தேவர் ஜெயந்தி விழாவிற்கு பசும்பொன்னில் வீர அஞ்சலி செலுத்த ரத்தம் கையெழுத்திட்டு உறவுகளை அழைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்
மதுரை,அக்.26-
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜையை முன்னிட்டு வீர அஞ்சலி செலுத்த முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கழக தொண்டர்களுடன் ரத்தத்தில் கையெழுத்து போட்டு உறவுகளை அழைத்தார். அதை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட கழக தொண்டர்களும் ரத்தத்தில் கையெழுத்து போட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் :-ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜையை முன்னிட்டு ரத்த சொந்தங்களை அழைக்கும் விதமாக இரத்தத்தில் கையெழுத்திட்டு குருபூஜைக்கு அழைக்கும் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைத்திருப்பதாகவும்,
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆதிதிராவிட மக்களை ஆலய பிரவேசம் செய்ய வைத்தார் என்றும்
தெய்வ திருமகனாருக்கு விரோதிகள் என்று யாரும் கிடையாது துரோகிகள் உண்டு. இந்திய தேசத்திற்காக, நாட்டு மக்களுக்காக, குற்ற பரம்பரைச் சட்டத்தை ஒழிப்பதற்காக நான்காயிரம் நாட்கள் அதாவது வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கு சிறைச்சாலையிலே காலம் கழித்தவர். ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் திருமகனார்.
முக்குலத்தோர் சமுதாயத்தில் பிறந்தவர்கள் காவல் நிலையத்தில் கையெழுத்திடும் சட்டம் அது திருமணம் என்றாலும் சரி தனது தாய் தந்தை இறந்த சாவு வீடு என்றாலும் சரி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற சட்டம் குற்றப் பரம்பரை சட்டத்தை ராம்நாட்டில் ஒழித்து வீர வரலாறு படைத்துள்ளார் தெய்வத்திருமகனார்.
திருமகனாரின் ஜெயந்தி விழாவானது 28ஆம் தேதி ஆன்மீக விழாவாகவும் 29ஆம் தேதி அரசியல் விழாவாகவும் 30ஆம் தேதி அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நந்தனத்தில் வெண்கல திருவுருவ சிலையை அமைத்தார்கள். அவரின் வழித்தோன்றலாக எடப்பாடியார் மதுரை கோரிப்பாளையம் மற்றும் உசிலம்பட்டியில் உள்ள தெய்வ திருமகனார் சிலைக்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தெய்வீகத் திருமகனாரின் திருக்கோவிலுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 13.5 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன்னில் உள்ள தெய்வீகத் திருமகனார் திருக்கோவிலுக்கு எடப்பாடியாரை நேரில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்த மேற்கு மாவட்ட கழகம் சார்பில் ரத்த சொந்தங்களை ரத்த கையெழுத்திட்டு அழைப்பு விடுக்கும் விதமாக இந்த ரத்த கையெழுத்து இயக்கத்தை துவக்கியுள்ளோம்.
ரத்தக் கையெழுத்து முகாம் இன்று (நேற்று) துவக்கப்பட்டுள்ளது அனைவரிடத்திலும் இந்த கையெழுத்தைப் பெற்று அவரிடத்தில் கொடுத்து நேரில் அழைப்பு விடுக்க இருக்கிறோம்.
சாதி சமய வேறுபாடு இன்றி அனைவரும் அந்த குருபூஜைக்கு வர வேண்டும் என்றார்.
நீட் தொடர்பான கேள்விக்கு:
போகாத ஊருக்கு வழி சொல்லுகிறார் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..
செங்கல்லை காட்டிய உதயநிதி தற்போது முட்டையை காட்டுகிறாரே என்ற கேள்விக்கு
இரண்டரை ஆண்டுக் காலம் திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கிற மதிப்பு முட்டை என்றார்.
இந்த ரத்த கையெழுத்து முகாமில் பேரவை இணை செயலாளர் இளங்கோவன், செயலாளர் வெற்றிவேல், சட்டமன்ற உறுப்பினர் தவசி தமிழரசன், அதிமுக தொண்டர்கள் மற்றும் பாரதிய பார்வர்ட் பிளாக் செயலாளர் முருகன் ஜி உள்ளிட்டோர் ரத்த கையெழுத்து போட்டு முகாமை துவக்கி வைத்தனர்.