மதுரை, ஆக. 11- தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் 12-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், ஏற்றுமதியாளர்கள்- விற்பனையாளர்கள் கூட்டம், தொழில்துறை சட்டங்கள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் என முப்பெரும் விழா, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஸ்ரீகாமாட்சி மகாலில் நடந்தது. மாநில தலைவர் முனைவர் திருமுருகன் தலைமை தாங்கி, அனைவரையும் வரவேற்றார். மாநில செயலாளர் விஜீஷ், சங்கத்தின் ஆண்டறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் விஜயன், சங்க நிதிநிலை …
Read More »மதுரை சம்மட்டிபுரம் அருள்மிகு ஸ்ரீ அருள் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியை பாஜக மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.
மதுரை சம்மட்டிப்புரம் மேட்டுத்தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ அருள் அம்மன் திருக்கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பொங்கல் வைத்து கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் ராஜ்குமார் மற்றும் அவரது துணைவியார் இந்துமதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கோவில் விழா குழு தலைவர் பி.தங்கபாண்டியன், செயலாளர் பென்னர் ரமேஷ், பொருளாளர் ஆராம் புலி, உதவி …
Read More »மதுரை சிறைக் கைதிகள் நலனுக்காக JCI மதுரை சென்ட்ரல் அமைப்பு சார்பில் 500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப் பணிகள் துறை சார்பாக நடைபெற்ற இந்த விழாவில் ஜேசிஐ மதுரை சென்ட்ரல் சார்பில் 500 புத்தகங்கள் சிறைக்கைதிகளின் நலனுக்காக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் 2000 புத்தகங்கள் வழங்குவோம் என்று ஜே.சி.ஐ அமைப்பினர் தெரிவித்தனர்.இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக ஜே.சி.ஐ தேசிய இயக்குநர் G.S.வர்மா, மண்டல தலைவர் சுந்தரேஸ்வரன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக மண்டல இயக்குநர் திருமதி பவித்ரா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி …
Read More »தேனி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டி என்.ஜி.ஓ நகரில் அக்ரி ரகுவரன்-அனிதா இல்ல புதுமனை புகுவிழா..!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி என்.ஜி.ஓ நகரில், ஜோதி மாணிக்கம் பெருமாள் கோவில் பங்காளி அக்ரி ரகுவரன்-அனிதா இல்ல புதுமனை புகுவிழா நடைபெற்றது. இவ்விழாவில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கு ஓடை ராமர், அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.டி.கே ஜக்கையன், ஒன்றிய சேர்மன் லோகிராஜன், ஒன்றிய பொருளாளர் லோகநாதன் உள்பட மாவட்ட, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு …
Read More »பாரதிய ஜனசங்கம் ஸ்தாபகர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி நினைவு தினம் :- மதுரை காளவாசல் மண்டலில் மலர் அஞ்சலி செலுத்திய பாஜக நிர்வாகிகள்…!
பாரதிய ஜனசங்கம் ஸ்தாபகர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காளவாசல் மண்டல் சார்பாக மலரஞ்சலி மதுரை ஜூன் 23 “பாரதிய ஜனசங்கம் ஸ்தாபகர் “ஷ்யாம்பிரசாத் முகர்ஜியின்” 72 வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவ படத்திற்கு மதுரை காளவாசல் மண்டல் சார்பாக பாஜக நிர்வாகிகள் மலர் தூவி நினைவு அஞ்சலியை செலுத்தினர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஷியாம் பிரசாத் முகர்ஜி “பாரதிய ஜனசங்கம் என்ற …
Read More »தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை தீக்கதிர் அலுவலகம் எதிரே உள்ள திருவள்ளுவர் நகரில் இரத்த தானம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம்..!
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை தீக்கதிர் அலுவலகம் எதிரே உள்ள திருவள்ளுவர் நகரில் இரத்த தானம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு கம்ப்யூட்டர் கண் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த பரிசோதனை முகாமில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். …
Read More »கள்ளர் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதற்கு அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் எதிர்ப்பு..!
கள்ளர் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் செயலுக்கு அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநிலத் தலைவர் ஆபேல்மூர்த்தி எதிர்ப்பு தெரிவித்து பேசினார் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி மற்றும்பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன் மற்றும் வட்டாட்சியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அனைத்து விவசாயிகள் ஏராளமானோர் …
Read More »மதுரை மாவட்டம் ஆலாத்தூரில் நேயா டிரஸ்ட் அலுவலகம் திறப்பு விழா..!
மதுரை மாவட்டம் ஆலாத்தூரில் நேயா டிரஸ்ட் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மடீட்சியா செயலாளர் கோடீஸ்வரன் அலுவலகத்தை திறந்து வைத்தார். ஆலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ராஜவேல் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். நேயா டிரஸ்ட் நிறுவனர் அமுதா சதீஸ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். மடீட்சியா துணைத் தலைவர் அசோக் மரக்கன்றுகளை வழங்கினார்.தமிழ்நாடு மெர்க்ககன்டைல் வங்கியின் ஓய்வு பெற்ற மதுரை முதுநிலை மேலாளர் அய்யம்பெருமாள், ஓய்வு பெற்ற …
Read More »மதுரையில் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தங்க தேர் இழுத்த காங்கிரஸ் நிர்வாகிகள்..!
ராகுல் காந்தி எம்.பி யின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை செல்லூர் அய்யனார் கோயில் அருகில் உள்ள வி.என்.ஆர் நீதிராஜாராம் கொடிக்கம்பத்தில் கொடியேற்றி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாவட்ட தலைவர் ஜி.முத்துக்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை கோரிப்பாளையம் பள்ளிவாசலில் துவா செய்யப்பட்டு ஏழைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் மீர்பாஷா தலைமை வகித்தார். பின்னர் காந்தி மியூசியம் அருகே …
Read More »ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் முதலாம் ஆண்டு விழா..!
ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு பகுதியில் ஏழை முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் டாக்டர் முரளி பாஸ்கர் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் தலைமை வகித்தார். டிரஸ்ட் பொருளாளர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். இதில் சக்திவேல், கே.ஆர்.கே ராதாகிருஷ்ணன், பாண்டி, சுரேஷ், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Read More »