மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது
தமிழக முதல்வர் அறிவித்துள்ள காலை உணவுத் திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்.
குழந்தைகளின் நலன் கருதி சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் முறையான கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல 6750 அகவிலைப்படி உடன் கூடிய ஓய்வு விதமாக வழங்கிட வேண்டும்.
இதுவரையிலும் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு பெறாத சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 வயதில் இருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் கௌரிஅம்மாள்,மாவட்ட பொருளாளர் முருகேஸ்வரி, அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்