Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் (page 66)

செய்திகள்

All News

வாயை திறந்தாலே பொய்! வெட்கமே இல்லையா? ஆளுநரை விளாசிய டி.ஆர்.பாலு!!

வாயை திறந்தாலே பொய்! வெட்கமே இல்லையா? ஆளுநரை விளாசிய டி.ஆர்.பாலு!!

திருச்சி: திருச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சுதந்திர போராட்ட தியாகிகள் மக்கள் நினைவில் இருந்து அகற்ற தமிழக அரசு முயற்சி செய்கிறது எனவும் காந்தியின் உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகி தமிழகத்தில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி சங்க தலைவராக மாற்றி இருப்பார்கள் எனவும் தியாகிகளை சாதி தலைவர்களாக அடைய படுத்தி மக்களை ஒன்று சேர விடாமல் தடுக்கின்றனர் எனவும் பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கு திமுக தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைந்த தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்குச் சட்டமுன்வடிவு உள்ளிட்ட பல மசோதாக்கள் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறது.

அந்தச் சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளுநர் ஆர்.என் ரவி, தன் பொறுப்பை நிறைவேற்றாமல், மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராகச் சுற்றி, நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருவது, அரசியல் சாசனத்திற்கு அவர் செய்கின்ற துரோகம்!

ஆளுநர் பொறுப்பேற்பவர்கள் அரசியல்வாதி போல செயல்படவோ, பரப்புரைச் செய்யவோ மாட்டார்கள். அந்த மரபுக்கு மாறாக, அப்பட்டமான ஆர்எஸ்எஸ் பிரதிநிதியாக, ஒன்றிய பாஜக அரசின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என் ரவி செயல்படுவதோடு, தமிழ்நாட்டின் பண்பாடு, வரலாறு, நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் உயர்வு இவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து உளறிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு என்று சொல்லாதீர்கள், தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று உளறினார். சமஸ்கிருதத்தை முன்வைத்து தமிழைப் பின் தள்ளினார். வேதங்களைப் பார்த்து திருக்குறள் எழுதப்பட்டதாகச் சொன்னார். எவ்வித ஆதாரமுமின்றி இப்படி பச்சைப் பொய்களைச் சொல்வதுடன், திராவிடம் என்ற கருத்தியல் பற்றி அவர் உளறிக் கொட்டுவது ஒவ்வொரு மேடையிலும் வழக்கமாக இருக்கிறது.

வெள்ளையரை எதிர்த்து வீரப் போர் புரிந்து, உயிரைத் துச்சமென நினைத்து, மரணத்தை முத்தமிட்ட மாவீரர்கள் மருது சகோதரர்களின் தியாகத்தை தமிழ்நாடு அரசு போற்றிவரும் நிலையில், மருதிருவர் விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ரவி பச்சைப் பொய்களை கொட்டி கடை விரித்திருக்கிறார். தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றைத் தேடிப் பார்த்தாராம். அவருக்கு எதுவுமே கிடைக்கவில்லையாம். தமிழ்நாடு அரசு தியாகிகளை மறந்துவிட்டதாம். பாஜக தலைவர்கள் எப்படி அன்றாடம் பொய் பேசி, வதந்தி பரப்புகிறார்களோ, அவர்களுக்குப் போட்டியாக, தமிழ்நாட்டின் பாஜக தலைவராக வேண்டும் என்ற ஆசையில் ஆளுநரும் பொய்யாகவே பேசுகிறார்.

பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், வீரன் அழகுமுத்துக்கோன், தீரன் சின்னமலை, மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி, திருப்பூர் குமரன் போன்ற எண்ணற்ற தியாகிகளை என்றென்றும் மதித்துப் போற்றுகின்ற அரசாகத் தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது. மருதுபாண்டியர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றை சித்தரிக்கும் ஊர்திகளை டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் சேர்க்க முடியாது என மறுத்து மத்திய பாஜக அரசு திருப்பி அனுப்பிய போது இந்த ஆளுநர் ரவி எங்கே போனார்? அந்த ஊர்திகளை எல்லாம் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க வைத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஓரணியில் நின்று அந்த ஊர்திகளை வரவேற்ற காட்சி ஆளுநர் மாளிகையில் அமர்ந்திருந்த ரவி மறந்து விட்டரா? அலுவலகத்தில் தேசியக் கொடியையே ஏற்றாமல் இருந்த ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக பவனி வரும் ரவி தனது திருவாயை ஏன் அப்போது திறக்கவில்லை?

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, இந்திய விடுதலையின் வெள்ளிவிழா ஆண்டில் விடுதலைக்காகப் பாடுபட்ட தமிழ்நாட்டுத் தலைவர்களில் அன்றைக்கு உயிருடன் இருந்த மூத்த தலைவர்களின் வீடு தேடிச் சென்று அவர்களுக்கு தாமிரப் பட்டயத்தை வழங்கினார் கலைஞர். தமிழ்நாடு முழுவதும் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு மதிப்பூதியம் (பென்ஷன்) வழங்கப்பட்டது. தற்போது அந்த மதிப்பூதியம் மாதம் 20,000 உயர்த்தி வழங்குகிறது திராவிட மாடல் அரசு. அது மட்டுமல்ல, விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், மாதம் 10,000 ரூபாய் என்பதிலிருந்து 11,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 15 அன்று விடுதலை நாளில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றியபோது முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி இருக்கிறார்.

விடுதலை நாள் உரையில் இந்திய விடுதலையில் தமிழ்நாட்டின் பங்கு முதன்மையானது, முக்கியமானது என்பதை மிகத் தெளிவாகப் பட்டியலிட்டுக் குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர்.விடுதலை வீரர்களைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல.

விடுதலைப் போராட்ட வீரர்களை நாம் ஏன் இந்தளவுக்குப் போற்றுகிறோம் என்றால் தமிழ்நாடுதான் விடுதலைப் போராட்டத்துக்கான விதையை முதலில் விதைத்தது. விடுதலை தாகத்தில் விடுதலை வேகத்தில், நாட்டுப்பற்றில் நம் தமிழ் இனம் இந்தியாவில் உள்ள எந்த இனத்திற்கும் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் முழக்கங்கள் வீரம் விளைந்த தமிழ் மண்ணில் தோன்றியவைதான் என்பதை நாம் பெருமிதத்தோடு நினைவு கூரமுடியும் என்று விடுதலை நாள் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் உரையாற்றினார்.

முதலமைச்சர் தமிழில் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை கேட்டு வாங்கிப் படித்திருந்தால் ஆளுநர் ரவிக்கு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாட்டு வீரர்களைப் பற்றிய அரிச்சுவடியாவது தெரிந்திருக்கும். ஆதாரமற்ற பொய்களை வாட்ஸ்அப் வதந்திகள் போல பரப்புவதையாவது நிறுத்திக் கொண்டிருக்கலாம். பாஜகவின் ஊதுகுழலாகப் பச்சைப் பொய்களை மட்டுமே பேசும் ஆளுநர் ரவியின் அடிவயிற்று எரிச்சல் திராவிடம் என்ற சொல். அந்த சொல் நிலத்தைக் குறிக்கும், இனத்தைக் குறிக்கும். மொழிக்குடும்பத்தைக் குறிக்கும். இந்தியா முழுவதும் திராவிட மாடல் பற்றிப் பேசப்படுகிறது.

அந்த வயிற்றெரிச்சலில், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிய இராபர்ட் கால்டுவெல் அதிகம் படிக்காதவர் என்று விமர்சித்திருக்கிறார். கால்டுவெல் என்ன படித்தார் என்பதைவிட எத்தகைய ஆராய்ச்சி மேற்கொண்டார், அதன் விளைவு என்ன என்பதைத்தான் கவனிக்க வேண்டும். ஒருவரின் செயலும் அதன் விளைவும்தான் மக்களிடம் செல்வாக்கைத் தரும். ஆளுநர் ரவியின் பார்வைப்படி, அவர் பெருந்தலைவர் காமராசரையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் PHd ஆய்வுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட தலைப்புகள் குறிப்பாக திராவிடத்தைப் பற்றிய தலைப்புகள் அவருக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பித்தம் ஏறச் செய்திருக்கிறது. விடுதலைப் போராட்டத்தைப் பற்றி ஆய்வுகள் இல்லையாம். மகாகவி பாரதியைப் பற்றி, வ.உசி. பற்றி, விடுதலைப்போரில் தமிழ்நாட்டின் பங்களிப்பு பற்றி ஏராளமான ஆய்வுகள் உண்டு. பி.ஹெச்.டியாக மட்டுமல்ல, வெகுமக்கள் வாங்கிப் படிக்கக்கூடிய புத்தகங்களாகப் பல பதிப்புகள் வெளியாகியிருக்கின்றன. அதுபோலவே, திராவிட இயக்கப் படைப்புகள் – படைப்பாளிகள் பற்றிய ஆய்வுகளும் நிறைந்திருக்கின்றன. இதைக் கண்டு ஆளுநர் வயிறெரிந்திருக்கிறார்.

விடுதலை நாளை துக்க நாளாக அறிவித்தவர்களைக் கொண்டாடுகிறார்கள் என்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளார் ஆளுநர் ரவி. துக்க நாள் என்று தந்தை பெரியாரும், இன்ப நாள் என்று பேரறிஞர் அண்ணாவும் ஒரே இயக்கத்தில் தங்கள் உள்ளத்துக் கருத்துகளை வெளியிட்டார்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் வரலாறு.

விடுதலையின் பயன் யாருக்குக் கிடைக்கும் என்பதை விளக்கிய பெரியார், ஆளுநர் ஆர்.என்.ரவி போன்ற பிற்போக்குவாத பத்தாம்பசலிகளின் கைகளில் அதிகாரம் சிக்கி நாசமாகும் என தொலைநோக்குப் பார்வையுடன் சொன்னார். அந்த தந்தைப் பெரியார்தான், மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது, இந்த நாட்டுக்கு ‘காந்தி தேசம்’ என்று பெயர் வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில், விடுதலை நாட்டின் முதல் பயங்கரவாதச் செயலாக, மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றது கொடியவன் கோட்சே கும்பல். அந்த கோட்சேவையும் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றக் கூண்டில் ஏறியவர்களையும் கொண்டாடுகிற ‘பண்பாட்டை’கடைப்பிடிக்கும் இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மேடையிலும் திருவாய் மலர்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் கோப்புகளிலும், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களிலும் கையெழுத்திடாமல் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஊர்சுற்றித் திரியும் ஆளுநர் ரவிதான் அந்த குறளுக்குப் பொருத்தமானவர்! தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சுகம் அனுபவித்துக் கொண்டு – தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வதை கைவிட்டு- திருக்குறளுக்கு ஏற்ப நடக்க வேண்டும்! இல்லையென்றால் ஆளுநர் பதவியை விட்டு விலகி- அரசியல்வாதியாக- ஏன் பா.ஜ.க.வின் தலைவராகவோ- ஆர்.எஸ்.எஸ்.-ஸின் தலைவராக ஆகட்டும்! என சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.

ரூ.7,500,00,00,00,000 காணவில்லை.! மோடியோ, BJPயோ.. ஒரு வார்த்தை சொல்லல. பரபரப்பு குண்டை போட்ட உதயநிதி.!!

ரூ.7,500,00,00,00,000 காணவில்லை.! மோடியோ, BJPயோ.. ஒரு வார்த்தை சொல்லல. பரபரப்பு குண்டை போட்ட உதயநிதி.!!

சென்னை: திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , ஹிண்டர்பெர்க் என்கின்ற ஆய்வு செய்கின்ற அமெரிக்க நிறுவனம் அவர்கள், ஆய்வு அறிக்கை வெளியிட்டார்கள்.

ஒரு தனியார் நிறுவனம் ஒன்பது வருஷத்துல எப்படி இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தது ? அதானி அவர்கள் இப்போது உலக பணக்காரர் பட்டியல்ல இரண்டாவது இடம். இதெல்லாம் ஹிண்டர்பெர்க் நிறுவனம் அந்த ஆய்வில் கேள்வியாக கேட்டாங்க.

ஆனால் இதுவரைக்கும் திரு மோடி அவர்களோ, பாஜகவோ அதை பற்றி வாய் திறக்கவே இல்லை. சமீபத்தில் லண்டனில் இருந்து வருகின்ற பைனான்சியல் டைம்ஸ் இன்னொரு முறைகேட்டையும் வெளிபடுத்தி உள்ளது. அதாவது இன்றைக்கு நாட்டின் பல இடங்களில் மின்சார கட்டணம் உயர்ந்ததற்கு அதானி தான் காரணம் என பைனான்சியல் டைம்ஸ் ஆதாரத்தோடு கட்டுரை எழுதியுள்ளது. அதுமட்டுமல்ல சமீபத்தில் வந்த சிஏஜி அறிக்கை.

இந்த அமைப்போட வேலை என்னன்னா…. மத்திய அரசு, மாநில அரசு என்கின்ற செலவுகளை தணிக்கை செய்வது. CAG ரிப்போர்ட் படி ஒன்பது வருஷத்துல 7.50 லட்சம் கோடி ரூபாய்க்கு கணக்கே கிடையாது. ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு எங்க போச்சுன்னு தெரியல ? ஆயுஷ்மான் பாரத் அப்படின்னு ஒரு திட்டம். அதுல 88 ஆயிரம் இறந்தவர்களுக்கு மருத்துவ காப்பீடு செஞ்சிருக்காங்க.

துவாரக் மாதா என்ற திட்டம். அதுல ஒரு கிலோ மீட்டர் ரோடு போடுவதற்கு 250 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறதா ? இந்த CAG ரிப்போர்ட் சொல்லுது. இதையெல்லாம் தொடர்ந்து நம்முடைய தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் வாய் திறக்க வழியில்லை. அது மட்டுமல்ல இந்த ஒன்பது ஆண்டுகள்ல 12 லட்சம் கோடி மதிப்பிலான கார்ப்பரேட் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க கார்ப்பரேட்களுக்கான ஆட்சி ஒன்றிய பாஜக ஆட்சி என விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி தான் NO 1 லீடர்; திருநாவுக்கரசர் எம்.பி பேட்டி..!!

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி தான் NO 1 லீடர்; திருநாவுக்கரசர் எம்.பி பேட்டி..!!

சிதம்பரம் தமிழக காங்கிரஸ் பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார். உங்களுக்கு மாநில தலைவர் பதவி கொடுத்தால் ஏத்துப்பீங்களா என்ற கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர் எம்.பி,

யாராவது பதவி கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வாங்க. அது கார்த்திகா இருந்தா என்ன ? நானா இருந்தா சிதம்பரமா இருந்தா என்ன ? தங்கபாலோ, இளங்கோவனோ…. யாரா இருந்தாலும் என்ன ? கட்சியில இருக்க கூடிய முக்கியஸ்தர்கள் நிறைய பேர் இருக்கிறாங்க. நிறைய பேர் கேட்குறாங்க, விரும்புறாங்க…

ஒரு மாநில தலைவரா இருந்து செயல்படுவது என்பது ஒரு கட்சியில…. மாநிலத்துக்கு அதுதான் ஒரு முக்கியமான போஸ்ட்… அது தான் பெரிய போஸ்ட்…. அந்த பெரிய போஸ்ட்ல தலைவரா இருந்து செயல்படுவது… காங்கிரஸ் தலைவர் ராமையா இருந்திருக்காங்க… கக்கன் இருந்திருக்கிறார்… காமராஜர் எல்லாம் பல வருஷம் வந்திருக்காரு….

தலைவர்கள் என்பது ஒரு கௌரவமான ஒரு பதவி, ஒரு பொறுப்பு. செயல்படுவதற்கு ஒரு வாய்ப்பு.. அதனால அந்த வாய்ப்பில் யாருக்கு கிடைத்தாலும் சந்தோசமா தான் பார்ப்பார்கள்… மாநில தலைவர் பதவியை கேட்பதற்கு என்ன இருக்கின்றது ? எனக்கு கொடு… உனக்கு கொடு.. என்று கேட்கிறது எல்லாம் கிடையாது… அது அவங்களுக்கு தெரியும்…

காங்கிரஸ் கட்சி கேக்குறதுனாலயே கிடைக்காது.. அதனால மாநில தலைவர் பொறுப்பு கேட்டவுங்களுக்கு தான் கொடுப்பாங்க… தட்டினவங்களுக்கு தான் கொடுப்பாங்கன்னு கிடையாது. தலைமைக்கு தெரியும்… மாநில தலைவராக போடும் போது பல்வேறு ரொட்டேஷன்…. பல்வேறு ஆலோசனைகள் பண்ணி போடுவாங்க…. ஒரு ஆல் இந்தியா பாட்டில் எந்த மாநிலம் என வைப்பாங்க… ஏரியா செல்வாக்கு…. சமுதாய செல்வாக்கு… இந்த மாதிரி மாநிலத்துக்கு மாநிலம் பார்த்து நிர்வாகிகளை போடுவாங்க.

தமிழ்நாட்டில் ஏற்கனவே யார் யார் இருந்திருக்கா ? இப்ப யாரை போடணும் ? அவங்கள திருப்பி போடணுமா ? புதுசா போடணுமா ? மிடில் ஏஜ்ல போடணுமா ? அல்லது எக்ஸ்பீரியன்ஸ் ஆளை போடணுமா ? யங்ஸ்டரை போடணுமா ? என பல்வேறு ஆலோசனை செய்து தலைமை போடுவாங்க. போடும்போது உங்களுக்கெல்லாம் தெரியும். பிஜேபில பொன் ராதாகிருஷ்ணன் வந்திருக்காரு… சி.பி ராதாகிருஷ்ணன் இருக்கிறார்.

இப்போ இளைஞருக்கு ஒரு சான்ஸ் கொடுத்து இருக்காங்க ? ராகுல் காந்தி இளைஞர் தான்.. அகில இந்திய தலைவராக இருக்காரு. அவரு தான் NO 1 கட்சியில்… அதனால் தமிழக காங்கிரஸில் இளைஞரை தலைவராக போடுவதற்கு காங்கிரஸ் மத்திய தலைமை கருதினால் போடுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. இளைஞரை போட்டாலும் சரி, இல்லை எக்ஸ்பீரியன்ஸ் ஆட்களை போட்டாலும் சரி, யாரை போட்டாலும் எல்லாரும் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்தார்.

மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.

மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222 வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவரும், 85 வது வார்டு அதிமுக வட்டக்கழக செயலாளருமான கே.ஜெயக்குமார், மாநிலத் துணைத் தலைவர்கள் மணிமாறன், சுப்பையா, மாநில செயலாளர்கள் மதுரை கருணாநிதி, சுடலை, செல்லையா மற்றும் அதிமுக இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் வில்லாபுரம் ஆர்.கே.ரமேஷ் மற்றும் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் கந்தவேல், மாவட்ட செயலாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட பொருளாளர் வெங்கடாச்சலம், மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், இளைஞரணி மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், இளைஞரணி மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சுந்தர், மாயக்கண்ணன், பூதக்குடி செல்வமணி, எஸ்.எஸ்.காலனி தங்கப்பாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ரயில்களின் பராமரிப்புக்கு நிதி ஒதுக்காமல் மக்களின் உயிருடன் விளையாடுகிறது பாஜக அரசு!!

Image

தொடர்ச்சியாக இதுபோன்ற நிகழ்வுகள், பெரும் விபத்துகள் பாஜக அரசின் தனியார்மய ஆசையின் விளைவுகள்!! பாஜக கூட்டணியை ஆட்சியிலிருந்து அகற்றுவோம். ஒன்றிய சேவை நிறுவனங்களை காப்போம்!! #India4India

தேசிய அளவில் நடைபெற உள்ள கூடைப்பந்து போட்டிக்கு மதுரையை சேர்ந்த பள்ளி மாணவி தேர்வு.!

மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி தேசிய அளவில் நடைபெற உள்ள கூடைப்பந்து போட்டிக்கு தேர்வு

மதுரை கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் நடந்த கூடைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்று தமிழ்நாடு அணியில் விளையாட மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி தன்யஸ்ரீ குறிஞ்சி குமரன் அவர்கள் தேர்வாகியுள்ளார்


இவர் தேசிய அளவில் உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடக்க உள்ள 17 வயதுக்குட்பட்டோர் கூடைப்பந்து போட்டியில் விளையாட உள்ளார் இவரை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்…

மதுரை டி.ஆர்.ஓ காலனியில் உள்ள டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா

மதுரை கோ.புதூர் டி.ஆர்.ஓ காலனியில் உள்ள டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இன்று ஆயுத பூஜை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.தாங்கள் தொழில் செய்யும் இயந்திரங்களுக்கு மரியாதை செய்யும் விதமாக சந்தனம், குங்குமம் இட்டு வழிபட்டனர்.

அந்த வகையில் மதுரை கோ.புதூர் டி.ஆர்.ஓ காலனியில் உள்ள டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார் அவர்களின் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் டாக்டர் சின்னச்சாமி, மாஸ்.மணிகண்டன், இன்சூரன்ஸ் ராஜா, செல்வம், இளமி.நாச்சியம்மாள், மலர்விழி, மன்னாதி மன்னன், கவிஞர் மணிகண்டன், சுமதி, திவ்யபாரதி, முத்துமணி ஜெயபாண்டி, எம்.எஸ்.மாறன், இயக்குனர் வீரமணிபிரபு, ரமேஷ்காந்தி மற்றும் மதுரை கால் டாக்சி அசோசியேட் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்….

மதுரையில் ஆதரவற்ற முதியோர்களுக்கு தினமும் உணவு வழங்கி வரும் கல்வி பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் அங்குலட்சுமி.!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விப்பட்டியில் “கல்கி பவுண்டேஷன் டிரஸ்ட்” என்ற அமைப்பை ஏற்படுத்தி அப்பகுதியை சேர்ந்த கணவனை இழந்தவர்கள், பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருக்கும் 50 க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு கடந்த ஒரு வருடமாக “தினமும் மதிய உணவு” வழங்கி வருகிறார் டிரஸ்ட் நிறுவனத்தலைவராக உள்ள “அங்குலட்சுமி”.

மேலும் அப்பகுதியில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தனக்கென ஒரு சுயதொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக குறைந்த கட்டணத்தில் தையல் பயிற்சி, டைப்ரைட்டிங் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளியும் நடத்தி வருகிறார்.

இவரின் தன்னலமற்ற பொது சேவையை பொதுமக்கள் மற்றும் சமூக சேவகர்கள் பாராட்டி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் அனைத்திந்திய பிள்ளைமார் சங்க மாநில கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்லில் அனைத்திந்திய பிள்ளைமார் சங்க மாநில கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்,அக்.22-

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார்கள் சங்கத்தின் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் பி.எஸ்.என்.எ. ஆடிட்டோரியத்தில் நடந்தது.

மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ரகுராம் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பு செயலாளர் ரவிபிள்ளை வரவேற்றார்.


நாடு முழுவதும் இச்சமுதாயத்தின் நிர்வாகிகளை தொழில்களின் அடிப்படையில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட்டது.

சங்கத்தின் நிர்வாகிகள் நடத்திவரும் கல்வி நிறுவனங்களில் இச்சமுதாயத்தினருக்கு இலவச கல்வி அளிப்பது, கல்வி அளிப்பது, மகளிருக்கு சுயசார்பு தொழில் முனைவு திட்டங்களை கொண்டு சேர்ப்பது, சட்ட உதவிகள் வழங்குவது, புதிய நிர்வாகிகள் நியமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் உடனடியாக நிறைவேற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மகளிர் அணி தலைவர் வேலம்மாள், ஸ்ரீவில்லிபுத்துார் வி.பி.எம். கல்வி குழுமத் தலைவர் சங்கர், நாமக்கல் மருத்துவ குழுமத் தலைவர் டாக்டர் குழந்தைவேல், காரைக்கால் ராகவேந்திரா கல்வி குழுமத் தலைவர் இளங்கோ, ஈரோடு நுாட்பாலை உரிமையாளர் அருண், டாக்டர்கள் பழனியப்பன், ராஜவேல், வழக்கறிஞர் பிரிவு தலைவர் கற்பக ரத்னபிரியா, அபுதாபி தமிழ்சங்க நிர்வாகி சிவக்குமார், திருப்பூர் நெசவு தொழிற்காலை உரிமையாளர் ஜெயக்குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மகளிரணி நிர்வாகிகள் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்….

ககன்யான் திட்டம் | வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சோதனை வாகனம்

ககன்யான் திட்டம் | வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சோதனை வாகனம்

ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை சோதனை வாகனம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இஸ்ரோ தலைவர் சோமநாத் இதனை உறுதிப்படுத்தினார்.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ள நிலையில், இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான திட்டத்திற்கு ககன்யான் என பெயரிடப்பட்டு இது தொடர்பான ஆராய்ச்சிகள் கடந்த 2014 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூமியில் இருந்து 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப அழைத்து வருவதே ககன்யான் திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கான முதல்கட்ட சோதனை இன்று காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தொடங்க இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் ஏவுதளத்தில் இருந்து வாகனத்தை விண்வெளிக்கு அனுப்பி, அதை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து, வங்காள விரிகுடாவில் இறங்கியதும் அதை அங்கிருந்து மீட்பது என திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சோதனைக்கு டிவி-டி1 எனும் ஒரு பூஸ்டர் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புவியில் இருந்து ராக்கெட் புறப்பட்டு சுமார் 17 கி.மீ உயரத்தில் சென்றதும் விண்கலத்தில் வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்துவிடும். அதை பாராசூட்கள் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் வங்கக்கடலில் பத்திரமாக இறக்கி சோதனை செய்யப்பட உள்ளது. வங்கக்கடலில் விழுந்த உடன் விண்கலத்தை இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட ஆராய்ச்சி பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வார்கள்.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ தயாராக இருந்த நிலையில், விண்கலம் மேலே எழும்புவதில் சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, காலை 8.30 மணிக்கு விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. அப்போதும் மேலே எழும்புவதில் சிக்கல் இருந்ததால், நேரத்தை 8.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும், 5 நிமிடங்களுக்கு முன்பாக, இந்த சோதனை ஓட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என இஸ்ரோ முடிவெடுத்து, அதனை அறிவித்தது.

“விண்கலம் மேலே எழும்புவது இயல்பாக நடக்க வேண்டும். இரண்டு முறை அதற்காக முயன்றும் அது மேலே எழும்பாததால், அதற்கான காரணத்தைக் கண்டறிய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். முழுமையாக ஆய்வு செய்து அதன் பிறகு விரைவில் சோதனையை நாங்கள் துவங்குவோம். தற்போதைய நிலையில், ககண்யான் விண்கலம் பாதுகாப்பாக இருக்கிறது” என இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, விண்கலம் பகுதிக்குச் சென்று விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொழில்நுட்ப சரிபார்த்தலுக்குப் பிறகு மீண்டும் சோதனை வாகனத்தை விண்ணில் ஏவும் பணி அடுத்த சில மணி நேரங்களில் தொடங்கப்பட்டது. அப்போது சோதனை விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து, விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர். திட்ட இயக்குநர் எஸ். சிவகுமாரை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இஸ்ரே தலைவர் சோமநாத், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “டிவி-டி1 திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என அவர் குறிப்பிட்டார். இதையடுத்துப் பேசிய எஸ். சிவகுமார், தாங்கள் மேற்கொண்ட தொடர் உழைப்புக்கு இன்று பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES