75ம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம், காதக்கிணறு ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆரோக்கிய ஜெயந்தி ஸ்டாலின் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலர், தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஊராட்சியின் வரவு,செலவு கணக்குகளை கிராம பொதுமக்களிடம் ஊராட்சி செயலர் செல்லப்பா விவரித்து பேசினார்.
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் அவர்களின் சிறிய முயற்சியால், பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய டிராக்டர் மற்றும் ட்ரெய்லர் கிராமத்தின் தூய்மை பணிக்காக வாங்கப்பட்டு, கிராம சபை கூட்டத்தின் போது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.
மேலும் அன்னை தெரசா கார்டன்,ஜெம் ரெசிடென்சி பகுதிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கழிவுநீர் வாய்க்கால் பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. சுத்தம், சுகாதாரம், தெருவிளக்கு போன்றவைகளுக்கு முன்னுரிமை தரப்பட்டு ஊராட்சியில் உடனுக்குடன் குறைகள் சரி செய்யப்பட்டு வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்