உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி நாளை டிச.7ல் நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும் அப்துல்கலாம் இயக்கத்தைச் சேர்ந்த வணிக பெருமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட கோரியும், நிரந்தர அரசாணை வழங்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி நாளை டிச.7ல் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டத்திற்கு அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கால்வாயில் வைகை அணையில் இருந்து விவசாயிகளின் துயரத்தை போக்கும் வகையில் தண்ணீர் திறந்து விட கோரியும் நிரந்தர அரசாணை வழங்க கோரி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக நாளை டிசம்பர் 7ஆம் தேதி மாபெரும் கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் அங்கே உடனடியாக அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் துணை நிற்கும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது.
அதுபோல நமது முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் ஐயா மேல் அன்பும் மரியாதையும் கொண்டவர்களும், மேலும் நம் இயக்கத்தைச் சேர்ந்த வணிகப் பெருமக்களும் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளித்து இந்த போராட்டத்தில் பங்கு பெற வேண்டும் என உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.