Thursday , November 21 2024
Breaking News
Home / செய்திகள் (page 32)

செய்திகள்

All News

மதுரையில் நாயுடு சேம்பர் ஆஃப் காமர்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சார்பாக யுகாதி குடும்ப விழா..

மதுரையில் நாயுடு சேம்பர் ஆஃப் காமர்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி இணைந்து நடத்திய 4-ஆம் ஆண்டு தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதி குடும்ப விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சேர்மன் இராஜகோபால் நாயுடு தலைமை வகித்தார்.நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை விழா குழு உதவி தலைவர் ஜி.வி சௌந்தரராஜன் நாயுடு வரவேற்று பேசினார்.

உதவித்தலைவர்கள் ஆர்.ஜெயராமன் நாயுடு, லயன் ராஜேந்திரபாபு நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர்கள் ஜெகன்மோகன் நாயுடு,
விஜயராகவன் நாயுடு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் நபார்டு வங்கி தனி இயக்குனர் பேராசிரியர் இராம.சீனிவாசன் மற்றும் முனைவர் ஜகந்நாத் நாயுடு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு
மன்னர் கல்லூரி பொருளாளர் ஆழ்வார்சாமி நாயுடு, சேம்பர் ஆஃப் காமர்ஸ் பொருளாளர் பாஸ்கரன் நாயுடு, இணைச் செயலாளர் சுப்புராஜ் ஆகியோர் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் வேணுகோபால் நன்றி கூறினார்.

விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு நாயுடு சேம்பர் ஆஃப் காமர்ஸ் உறுப்பினர் பொம்மை ரவிச்சந்திரன் பொது அறிவு வினா புத்தகம், சித்த மருத்துவ குறிப்புகள் அடங்கிய புத்தகம், திருக்குறள் உள்ளிட்ட புத்தகங்களை வழங்கினார்.
மேலும் பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் விழா குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சௌந்தர்ராஜன், மோகன்ராஜா, புருஷோத்தமன், சங்கர் கணேஷ், செல்வராஜ், சௌரிராஜன், வெங்கடேசன், சுரேஷ்பாபு, சந்திரன், வெங்கட ஆனந்த் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

முத்தூட் குழுமம் CSR திட்டம் மூலம் சென்னையில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.

சென்னையில் முத்தூட் குழுமம் CSR திட்டம் மூலம் ஹோப் அறக்கட்டளையின் பள்ளிக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்தியாவின் மிகப்பெரிய தங்க நகைக் கடன் நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் தங்களது CSR திட்டம் மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்துவருகிறது.

இதனை தொடர்ந்து சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் ஹோப் அறக்கட்டளை மூலம் இயங்கி வரும் ஆங்கிலவழி பள்ளிக்கு சுமார் 2 லட்சம் மதிப்புள்ள ஐந்து மடிக்கணினியை வழங்கியது.

இந்நிகழ்வில் முத்தூட் பைனான்ஸ் சென்னை தெற்கு பிராந்திய மேலாளர் ரூபேஸ், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அதிகாரி நிர்மல்ராஜ், மற்றும் திருமதி.சரஸ்வதி, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் முத்தூட் சமூக பொறுப்பு திட்ட மேலாளர் ரமேஷ்கண்ணா திட்டத்தின் நோக்கம் மற்றும் முத்தூட் குழுமம் சமுக பொறுப்பின் மூலம் நடைபெறும் பல்வேறு திட்டங்கள் சேவைகள் பற்றி பேசினார்.

இந்நிகழ்வில் முத்தூட் நிறுவனத்தின் பணியாளர்கள், ஹோப் அறக்கட்டளை அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வட்டக் கழக செயலாளர் பழங்காநத்தம் ராஜாராம் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

மதுரை, ஏப்ரல்.28

தமிழகத்தில் கடுமையான கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மக்கள் நீர்மோர், இளநீர் குளிர்ச்சியூட்டும் பழ ஜூஸ்களை அருந்த வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே வெயிலில் இருந்து மதுரை மக்களை காக்கும் விதமாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் அதிமுக 71-வது வட்டக் கழக செயலாளர் பழங்காநத்தம் ராஜாராம் ஏற்பாட்டில், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, தர்பூசணி பழம், வெள்ளரிக்காய், தண்ணீர் பாட்டில்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், பா.குமார், அண்ணாதுரை, பரவை ராஜா, வி.பி.ஆர் செல்வகுமார், சக்திவிநாயகர் பாண்டியன்,எஸ்.எம்.டி ரவி, ராஜா சீனிவாசன்,71 வது வட்ட அவைத் தலைவர் பி.எம்.பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்

மதுரையில் சாதனை படைத்த ஆகாஷ் எஜூகேஷனல் மாணவர்கள்..!

ஆகாஷ் எஜூகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்-ன் (ஏஇஎஸ்எல்) மதுரை மாணவன் கார்த்திக் அகர்வால் ஜேஇஇ மெயின்ஸ் 2024 தேர்வில் 99.91 சதவீதத்துடன் மதுரையில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார் ; 5 மாணவர்கள் 99 சதவிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றும்,
கார்த்திக் அகர்வால் வேதியியலில் 100 சதவிதம் மதிப்பெண் பெற்றுள்ளார்.
வி.எஸ் பிரணவ் என்ற மாணவர் இயற்பியலில் 100 சதவிதம் மதிப்பெண் பெற்றுள்ளார்

மற்ற 4 மாணவர்கள் 99 சதவிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

தேர்வுத் தயாரிப்பு சேவைகளில் முன்னனியில் இருக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (ஏஇஎஸ்எல்), கூட்டு நுழைவுத் தேர்வு (ஜேஇஇ) மெயின்ஸ் 2024 இரண்டாம் அமர்வில் மதுரையைச் சேர்ந்த மாணவனின் சிறப்பான சாதனையை பெருமையுடன் அறிவித்துள்ளது.
ஏஇஎஸ்எல்-இன் மாணவன் கார்த்திக் அகர்வால், 99.91 சதவிதத்துடன் மதுரையின் சிட்டி டாப்பராக வந்துள்ளார். முக்கிய பாடமான வேதியியலில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார்.


கார்த்திக்கைத் தவிர மேலும் 5 மாணவர்கள் 99 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்கள் நிதிஷ் மணி செந்தில், வி எஸ் ப்ரணவ், சஞ்சய் ராம் செளந்தராஜன், கனியமுதன் எஸ் மற்றும் சாய் கிரிஷ் எஸ் ஆவர்.
மாணவர்களின் சிறப்பான செயல்திறன் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவது மட்டுமின்றி, இந்தியாவின் மிகவும் சவாலான தேர்வில் ஒன்றான ஜேஇஇ-ல் கடினமான பாடங்களில் அவர்களின் ஆழமான பிடியை முன்னுக்குக் கொண்டுவருகிறது.

தேசிய தேர்வு முகமை 24.04.2024 அன்று அவர்களின் அசாதாரண சாதனைகளை வெளியிட்டு சிறப்பான ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது.
ஆகாஷின் புகழ்பெற்ற வகுப்பறைத் திட்டத்தில் சேர்ந்த மாணவர்கள், உலகளவில் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட IIT JEE ஐ வெல்வதற்கான கடுமையான பயணத்தை மேற்கொண்டனர்.

⅞அடிப்படைக் கருத்துகளைப் பயின்று தேர்ச்சி பெற்று, ஒழுக்கமான ஆய்வு முறையைக் கடைப்பிடித்தது மாணவர்களின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். தங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த மாணவர்கள், “எங்கள் வெற்றிக்கு நாங்கள் என்றும் ஆகாஷிற்கு கடமைப்பட்டுள்ளோம். ஆகாஷின் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட உள்ளடக்கம் மற்றும் பயிற்சி எங்களின் இந்த பயணத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. அவர்களின் அசைக்க முடியாத வழிகாட்டுதல் இல்லாமல், சுருக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏராளமான பாடங்களில் தேர்ச்சி பெறுவது ஒரு தீர்க்கமுடியாத சவாலாக இருந்திருக்கும்” எனக் கூறினார்.


ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) இன் முதன்மை கல்வி மற்றும் வணிகத் தலைவர் தீரஜ் மிஸ்ரா, மாணவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர் பேசுகையில் “மாணவர்களின் குறிப்பிடத்தக்க செயல்திறனானது, விரிவான பயிற்சி மற்றும் புதுமையான கற்றல் தீர்வுகளை மாணவர்களுக்கு வழங்கி போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்க அவர்களை தயார்படுத்துவதில் AESL இன் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். அவர்களின் எதிர்கால முயற்சிகள் தொடர்ந்து வெற்றியடைய வாழ்த்துகிறோம்” என்றார்.

அழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கிய சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன்..!

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில் கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு, மக்கள் நீதி மய்யம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் தலைமையில்
39-வது ஆண்டு மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
நடைபெற்றது.

வைகை ஆற்றில் எழுந்தருளி விட்டு கள்ளழகர் வண்டியூருக்கு செல்லும் நாளான செவ்வாய்க்கிழமை அன்றும், மீண்டும் ராமராயர் மண்டகப்படியை நோக்கி செல்லும் நாளான புதன்கிழமை அன்றும் இரண்டு நாளாக புளியோதரை, லெமன் சாதம், தயிர் சாதம், பாயாசம், சுண்டல் பயறு, படாடாணி பயறு போன்ற பத்து வகையான உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் பாத்திரக்கடை நாகராஜ், குணா அலி, நாகேந்திரன், தர்மர், பூமிராஜா, அழகர், ரத்தினம், இ.பி.கண்ணன், மகேஷ்குமார், அம்மா கண்ணன், சேது, பரமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பாக அன்னதானம் நீர்,மோர் வழங்கப்பட்டது

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு மதுரை கலெக்டர் அலுவலக சாலை திருவள்ளுவர் சிலை அருகே தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம், அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் மற்றும் சர்வதேச சட்ட உரிமைகள் மனித நீதி சபை சார்பில் மாபெரும் அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்க மாநில தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் தலைமை தாங்கினார்.மாநில பொதுச் செயலாளர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார்.அனைத்து மகளிர் மேம்பாட்டு கழக மாநில தலைவர் மஞ்சுளா தேவி,மாநில பொதுச் செயலாளர் கவிதா, துணை செயலாளர் கள்ளியம்மாள், மாவட்ட தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் வரவேற்றனர்.

விழா ஏற்பாடுகளை மாநில துணைத் தலைவர்கள் சமய செல்வம்,ஜான் ஜெயராமன், மாநில துணை செயலாளர்கள் பாண்டியன், முருகேசன், மாநில இணை செயலாளர்கள் ராஜேஸ் கண்ணன், கார்த்திக், மணிகண்ட ராஜா, அல்லா பக்ஸ், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மூர்த்தி, நாகேந்திரன், ஜான்சுந்தர், மணிகண்டன், சேவுகன்,மாநில செய்தி தொடர்பாளர்கள் அஜித் குமார், ராமசாமி உள்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

விழா முடிவில் மாநில பொருளாளர் புஷ்பராஜன் நன்றி கூறினார்.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் சார்பாக நீர்,மோர் வழங்கப்பட்டது

மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் மாநில தலைவர் டாக்டர் ஆர் பிச்சைவேல் தலைமையிலும்,
மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.மாணிக்கராஜ், மாநில இளைஞரணி தலைவர் எம்.ஜெ.ஜீவனா ரோஸ் ஆகியோர் ஆலோசனைப்படி, தல்லாகுளம் பகுதியில் மாபெரும் அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை மாநில இளைஞரணி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் முருகன் சிறப்பாக செய்திருந்தார்.

இதில் அமைப்பின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் சார்பாக தீவிர பிரச்சாரம்..!

மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், கோ.புதூர் பேருந்து நிலையம் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு விஸ்வகர்ம மகாஜன மத்திய சங்க தலைவர் தங்கராஜ், பொதுச்செயலாளர் எஸ் என் பொன்ராஜ், மாநில பொருளாளர் எஸ் வி.கே ஆறுமுகம், மதுரை மாவட்ட தலைவர் டி.ராஜேந்திரன் உட்பட மாநில,மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோருக்கு பி.ஆர்.சி திருமுருகன் வரவேற்பு..!

மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து பெத்தானியாபுரம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ மற்றும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோரை 63-வது வட்டக் கழக பொருளாளர் மற்றும் மதுரை மண்டல அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் பி.ஆர்.சி திருமுருகன் ஆளுயர மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.

மதுரை மாநகர் வடக்கு 2-ஆம் பகுதி அதிமுக செயலாளர் வி.கணேசன் தலைமையில் வீடு,வீடாக சென்று வாக்கு சேகரிப்பு..!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து நரிமேடு, கட்டபொம்மன் நகர், மருதுபாண்டியர் நகர்,பீ.பீ.குளம், காலாங்கரை போன்ற பகுதிகளில் பகுதி கழகச் செயலாளர் வி. கணேசன் தலைமையில் வீடு வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறும் துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.

இந்நிகழ்வில் பொறுப்பாளர் வழக்கறிஞர் சுரேஷ், அவைத்தலைவர் முருகன் வட்டச் செயலாளர்கள் பால்பாண்டி, உதயா, சுரேஷ், மகேந்திரன் மற்றும் முத்துக்குமார், எஸ்.ரவி, என்.கோபால் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES