Tuesday , February 3 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக நடந்த அன்னதானத்தை வலசை முத்துராமன் ஜி தொடங்கி வைத்தார்
NKBB Technologies

மதுரையில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக நடந்த அன்னதானத்தை வலசை முத்துராமன் ஜி தொடங்கி வைத்தார்

மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவசக்தி டிரஸ்ட் சார்பாக நடந்த மாபெரும் அன்னதானத்தை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவரும், தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக அகில இந்திய பொதுச் செயலாளருமான வலசை முத்துராமன் ஜி அவர்கள் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு டிரஸ்ட் தலைவர் உதயசூரியன் தலைமை தாங்கினார். விளாங்குடி சபாராம் மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன், டிரஸ்ட் அறங்காவலர்கள் பூமிராஜா, சோலை எஸ்.பரமன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் திருஞானசம்பந்தம், ராமநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES