Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் (page 42)

செய்திகள்

All News

கடலூரில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா

கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மை கல்லூரியின் கருத்தரங்கு கலையரங்கத்தில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா, தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் 2023 மற்றும் உலக நுகர்வோர் உரிமை தினம் 2024 விழா நடைபெற்றது.


நிகழ்ச்சியில் டாக்டர் G. தமிழ்ச்செல்வி பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் -குடிமக்கள் நுகர்வோர் மன்றம், வரவேற்புரை வழங்கினார்.

விழா தலைமை மற்றும் முதன்மை உறை கல்லூரி முதல்வர் டாக்டர். G. நிர்மலா வழங்கினார்.தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நல சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஃபெட்காட் மாநிலத் துணைத் தலைவருமான சு.இராசமோகன் முதன்மை உரை நிகழ்த்தினார்.

சிறப்புரை E.அன்பு எத்திராஜுலு இயக்குனர் -ஃபெட்காட் வழங்கினார். T.முருகன் அரசு வழக்கறிஞர் மற்றும் இயக்குனர் சட்டம் -ஃபெட்காட்,P. இராமகிருஷ்ணன் கடலூர் மாவட்ட செயலாளர்- ஃபெட்காட், K.திருமுருகன் இயக்குனர் (வேளாண் துறை) – ஃபெட்காட்,T.E.சித்ரகலா இயக்குனர் உணவு பாதுகாப்பு- ஃபெட்காட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில் ஏராளமான மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


.

காங்கிரஸின் உத்தரவாதங்கள் நாட்டு மக்களின் வாழ்வில் செழிப்பைக் கொண்டுவரும் உறுதி!

May be an image of 2 people

நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் எங்களது 5 நியாயங்கள் மற்றும் 25 உத்தரவாதங்கள் உள்ளிட்ட கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து ஆழமான விவாதம் நடைபெற்றது.

இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் மற்றும் இந்திய ஒற்றுமைப் பயணம் மூலம், தொடர்ந்து கிராமம் கிராமம், தெருவுக்கு தெரு மக்கள் மத்தியில் சென்று ‘நாட்டின் குரல்’ கேட்டோம்.

மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் நாம் நெருக்கமாக அறிந்து புரிந்துகொண்டோம்.

அதனால்தான் எங்கள் அறிக்கை மற்றும் உத்தரவாதங்கள் வெறும் ஆவணங்கள் அல்ல, ஆனால் கோடிக்கணக்கான நாட்டு மக்களுடனான உரையாடலில் இருந்து பெறப்பட்ட ஒரு பாதை வரைபடமாகும்,

இது வேலைவாய்ப்பு புரட்சி மற்றும் அதிகாரம் பெற்ற பங்கேற்பு மூலம் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவின் வாழ்க்கையையும் மாற்றப் போகிறது.

5 நியாய உறுதிமொழியுடன் விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் சென்று மக்களின் வாழ்க்கை தொடர்பான உண்மைப் பிரச்சினைகளை நேரடியாகக் கொண்டு தேர்தலில் போட்டியிடுவோம்.

காங்கிரஸின் உத்தரவாதங்கள் நாட்டு மக்களின் வாழ்வில் செழிப்பைக் கொண்டுவரும் உறுதி.

– மக்கள் தலைவர் திரு Rahul Gandhi

தமிழ்நாட்டில் காலை 7 முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் காலை 7 முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு

ஏப்ரல் 19இல் தமிழ்நாடு, புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேட்பு மனுவை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் யாருக்கும் அனுமதியில்லை. வேட்பாளருடன் 5 நபர்கள் மட்டுமே வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகிற 27 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 19இல் தமிழ்நாடு, புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மணிப்பூர், மேகாலயா மற்றும் நாகாலந்து ஆகிய மாநிலங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் ஒருசில தொகுதிகளில் வாக்குப்பதிவு 3 மணியுடன் நிறைவடைகிறது.

சென்னையில் உலக சிலம்ப சம்மேளனம் மற்றும் மலேசியன் சிலம்ப அசோசியேசன் இணைந்து நடத்திய உலக நடுவர்கள் பயிற்சி முகாம்..!

உலக சிலம்ப சம்மேளனம் மற்றும் மலேசியன் சிலம்ப அசோசியேசன் இணைந்து நடத்திய உலக நடுவர்கள் பயிற்சி முகாம் சென்னையில் வேர்ல்ட் யூனிவர்சிட்டி சர்வீஸ் சென்டரில் 15 to 17-03-2024 தேதி வரை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக TAFISA தேசியத் தலைவர் SARAF இந்த நடுவர் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து நடுவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வாழ்த்தினார்.

இதில் International Silambam Fedaration, Chairman சிவகுமார், தலைவர் சந்திரன், செயலாளர் டாக்டர் சுரேஷ் மற்றும் Technical Chairman ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு 60 மேற்பட்ட நடுவர்களுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்பட்டது .


மேலும் உலக சிலம்ப விளையாட்டு சங்கத்தை சார்ந்தவர்கள் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் தலைவர் முத்துராமன் ஜி அவர்களை நேரில் சந்தித்து உலக சிலம்ப விளையாட்டு போட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

மேலும் தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் இருந்து வரக்கூடிய குழந்தைகளை தேர்வு செய்து இப்போட்டியில் பங்கு பெற செய்ய வேண்டுமாய் வேண்டுகோள் விடுத்தனர்.
அவருடன் தமிழ்நாடு சிலம்பாட்ட கழக நிர்வாகிகள் செயலாளர்கள் நடுவர் பெருமக்கள் பலர் உடன் இருந்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர், இலக்கியச் செல்வர் டாக்டர். குமரி அனந்தன் அவர்களின் 92-வது பிறந்தநாள் விழா நிகழ்வில்….

Image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர், இலக்கியச் செல்வர் டாக்டர். குமரி அனந்தன் அவர்களின் 92-வது பிறந்தநாள் விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு. கே.வீ. தங்கபாலு, திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன், எம்.எல்.ஏ., திரு. சு. திருநாவுக்கரசர், எம்.பி., மற்றும் திரு. இ.எம். சுதர்சன நாச்சியப்பன், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ், எம்.பி., டாக்டர் ரூபி ஆர். மனோகரன், எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஜே.எம்.எச். ஹசன் மௌலானா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திரு. இ. எர்ணஸ்ட் பால் தொகுப்புரை நன்றியுரை நிகழ்த்தினர். இதில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள், மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.

இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி வேட்பாளர் திரு சச்சிதானந்தம் அவர்களுக்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாழ்த்து…

இன்று இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி வேட்பாளர் திரு சச்சிதானந்தம் அவர்களுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாழ்த்து தெரிவித்தோம். நகர தலைவர் முத்துவிஜயன் , நகர கவுன்சிலர் பத்மினி முருகானந்தம், நகர கவுன்சிலர் மகாலட்சுமி மாசிலாமணி, நகர மேற்கு மண்டல தலைவர் வீரமணி, மாவட்ட சமூக ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் பாலதண்டபாணி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் நேரு, சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பாலமுருகன் மற்றும் கலந்து கொண்ட அத்தனை காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் நன்றி என்று பழனி K.குணசேகரன் முன்னால் காங்கிரஸ் தொழிற்சங்க மாநில செயலாளர் தெரிவித்தார்.

மதுரை மத்திய சிறையில் ஆண், மற்றும் பெண் சிறைவாசிகளுக்கு சிறு தானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி..!

மதுரை மத்திய சிறையில் நபார்டு தேசிய வங்கி நிதி உதவியுடன்,சாஜர் அறக்கட்டளை சார்பாக ஆண் மற்றும் பெண் தண்டனை சிறைவாசிகளுக்கு சிறு தானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் 30 நாள் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கப்பட்டது.

மதுரை மத்திய சிறையில் உள்ள ஆண் மற்றும் பெண் தண்டனை சிறைவாசிகளுக்கு பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள் அவர்கள் சிறையில் உள்ள போதே வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் சிறுதானிய உணவு பொருட்கள் தயார் செய்யப்படும் பயிற்சி வகுப்பு மதுரை மத்திய சிறையில் உள்ள ஆண் மற்றும் பெண் தண்டனை சிறைவாசிகளுக்கு நபார்டு தேசிய வங்கி நிதி உதவியுடன், சாஜர் அறக்கட்டளை சார்பாக 30 நாள் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

அதன் துவக்க நாளான நேற்று மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் மற்றும் சாஜர் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ஜாஸ்மின் ராஜ்குமார் மற்றும் நபார்டு வங்கி துணை பொது மேலாளர் சக்திபாலன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

கே.ஆர்.எஸ் மருத்துவமனை H.R.திவ்யா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் சாஜர் டிரஸ்ட் சி.இ.ஓ ஆர்.நசீம்பானு நன்றி கூறினார்.

இந்த பயிற்சி வகுப்பில் மதுரை மத்திய சிறை, பெண்கள் தனி சிறை சிறைவாசிகள், தலா 25 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.

இதில் சிறுதானிய சத்துமாவு, கஞ்சி மிக்ஸ், சப்பாத்தி மிக்ஸ், அடை தோசை, மிக்ஸ், பணியாரம் மிக்ஸ், குதிரைவாலி சேவ், ஜிலேபி, குலோப் ஜாமூன், திணை அதிரசம்,வரகு அரிசி முறுக்கு, கவுனி அரிசி அல்வா, கட்லெட் ஆகியவை தயார் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பயிற்சியின் போது சிறுதானிய மூலம் தயார் செய்யப்படும் இனிப்பு கார வகைகள் உணவு வகைகள் ஆகியவை தயார் செய்யும் முறைகள் மற்றும் சந்தைப்படுத்தும் முறைகள் குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் இவர்கள் மூலம் தயார் செய்யப்படும் சிறுதானிய உணவுப் பொருட்கள் மதுரை மத்திய சிறையில் செயல்பட்டு வரும் சிறை சந்தையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வைக்கப்படும் என சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மார்ச் 22 முதல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

மார்ச் 22 முதல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

திருச்சியில் மார்ச் 22ஆம் தேதி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜுன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக இறுதி செய்துள்ளது.

இதனிடையே வேட்பு மனுத்தாக்கல் முடிந்து மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் மார்ச் 30-ம் தேதி வெளியாக உள்ளது. அதன் பிறகு தேர்தலுக்கு 17 நாள்கள் மட்டுமே உள்ளன.மார்ச் 24 முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் இபிஎஸ்!

இதனை கருத்தில் கொண்டு மார்ச் 22 முதல், முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி அருகே சிறுகனூரில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து சொந்த ஊரான திருவாரூரில் 23-ம் தேதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேச உள்ளார்.

பின்னர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES