Tuesday , February 3 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை நெல்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்
NKBB Technologies

மதுரை நெல்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

மதுரை நெல்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு 31 ஆண்டுகால அநீதி,பாசிச எதிர்ப்பு தின மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் எஸ்டிபிஐ கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் மதுரை நெல்பேட்டை பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர்ரகுமான் துவக்க உரையும்,  வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் வரவேற்புரையும் நிகழ்த்தினர்.

தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சிராஜ்தீன் தொகுப்புரையாற்றினார். தமிழ் புலிகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் பேரறிவாளன், மாநகராட்சி துணை மேயர்  நாகராஜன், முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர்  வழக்கறிஞர் பிஸ்மில்லா கான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வெ. கனியமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்  கண்டன உரையாற்றினார்.

தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாபுஜீ மற்றும் வடக்கு தொகுதி தலைவர் பாஷா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்பாட்டத்தில் முடிவில் கட்சியின் தெற்கு மாவட்ட துணை தலைவர் யூசுப் நன்றி கூறினார்.

இந்நிகழ்விற்கு கட்சியின் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES