உடன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரு. முருகேசன், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் திரு. மணி, விராலிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமிகு. காமு மணி, திமுக ஊராட்சி ஒன்றிய செயலாளர் திரு.சத்தியசீலன், மாவட்ட கவுன்சிலர் திருமிகு. சாந்தி தங்கசிங்கம், ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் திரு.பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த கடையடைப்பு போராட்டம் மற்றும் பேரணியில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் முருகன்ஜி, நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் மகாராஜன் ஆலோசனைப்படி மாநில செயலாளர் சுமன் மற்றும் மருது தேசிய கழகத்தின் தலைவர் மருதுபாண்டியன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் ஆலோசனைப்படி, மாநில செயலாளர் சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் மாவட்ட பொருளார் களஞ்சியம் முருகன், மருது தேசிய கழக தலைவர் மருதுபாண்டியன் தத்தனேரி கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர் .
மதுரை நெல்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு 31 ஆண்டுகால அநீதி,பாசிச எதிர்ப்பு தின மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் எஸ்டிபிஐ கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் மதுரை நெல்பேட்டை பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர்ரகுமான் துவக்க உரையும், வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் வரவேற்புரையும் நிகழ்த்தினர்.
தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சிராஜ்தீன் தொகுப்புரையாற்றினார். தமிழ் புலிகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் பேரறிவாளன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிஸ்மில்லா கான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வெ. கனியமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டன உரையாற்றினார்.
தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாபுஜீ மற்றும் வடக்கு தொகுதி தலைவர் பாஷா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்பாட்டத்தில் முடிவில் கட்சியின் தெற்கு மாவட்ட துணை தலைவர் யூசுப் நன்றி கூறினார்.
இந்நிகழ்விற்கு கட்சியின் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி நாளை டிச.7ல் நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும் அப்துல்கலாம் இயக்கத்தைச் சேர்ந்த வணிக பெருமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட கோரியும், நிரந்தர அரசாணை வழங்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி நாளை டிச.7ல் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டத்திற்கு அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கால்வாயில் வைகை அணையில் இருந்து விவசாயிகளின் துயரத்தை போக்கும் வகையில் தண்ணீர் திறந்து விட கோரியும் நிரந்தர அரசாணை வழங்க கோரி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக நாளை டிசம்பர் 7ஆம் தேதி மாபெரும் கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் அங்கே உடனடியாக அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் துணை நிற்கும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது.
அதுபோல நமது முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் ஐயா மேல் அன்பும் மரியாதையும் கொண்டவர்களும், மேலும் நம் இயக்கத்தைச் சேர்ந்த வணிகப் பெருமக்களும் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளித்து இந்த போராட்டத்தில் பங்கு பெற வேண்டும் என உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
ரஷியாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் குளோபல் பீஸ் பில்டிங் நெட்வொர்க் மற்றும் பெடரேஷன் ஆப் இன்டியன் என்ஜிஓ’ஸ் மற்றும் ஹ்யூமன் சர்விசஸ் இணைந்து சிறந்த சமூக சேவைகள் செய்தோர்களுக்கு உலக அமைதிக்கான அம்பாசிட்டர் விருதை வழங்கும் விழா மதுரை மாட்டுத்தாவணியில் தனியார் அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் கொரோனா ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் பல்வேறு மருத்துவ உதவிகள் செய்ததற்காக டாக்டர் கஜேந்திரனுக்கு, “உலக அமைதிக்கான அம்பாசிட்டர்” விருதை நீதிபதி (ஓய்வு) வைத்தியநாதன், எப்என்ஐ தேசிய தலைவர் விஜயகுமார் ஆகியோர் விருது வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய தலைவரின் தனிச்செயலாளர் சக்திவேல்,மாநில தலைவர் ஆனந்தகுமார், மாநில செயலாளர் டேனியல் சக்கரவர்த்தி, மாநில பொருளாளர் சுகுமாரி, மதுரை மாவட்ட தலைவர் எஸ்.எம்.ரகுபதி, மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் நிர்வாகிகள் ரகுநாத், தினவிடியல் லாரன்ஸ் நாராயணன், ஆனந்தன், ஆறுமுகம், வழக்கறிஞர் பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரஷியாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் குளோபல் பீஸ் பில்டிங் நெட்வொர்க் மற்றும் பெடரேஷன் ஆப் இன்டியன் என்ஜிஓ’ஸ் மற்றும் ஹ்யூமன் சர்விசஸ் இணைந்து சிறந்த சமூக சேவைகள் செய்தோர்களுக்கு உலக அமைதிக்கான அம்பாசிட்டர் விருதை வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மதுரை திருமங்கலம் அருகே கரிசல்பட்டியில் இயங்கி வரும் அகத்தியர் அன்னதான அறக்கட்டளை நிறுவனர் முத்துப்பாண்டி அவர்களுக்கு அவரின் பல்வேறு சமூக சேவைகளை பாராட்டி விதமாக நீதியரசர் வைத்தியநாதன், என்ஜிஓ’ ஸ் தலைவர் டாக்டர் விஜயகுமார்,குட் ஒர்க் பள்ளி தாளாளர் ஜலாலூதீன் ஆகியோர் விருது வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய தலைவரின் தனிச்செயலாளர் சக்திவேல்,மாநில தலைவர் ஆனந்தகுமார், மாநில செயலாளர் டேனியல் சக்கரவர்த்தி, மாநில பொருளாளர் சுகுமாரி, மதுரை மாவட்ட தலைவர் எஸ்.எம்.ரகுபதி, மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் நிர்வாகிகள் ரகுநாத், தினவிடியல் லாரன்ஸ், நாராயணன், ஆனந்தன், ஆறுமுகம், வழக்கறிஞர் பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையில் தமிழ்ச்சங்கம் நிறுவிய வள்ளல் பொன்.பாண்டித்துரை தேவரின் 112 வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழக பொதுச்செயலாளர் வி.ஆர்.கே.கவிக்குமார்அவர்களின் ஆலோசனைப்படி, மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வம், புறநகர் மாவட்ட செயலாளர் துரை, கோபிநாதன்,குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நான்காம் தமிழ் சங்கம் கண்ட வள்ளல் பாண்டித்துரை தேவரின் 112 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை மாநில செயலாளர் சுமன்தேவர் மற்றும் மருது தேசிய கழகத்தின் தலைவர் மருதுபாண்டியன், சுதந்திர புலிகள் கட்சி தலைவர் தத்தனேரி கார்த்திக் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கால்வாய் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க தாக்கலான வழக்கில் வைகை அணையில் நீர்இருப்பு, மழையால் நீர்வரத்தை பொறுத்து இருபோக பாசனத்திற்கு நீர் வழங்குவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்வர் என தமிழக அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேலப்பட்டி சேவியர் மற்றும் மதுரை விராட்டிபத்தை சேர்ந்த அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபெல் மூர்த்தி அவர்களின் மனைவி திருமதி அருள் நவரத்தினம் தாக்கல் செய்த பொதுநல மனு :- பெரியாறு பிரதான கால்வாயின் ஒருபோக பாசனத்திற்கு 900 கன அடி, திருமங்கலம் கால்வாய் ஒருபோக பாசனத்திற்கு 230 கன அடி வீதம் தண்ணீர் இருப்பு, நீர்வரத்தை பொறுத்து குடிநீருக்காக வைகை அணையிலிருந்து நவ.,15 முதல் 10 நாட்களுக்கு திறந்து விட நவ., 14 ல் தமிழக அரசு உத்தரவிட்டது.
திருமங்கலம் பிரதான கால்வாயில் 230 கன அடி வீதம் ஆண்டு தோறும் செப்டம்பர் 15 முதல் மார்ச் 1 வரை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என 2010ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு முரணாக தற்போது வெளியிட்டது அறிவிப்பு சட்டவிரோதம். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். தற்போது வைகை அணையில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. விவசாயத்திற்கு 10 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறக்க தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். 2010 அரசாணைப்படி 2024 மார்ச் 1 வரை தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும். என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தனர்.
அப்போது தமிழக அரசு தரப்பு : இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. இருபோக பாசனத்திற்கு அணையில் போதிய தண்ணீர் இல்லை. ஒருபோக பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் வினியோகிக்க இயலவில்லை. தற்போது அணையில் நீர் இருப்பு மற்றும் பருவமழையால் நீர்வரத்தை பொறுத்து இருபோக பாசனத்திற்கு நீர் வழங்குவது குறித்து தொழில்நுட்ப ரீதியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்வர் இவ்வாறு தெரிவித்தது. பின்னர் நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரம் ஒத்தி வைத்தனர்.