர் சோனியா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது தேர்தலில் மீதமுள்ள வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் வகையில் ஆலோசனை நடந்ததாக தெரிகிறது. கார்கே விளக்கம்இது குறித்து கார்கே எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: காங்கிரசின் நல்லாட்சியால் சேமிப்பு, நிவாரணம், வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் மேம்பாடு கொண்ட மாநிலமாக ராஜஸ்தான் மாறியது. இன்று ராஜஸ்தானின் சட்டசபை தேர்தல் குறித்து மத்திய தேர்தல் குழுவின் முக்கிய கூட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் வேட்பாளர் பட்டியல் குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுமக்கள் மீண்டும் எங்களை ஆசீர்வதிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தெலங்கானா: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து, மணிப்பூர் விவகாரத்தில் அரசாங்கம் சரணடைந்த அதே வேளையில், நேரில் சென்று அமைதிப்படுத்துவது தமது பொறுப்பு என்பதை பிரதமர் மோடி உணராமல் இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் குறித்தும் விமர்சித்தார். இதுகுறித்து அவர் பேசியது பின்வருமாறு :
“இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாட்டிலுள்ள அனைத்து கலாச்சாரங்கள், மதங்கள், வரலாறுகள் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் கைப்பற்ற வேண்டும் என்று பாஜக துடிக்கிறது. நாட்டின் அடித்தளத்தை அமைக்க காங்கிரஸ் பாடுபட்டது.
மக்களுக்கு அதிகாரம் வழங்குவதே காங்கிரஸின் தொலைநோக்கு பார்வையாக இருக்கிறது. ஆனால், பாஜக – ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் வேறாக இருக்கிறது. நாட்டின் ஒத்துமொத்த அதிகாரத்தையும் கைப்பற்ற முயற்சிக்கிறது. டெல்லியில் அதிகாரத்தை மையப்படுத்தி அனைத்து முடிவுகளையும் எடுக்க நினைக்கிறது. நாங்கள் இந்தியா என்ற எண்ணத்தை பாதுகாப்போம்.
5 மாநில சட்டப்பேரவை தேர்தலிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும். பிரதேசத்தில் ஊழல் நிறைந்த பாஜக அரசை அகற்றுவோம். தெலுங்கானாவில் மகத்தான வெற்றியை எங்கள் 6 தேர்தல் வாக்குறுதிகள் உறுதி செய்யும். நமது பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை என்று இன்னும் புரியவில்லை. ஒரு மாநிலம் 4 மாதங்களுக்கும் மேலாக எரிகிறது. ஆனால் அதன் மீது அரசுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அரசாங்கம் சரணடைந்த அதே வேளையில், நேரில் சென்று அமைதிப்படுத்துவது தமது பொறுப்பு என்பதை பிரதமர் உணராமல் இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
எனது எம்.பி பதவி பா.ஜ.க.வால் பறிக்கப்பட்டபோது, எனக்காக மிசோரம் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். வயதானவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை அதிகரித்தல், சிலிண்டர் விலை குறைத்தல் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளோம். மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.” என்றார்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக பா.ஜ.கவின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ராகுல், “அமித்ஷா மகன் என்ன செய்கிறார். சரியாக சொல்லுங்கள் பார்ப்போம். அவர்தான் இந்திய கிரிக்கெட்டை நடத்துகிறார். ராஜ்நாத் சிங் மகன் என்ன செய்கிறார்? அனுராக் தாக்கூர் எப்படி முக்கியத்துவம் பெற்றார். இதனை நீங்கள் பாஜக தலைவர்களை நோக்கி கேளுங்கள்.” என்றார்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதற்காகவும், இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்காக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த அதிமுகவுக்கு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக நன்றி தெரிவிக்கும் விதமாக மாநில தலைவர் கே.எம். சரீப் அறிவுத்தலின்படி, அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களை மதுரையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் ஜலால் முகமது தலைமையில் சந்தித்து தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.
உடன் மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் வில்லாபுரம் ராஜா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்திவிநாயகர் பாண்டியன், மாவட்ட தலைவர் எம்.எஸ்.கே.மல்லன், கவுன்சிலர் மாணிக்கம், இளைஞர் பாசறை செந்தில்குமார் உள்ளனர்.
இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் சையது யூசுப், மாவட்ட பொருளாளர் முபாரக் அலி,மாவட்ட துணைச் செயலாளர் மேத்தா, மாவட்ட இளைஞரணி செயலாளர் மோகன்குமார்,கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாம் உசேன் பங்கேற்றனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆணைக்கிணங்க, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவர்களின் பரிந்துரையின்படி, தலைமை கழக பேச்சாளராக நியமனம் செய்யப்பட்ட எம்.எஸ்.கே.மல்லன் அவர்களுக்கு, அண்ணா தொழிற்சங்க மதுரை மாவட்ட செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன் அவர்களின் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
உடன் நிர்வாகிகள் அனுப்பானடி பாலகுமார், உசிலை தவசி, ராஜசேகர், பூக்கடை முருகன், பி.ஆர்.சி மகாலிங்கம், வழக்கறிஞர் முருகராஜ், பி.ஆர்.சி.திருமுருகன், விஜயபாண்டி, பி.ஆர்.சி.சுந்தரமூர்த்தி, சதீஷ்குமார், பி.ஆர்.சி.ராஜாராம், விக்னேஷ்வரன், லோகேஷ்,ஆர்.எம்.சேகர், விளாங்குடி முத்துமுருகன்,பாண்டுரங்கன், அரவிந்த் ஆகியோர் உள்ளனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்