ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதன் மதுரை மாவட்ட நிர்வாகிகள் பெத்தானியாபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் என்ற கட்சியை சென்ற வருடம் நிறுவனத்தலைவர் குணசேகரன் நாயுடு தொடங்கினார்.
இந்நிலையில் கட்சி 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் எவர்கிரீன் ஜி.வி பாலமுருகன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை பெத்தானியாபுரம் நாயுடு சங்க செயலாளர் பொம்மை ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார்.
இதில் நிர்வாகிகள் ஜெ.கண்ணன், நாகராஜ், டி.எம் நாயுடு, கஜேந்திரன், டெய்லர் ரெங்கராஜ், அழகுராமானுஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் கட்சியின் இளைஞர் அணி தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.