Monday , August 4 2025
Breaking News
Home / Admin (page 55)

Admin

மக்கள் தொலைக்காட்சி நிர்வாகம் – சட்டப்படியான செட்டில்மெண்ட் ஊழியர்களுக்கு…

மக்கள் தொலைக்காட்சி நிர்வாகம், ஜூலை 31ஆம் தேதியுடன் சட்டப்படியான செட்டில்மெண்ட் கொடுத்து அனுப்ப இருப்பதாக ஊழியர்களிடம் தெரிவித்திருக்கிறது. சேனலை தொடர்ந்து நடத்தும் நிர்வாகம், ஊழியர்களிடம் மிகப் பொதுவாக அறிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 10, 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களையும் ஒற்றை அறிவிப்பில் வீட்டுக்கு அனுப்புவது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்பதுடன், தொழிலாளர் விரோத நடவடிக்கையும் ஆகும். எனவே ஊழியர்களைப் பணியில் இருந்து அனுப்பும் முடிவை மக்கள் தொலைக்காட்சி …

Read More »

மணப்பாறை மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு…

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 20 கலை அறிவியல் கல்லூரிகளைத் திறந்துவைத்து சாதனை படைத்துள்ளார். இதில் எமது கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாறை மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளையும் இன்று காணொளி வாயிலாகத் திறந்து வைத்துள்ளார்கள். இந்த கல்லூரிகள் அமைய வேண்டும் என்பது எமது மக்களின், மாணவர்களின் நீண்ட காலக் கனவு. அந்த கனவு இன்று …

Read More »

ஆப்பாடியான் பங்காளிகள் அறக்கட்டளை சார்பில் நினைவு பரிசுகள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த குழந்தைகளுக்கு…

87ஊர் ஆப்பாடியான் பங்காளிகள், மற்றும் மாமன், மைத்துனர்களின் குழந்தைகள் தற்போது நடந்த பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களும் 12ஆம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு மேல்பெற்றவர்களுக்கும். ஆப்பாடியான் பங்காளிகள் அறக்கட்டளை சார்பில் சிறப்பு செய்து நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Read More »

உதவித்தொகை 50,000-லிருந்து ரூபாய் ஒரு லட்சமாக உயர்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இலக்கிய மேம்பாட்டு பணி அமைப்பு நிதி மூலம் கிடைக்கும் வட்டி தொகையிலிருந்து பத்து ஆதிதிராவிடர் பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத இனத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் உள்ளிட்ட 11 எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்பினை தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தலா 50,000 அல்லது நூல் வெளியிட ஆகும் செலவு இவற்றில் எது குறைவோ,., அத்தொகையை வழங்கப்பட்டு வந்தது. …

Read More »

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் சார்பாக கரூர் மாநகராட்சி ‘எனது குப்பை எனது பொறுப்பு ‘என்ற விழிப்புணர்வு நிகழ்வு

தமிழக அரசு அறிவித்துள்ள தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் சார்பாக கரூர் மாநகராட்சி ‘எனது குப்பை எனது பொறுப்பு ‘என்ற விழிப்புணர்வு கள நிகழ்வை தான்தோன்றிமலை நகராட்சி பகுதியில் இன்று நடத்தியது. பொதுமக்களிடம் நேரில் சென்று தூய்மை ,வீட்டுத்தோட்டம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம். நமது மரியாதைக்குரிய கரூர் மாநகராட்சி ஆணையாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் ஆலோசனைப்படி நமது ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பு …

Read More »

ஜல்லிப்பட்டி: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா…

நேற்று உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது… உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியை சார்ந்த ஜல்லிப்பட்டி கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதற்காக கேட்டவுடன் 20 மரக்கன்றுகளை நன்கொடையாக அளித்த தலைவர் சுப்பிரமணி அவர்களுக்கும், மரக்கன்றுகளை நடுவதற்கு உறுதியாக இருந்த டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், பாலா அறக்கட்டளை, இளைஞர் குரல் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Read More »

ஜல்லிப்பட்டி: பல நாய்கள் கிராமத்தில் மிக மோசமான நோய்களைக் கொண்டு உலா…

மேலே படத்தில் உள்ள நாயைப் போல பல நாய்கள் ஜல்லிப்பட்டி கிராமத்தில் மிக மோசமான நோய்களைக் கொண்டு உலா வந்து கொண்டிருக்கின்றன… இது பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய ஒன்று… தயவுசெய்து தகுந்த முயற்சிகளை எடுத்து இதுபோன்ற நாய்களை அப்புறபடுத்துமாறு, பொது மக்கள் கேட்டு கொண்டனர்.

Read More »

இலங்கை:குழம்பிய குட்டையில் ஜரூராக மீன்பிடிக்கும் சீனா-அடுத்த பிரதமராகும் சஜித் பிரேமதாசவுடன் பேச்சு!

கொழும்பு: இலங்கையில் அதிஉச்சகட்ட அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளவராக கருதப்படும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாவை இலங்கைக்கான சீனாவின் தூதர் சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாத அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த நாடு பற்றி எரிகிறது. தென்னிலங்கை, வட இலங்கை என அனைத்து நிலமும் போர்க்களமாக உருமாறிக் கிடக்கிறது. …

Read More »

2017 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களுக்கான பரிசும், விருதும் வழங்கப்பட்டது – மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு

மிகவும் திருவள்ளுவராண்டு 2053, சுபகிருது, சித்திரைத் திங்கள் 16 ஆம் நாள் 29.04.2022 வெள்ளிக்கிழமை 11:30 மணிக்கு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அண்ணா கருத்தரங்க கூடத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 133 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் சிறந்த நூலாசிரியர்கள், பதிப்பகத்தார்களுக்கும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் அவர்கள் …

Read More »
NKBB TECHNOLOGIES