பாரதிய ஜனசங்கம் ஸ்தாபகர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காளவாசல் மண்டல் சார்பாக மலரஞ்சலி
மதுரை ஜூன் 23
“பாரதிய ஜனசங்கம் ஸ்தாபகர் “ஷ்யாம்பிரசாத் முகர்ஜியின்” 72 வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவ படத்திற்கு மதுரை காளவாசல் மண்டல் சார்பாக பாஜக நிர்வாகிகள் மலர் தூவி நினைவு அஞ்சலியை செலுத்தினர்
மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஷியாம் பிரசாத் முகர்ஜி “பாரதிய ஜனசங்கம் என்ற அமைப்பை தொடங்கினார். மேலும் ஜவர்ஹலால் நேரு மந்திரி சபையில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 1980 ஆம் வருடம் பாரதிய ஜன சங்கம் பாரதிய ஜனதா கட்சியாக பெயர் உருவெடுத்தது. இன்று இந்தியாவில் மாபெரும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உருவாகி அதன் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை தலைமையில் வலுவான எதிர்க்கட்சியாக பாஜக மாறி வருகிறது. இந்நிலையில் பாரதிய ஜனசங்கம்
ஸ்தாபகர் “ஷ்யாம்பிரசாத் முகர்ஜியின்” 72 வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை காளவாசல் மண்டலில், மாவட்ட துணைத் தலைவர் ராஜ்குமார் தலைமையிலும், காளவாசல் மண்டல் தலைவர் முனைவர் பிச்சைவேல் முன்னிலையில் பிரசாத் முகர்ஜியின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் பாலமுருகன், பொருளாதார பிரிவு மாவட்ட துணைத்தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்டச் செயலாளர் சாய் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட பொதுச்செயலாளர் ஸ்ரீ ராம், மண்டல் செயலாளர் அ.கண்ணன், கிளைத்தலைவர் பொன்முருகன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் கரீம்பாய், கலை கலாச்சார பிரிவு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், திருக்கோவில் பிரிவு கண்ணன்சாமி, மகளிரணி மாவட்ட செயலாளர் உமாராணி மற்றும் வல்லத்தரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.