Tuesday , July 1 2025
Breaking News
Home / செய்திகள் (page 107)

செய்திகள்

All News

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் கள்ளர் நாடு அறக்கட்டளை சார்பாக ஆடி 18 தாய்மாமன் தினவிழா.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் கோட்டை மந்தை கருப்பசாமி கோவிலில் கள்ளர் நாடு அறக்கட்டளை சார்பாக ஆடி 18 தாய்மாமன் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ் சேனை மாநில நிறுவன தலைவர் மகாராஜன் அவர்களின் ஆணைக்கிணங்க, அதன் மாநில செயலாளர் சுமன், மதுரை மாவட்ட செயலாளர் செட்டிகுளம் குணா உள்பட மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக நடந்த அன்னதானத்தை வலசை முத்துராமன் ஜி தொடங்கி வைத்தார்

மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவசக்தி டிரஸ்ட் சார்பாக நடந்த மாபெரும் அன்னதானத்தை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவரும், தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக அகில இந்திய பொதுச் செயலாளருமான வலசை முத்துராமன் ஜி அவர்கள் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு டிரஸ்ட் தலைவர் உதயசூரியன் தலைமை தாங்கினார். விளாங்குடி சபாராம் மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன், டிரஸ்ட் அறங்காவலர்கள் பூமிராஜா, சோலை எஸ்.பரமன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் திருஞானசம்பந்தம், ராமநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாவட்டம் கப்பலூர் நெல் கொள்முதல் கிடங்கில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க பாஜக விவசாய அணி மாநில துணை தலைவர் முத்துராமன் ஜி கோரிக்கை..!

மதுரை மாவட்டம் கப்பலூர் நெல் கொள்முதல் கிடங்கில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க பாஜக விவசாய அணி மாநில துணை தலைவர் முத்துராமன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் மனு வழங்க உள்ளதாகவும் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம் கப்பலூரில் உள்ள நெல் கொள்முதல் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டேன்.

அப்போது சுமார் ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து அனைத்தும் முளைத்து பயனற்று உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். விவசாயிகள் கஷ்டப்பட்டு அறுவடை செய்து இந்த நெல் மணிகளை தமிழக அரசிடம் கொண்டு சேர்க்கின்றனர். ஆனால் இந்த நெல் மணிகளை அலட்சியமாக திறந்த வெளியில் அடுக்கி வைத்து மழையில் நனைய விடுவதால் வீணாக முளைத்து பயனற்றதாகி விடுகிறது.

எனவே இந்த நெல் மூட்டைகளை மழையில் நனைய விடாமல் பாதுகாப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு விரைவில் சரி செய்ய கோரிக்கை விடுத்துள்ளேன்.

மேலும் இது சம்பந்தமாக நாளை புதன்கிழமை காலை மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் மனு அளிக்க உள்ளேன் என கூறினார்.

மதுரையில் அகில இந்திய முன்னாள் துணை ராணுவப்படை, தமிழ்நாடு சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம்

மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய முன்னாள் துணை ராணுவப்படை, தமிழ்நாடு சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் எஸ்.கே. சீனிவாசன், துணை சேர்மன் ஏ.வி பாண்டியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைமுன்னாள் துணை ராணுவ படை மாவட்ட செயலாளர் ஆர்.ராமன் ஒருங்கிணைத்தார்.

மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் அகில இந்திய முன்னாள் துணை ராணுவப்படை, தமிழ்நாடு சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம்

மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய முன்னாள் துணை ராணுவப்படை, தமிழ்நாடு சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் எஸ்.கே. சீனிவாசன், துணை சேர்மன் ஏ.வி பாண்டியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைமுன்னாள் துணை ராணுவ படை மாவட்ட செயலாளர் ராமன் ஒருங்கிணைத்தார்.

மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சித்திக் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். இதில் மாநில இளைஞரணி தலைவர் ஜெரோன்குமார் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ரபீக், மாவட்ட விவசாய அணி அழகுபாண்டி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் ஜாகிர்உசேன், மாவட்ட தமிழர் படை தலைவர் கபார்கான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டெல்லியின் புதிய போலீஸ் கமிஷனராக சஞ்சய் அரோரா ஆகஸ்ட் 1-ம் தேதி பொறுப்பேற்பு.!

டெல்லியின் புதிய போலீஸ் கமிஷனராக சஞ்சய் அரோரா ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பொறுப்பேற்க உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த இந்திய போலீஸ் சர்வீஸ் (ஐபிஎஸ்) அதிகாரியான அரோரா ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பொறுப்பேற்க உள்ளார்.

1988 ஆம் ஆண்டு ஐபிஎஸ் குழுவைச் சேர்ந்த அரோரா, தற்போது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ஐடிபிபி) காவல்துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) பணியாற்றி வருகிறார்.

சஞ்சய் அரோரா தற்போது இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறையின் (ஐடிபிபி) டிஜிபியாக பணியாற்றி வருகிறார்.

புது தில்லி: ஐபிஎஸ் அதிகாரிசஞ்சய் அரோராகமிஷனராக நியமிக்கப்பட்டார் டெல்லி காவல்ஞாயிறு இன்று.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, குஜராத் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானாவுக்குப் பிறகு, தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த இந்திய போலீஸ் சர்வீஸ் (ஐபிஎஸ்) அதிகாரி அரோரா நியமிக்கப்படுகிறார்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் பொறுப்பேற்பார், மறு உத்தரவு வரும் வரை அவர் பதவியில் நீடிப்பார்.

தில்லி காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் அருணாச்சலப் பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (AGMUT) கேடருக்கு அரோராவை,

இடை-கேடர் பிரதிநிதித்துவப்படுத்த தகுதியான ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

AGMUT கேடருக்கு வெளியில் இருந்து ஒரு அதிகாரி தேசிய தலைநகரின் போலீஸ் படைக்கு தலைமை தாங்குவது சமீபத்திய வரலாற்றில் இது மூன்றாவது முறையாகும்.

1988 ஆம் ஆண்டு ஐபிஎஸ் குழுவைச் சேர்ந்த அரோரா, தற்போது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ஐடிபிபி) காவல்துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) பணியாற்றி வருகிறார்.

Sashastra Seema Bal (SSB) இன் டைரக்டர் ஜெனரலாகப் பணிபுரியும் SL தாஸென், மறு அறிவிப்பு வரும் வரை ITBP இன் DGP பதவியின் கூடுதல் பொறுப்பைப் பெறுவார்.

தாஸென் மத்திய பிரதேசத்தின் 1988 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐடிபிபி டிஜியாக நியமிக்கப்பட்ட அவர் ஜூலை 2025 வரை பணியில் இருக்கிறார்.

முன்னதாக, வனக் கொள்ளையர் வீரப்பனைத் துரத்திய தமிழ்நாடு காவல்துறை எஸ்டிஎஃப் எஸ்பியாக அரோரா பணியாற்றினார்.

2002 முதல் 2004 வரை கோயம்புத்தூர் காவல் ஆணையராகப் பணியாற்றிய அவர், சிஆர்பிஎஃப் மற்றும் பிஎஸ்எஃப் ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார்.

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் பி டெக் பட்டம் பெற்றவர்.

மதுரையில் மனித உரிமை செல் மாநில கலந்தாய்வு கூட்டம் மற்றும் விருது வழங்கும் விழா.!

மதுரையில் மனித உரிமை செல் மாநில கலந்தாய்வு கூட்டம் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தலைவர் குமாரகிருஷ்ணன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.முன்னதாக எஸ்.எஸ்.காலனியில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தை அவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனைவர் பிச்சைவேல் தலைமை வகித்தார். மேற்கு மண்டல தலைவர் டாக்டர் ராகவன் மற்றும் மேற்கு மண்டல துணைத் தலைவர் டாக்டர் கஜேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்வின் போது பல்வேறு சமூக சேவைகள் செய்ததற்காக மாவட்ட தலைவர் முனைவர் பிச்சைவேல், பத்திரிகையாளர் மயிலேறி, மருத்துவர் குருலட்சுமி கஜேந்திரன், டாக்டர் ஆர்த்தி, பாலாஜி போன்றவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் இளைஞரணி செயலாளர் சிலம்பம் சண்முகவேல், பரவை அசோக், பொன்முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மண்டல பொருளாளர் பாலமுருகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கம் சார்பாக பெருந்திரள் முறையீடு போராட்டம்

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கம் சார்பாக அறிஞர் அண்ணா மாளிகை முன்பு,12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.

ஓய்வு பெறும் நாளிலேயே அனைத்து ஓய்வூதிய பழங்களையும் வழங்கிட வேண்டும்.

தகுதியுள்ள அனைவருக்கும் அனைத்து நிலை பதவி உயர்வு வழங்கிட வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் பணியாற்றிய முன் களப்பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை 15 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும். போன்ற 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கண்டன கோஷங்களை நிர்வாகிகள் எழுப்பினர்.

இப்போராட்டத்திற்கு மாநிலத் துணைப்பொதுச் செயலாளர் சி.எம் மகுடீஸ்வரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மண்டல நிர்வாகிகள் துரைராஜ், சின்னச்சாமி, செல்லப்பா, அழகுபாண்டி, செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் செல்வம் துவக்க உரை ஆற்றினார். பொறியியல் பிரிவு பணியாளர் சங்கத்தின் செயலாளர் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் கே.கண்ணன் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் இரா.தமிழ் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நீதிராஜா சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பொறியியல் பிரிவு பணியாளர் சங்கத்தின் பொருளாளர் கே.டி. துரைக்கண்ணன் நன்றியுரை கூறினார்.

இந்நிகழ்வில் நகர்ப்புற சுகாதார செவிலியர் சங்க தலைவர் பஞ்சவர்ணம், எழுத்தர் சங்க துணைத் தலைவர் எஸ்.சின்னச்சாமி, வருவாய் உதவியாளர் சங்கம் முகுந்தன், ஓட்டுனர் சங்கத் தலைவர் முருகன், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க பொதுச் செயலாளர் தாமோதரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் மின் கட்டண உயர்வை கண்டித்து சிம்னி விளக்குகள் ஏந்தி எஸ் டி பி ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்

மதுரையில் மின் கட்டண உயர்வை கண்டித்து சிம்னி விளக்குகள் ஏந்தி எஸ் டி பி ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை முனிச்சாலை சந்திப்பு அருகே மின் கட்டண உயர்வை கண்டித்து, தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம், தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, தெற்கு மாவட்ட செயலாளர் ஆரிப்கான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநில பேச்சாளர் காஜாமைதீன், தெற்கு தொகுதி செயலாளர் பாஷா, ஊடக ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் தாஜூதீன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES