75 வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்துமதி மற்றும் பி.டி.ஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தனவேலன் ஆகியோர் முன்னிலையிலும், 18-ஆம் படி சிலம்பம் அகாடமியின் தலைமை ஆசான் சிலம்பு செல்வன் மாரிமுத்து மற்றும் நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புரொபஷனல் எடிட்டர் தியாகராஜன் அவர்களின் தலைமையிலும் நோபல் உலக சாதனை முயற்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மதுரை மேலமடை பகுதியை சேர்ந்த தேமுதிக மாநகர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பாண்டியராஜன், தனலட்சுமி ஆகியோரின் மகள் ரிங் ரோட்டில் உள்ள நாராயணா இ-டெக்னோ பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவி கௌசிகா (வயது 11) மூன்று அடி பொய்க்காலில் நின்று கொண்டு இடைவிடாது இரண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்தார்.
இந்த சிறிய வயதில் நோபல் உலக சாதனை படைத்த அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்