Tuesday , July 29 2025
Breaking News

ஆபத்து வரும் போதெல்லாம் காப்பாற்றிய காப்பான் எல்ஐசி.. அதன் பங்குகளையே மத்திய அரசு விற்பது ஏன்?

ஆபத்து வரும் போதெல்லாம் காப்பாற்றிய காப்பான் எல்ஐசி.. அதன் பங்குகளையே மத்திய அரசு விற்பது ஏன்? பட்ஜெட் பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.. பெரு முதலாளிகளுக்கான பட்ஜெட்.. நாராயணசாமி! – வீடியோ டெல்லி: அரசுக்கு எப்போதெல்லாம் பணம் தேவைப்படுமோ அப்போதெல்லாம் வாரி வழங்கிய அட்சய பாத்திரம் எல்ஐசி. பொதுத்துறை நிறுவனங்கள் ஏதேனும் நஷ்டம் அடைந்தால் அதை வாங்கி அரசை காப்பாற்ற முதல் ஆளாக முன்நின்று வருவதும் எல்ஐசி தான். இப்படி இந்தியாவின் …

Read More »

6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் கொலையில் இரண்டு சிறுவர் உட்பட 3பேர் கைது

6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் கொலையில் இரண்டு சிறுவர் உட்பட 3பேர் கைது?? திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரங்கநாதபுரத்தில் 6வயது சிறுமி ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக மருத்துவமனையில் தகவல் வெளியானது இதில் பாலியல் பலாத்காரம் செய்த குணசேகரன் வயது 16 பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த குணசேகரனின் தம்பி கிஷோர்14 …

Read More »

324 இந்தியர்கள் தனி விமானத்தில் நாடு திரும்பினர்: கடும் காய்ச்சல் இருப்பதால் 6 பேரை அனுப்ப சீனா மறுப்பு

புதுடெல்லி, சீனாவில் கொரோனா வைரஸ் பீதியில் சிக்கி தவித்த 324 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு நேற்று அழைத்து வரப்பட்டனர். 330 பேரை அழைத்து வர சென்ற நிலையில் அவர்களில் 6 பேருக்கு கடும் காய்ச்சல் இருப்பதால் அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப சீனா மறுத்துவிட்டது. சீனாவில் கொரோனா என்ற வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நோய் பரவி வருவதால் உலக முழுவதும் பெரும் அச்சம் நிலவி வருகிறது. இந்த …

Read More »

தஞ்சை பெரியகோவில் – The great temple at tanjore…

The great temple at tanjore… தஞ்சை பெரியகோவில் பற்றி ஏராளமான நூல்கள் தற்காலத்தில் வெளிவந்துள்ளன. கோவில் அமைப்பு, கட்டுமானம், கல்வெட்டு, சிற்பங்கள், தொழில்நுட்பம், என்று பெரியகோவிலைப் பற்றி பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன.. மேற்கண்ட விபரங்கள் அடங்கிய பெரியகோவிலைப்பற்றிய முதல் நூல் எது.? நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே இந்த நூல் வெளிவந்தது. 1935 ஆம் ஆண்டு.. இந்தியத் தொல்லியல் துறையால் இந்நூல் வெளியிடப்பட்டது. நூலின் பெயல்… ” The …

Read More »

குடியுரிமை திருத்தச் சட்டம் (சி,ஏ.ஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்பிக்களின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அடுத்த வாரம் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. அக்கூட்டத்தொடரில் 150க்கும் மேற்பட்ட எம்பிக்கள் தீர்மானம் தாக்கல் செய்யவுள்ளனர். அந்த தீர்மானம் குறித்து எம்பிக்கள் கூறுவதாவது, “இந்திய அரசு சிறுபான்மையினரின் குடியுரிமையை சட்ட ரீதியில் பறிப்பதற்காக இந்த சட்டத்தை உருவாக்கியுள்ளது. இச்சட்டம் செயல்படத்தொடங்கினால் பலர் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவர். குடியுரிமை என பெயரில் சர்வதேச கடமைகளை மீறி இச்சட்டத்தை இந்தியா கொண்டு வந்துள்ளது. இது பாரபட்சமானது என ஐ.நா மனித உரிமை ஆணையம் முன்னதாகவே தெரிவித்தது. இந்தியா இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுவோர் மீது பாதுகாப்பு படையினரின் தாக்குதல், அடக்குமுறை குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும். இந்த சட்டம் அமலாக்கப்பட்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இது பிரிவினைக்கு வழி வகுக்கும். இதனை கண்டிக்கிறோம்” என கூறியுள்ளனர். ஆனால், ஐ.நாவின் இந்த தீர்மானங்கள் குறித்து டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்துள்ளது.

சர்வதேச விதிகளை மீறுகிறது இந்தியா: CAA சட்டத்தை எதிர்த்து ஐ.நா அதிரடி தீர்மானம்

Read More »

சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் கண் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்ற நிலை மாற்றிய அரசு மருத்துவர்

அரியலூர் அரசு மருத்துவமனையில் கண் சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து நோயாளிகள் குடும்பத்திற்கு ஒளி விளக்கு ஏற்றும் அற்புத மனிதர் மருத்துவ கொளஞ்சிநாதன் அவர்கள் . எனது தாயாருக்கு கண் பார்வை குறைபாடு இருந்தால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் கண் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று பல மருத்துவர்களால் நிராகரிக்கப்பட்ட சூழ்நிலையில் , நாங்கள் இருக்கிறேன் உங்கள் கண்களை சரி படுத்துகிறேன் என்று …

Read More »

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சங்கராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் வெட்டிக் கொலை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சங்கராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மூலக்கடை என்ற இடத்தில் நின்றுகொண்டிருந்த ராதாகிருஷ்ணனை காரில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Read More »

அரவக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து, இளைஞர் குரல் மற்றும் நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு இணைந்து நடத்தும் மரம் நடும் விழா

அரவக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து, இளைஞர் குரல் மற்றும் நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு இணைந்து நடத்தும் மரம் நடும் விழா வரும் வெள்ளி கிழமை (7/2/2020) காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து தங்களின் பங்களிப்பை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இடம்: அரவக்குறிச்சி பாவா நகர் நாள்: வெள்ளி கிழமை (7/2/2020) தொடர்புக்கு: 8189894254 | 9965557755 | 9443846693 | 9843454571 இப்படிக்கு, இளைஞர் குரல்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES