மிகவும் திருவள்ளுவராண்டு 2053, சுபகிருது, சித்திரைத் திங்கள் 16 ஆம் நாள் 29.04.2022 வெள்ளிக்கிழமை 11:30 மணிக்கு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அண்ணா கருத்தரங்க கூடத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 133 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் சிறந்த நூலாசிரியர்கள், பதிப்பகத்தார்களுக்கும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் அவர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி விழா பேருரை ஆற்றினார்.
இவ்விழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இதில் முக்கியமாக எழுத்தாளர்கள் இறையன்பு, ஏர்வாடி ராதாகிருஷ்ணன், ராசி அழகப்பன், வெண்ணிலா போன்ற எழுத்தாளர்கள் விருதுகளைப் பெற்றனர்.
சிறந்த நூல்களுக்கு ரூபாய் 30 ஆயிரம் அதை பதிப்பித்த பதிப்பகத்திற்கு 10 ஆயிரமும் வழங்கப்பட்டது.புதுக் கவிதை சிறுகதை நாவல் மரபுக்கவிதை மருத்துவம் கட்டுரை போன்ற பல்வேறு தலைப்புகளில் எழுதிய நூலாசிரியர்கள் வரிசை பெற்றனர்…..
2017 ஆம் ஆண்டிற்கான 33 எழுத்தாளர்களும் 2018 33 எழுத்தாளர்களும் விருதுகள் பெற்றனர். மேலும் பதிப்பாளர்களும் விருது அளிக்கப்பட்டது….