Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் (page 94)

செய்திகள்

All News

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக மதுரையைச் சேர்ந்த பூக்கடை கண்ணன் நியமனம்.!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக மதுரையைச் சேர்ந்த பூக்கடை கண்ணன் அவர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒப்புதலின்படி, மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் நியமனம் செய்துள்ளார்.

இதுகுறித்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாநில பொதுக்குழு உறுப்பினர் பூக்கடை கண்ணன் அவர்கள் கூறுகையில்:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினராக என்னை நியமனம் செய்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும், இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சொல்லின் செல்வர் மரியாதைக்குரிய ஐயா கே.எஸ்.அழகிரி அவர்களுக்கும் மற்றும் மாநில பொதுச் செயலாளர்கள் எஸ்.பி வரதராஜன், கே.ஜி.ரமேஷ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடக பிரிவு மாநில செயலாளர் நாஞ்சில் பால்ஜோசப் உள்பட
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரையில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்ட மறைந்த முன்னாள் காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில பொதுச் செயலாளர் மாமேதை பி.ஜே காமராஜ் அண்ணன் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், காங்கிரஸ் கட்சிக்காக என் உயிர் மூச்சு உள்ளவரை, தொடர்ந்து பணியாற்றுவேன்.

மதுரையில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கு தொடர்ந்து பாடுபடுவேன் என அவர் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அவர்களுக்கு, விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் வரவேற்பு.!!

காரைக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அவர்களுக்கு, பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி அவர்களின் சார்பாக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் துரைபாஸ்கர், மாவட்ட செயலாளர் சுரேஷ்,மாவட்ட திட்டக்குழு பொறுப்பாளர் அழகுராஜா, மாவட்டத் துணைத் தலைவர்கள் இளங்கோ, முனீஸ்,பிலால், பரவை மண்டல் தலைவர் சந்துரு, மாவட்ட துணைச் செயலாளர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் :மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.!!

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் நக்கீரன் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் போட்டோகிராபர் அஜித்குமார் ஆகியோர் மீது நடந்த கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், மதுரை மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் கதிரவன் தலைமை வகித்தார்.

“தமிழ்நாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களைத் தாக்குபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பத்திரிக்கையாளர் பாதுகாப்புச் சட்டம் உடனடியாக இயற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது பத்திரிகையாளர்கள் வலியுறுத்தி பேசினர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.!

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி, கிழக்கு மண்டல் 117 வது வட்டத்தில் (தாமஸ் சாலை) உள்ள 5 அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு பாஜக விவசாய அணி மாநில துணைத் தலைவரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான வளசை முத்துராமன் ஜி தலைமையில், மாவட்ட தலைவர் ராஜா அன்பழகன் ஏற்பாட்டில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் எழுத்து பயிற்சி புத்தகம், எழுது பொருட்கள் மற்றும் சத்து உணவுகள் ஆப்பிள்,ஆவின் பால் பன்,பிரட் மற்றும் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் வழங்கப்பட்டது.

மேலும் ஏழை தாய்மார்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் விவசாய அணி நிர்வாகிகள் மற்றும் மாநில, மாவட்ட ,மண்டல், கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்.!

தொடர்ந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த இவர் 2006-ல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். திமுகவில் தேர்தல் பணிக்குழு தலைவராக பணியாற்றி வந்தார்.

உயிரிழந்த சேடப்பட்டி முத்தையாவிற்கு சகுந்தலா என்ற மனைவியும், 2 மகள் மற்றும் 2 மகன் உள்ளனர். அவரது சொந்த ஊரான மதுரை, சேடப்பட்டி அருகே உள்ள முத்தப்பன்பட்டியில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

அவரது இறுதிச்சடங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையில் பாஜக விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் மோடி கபடி லீக் போட்டி.!!

பாரதப் பிரதமரின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் பாஜகவின் விளையாட்டு( ம) திறன் மேம்பாட்டு பிரிவின் மாவட்ட தலைவர் S.செந்தில்குமார் அவர்களின் தலைமையில் மோடி கபடி லீக் போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கற்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம. ஸ்ரீநிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் பேராசிரியர் கதலி நரசிங்கப்பெருமாள் இறுதி சுற்றை துவங்கி வைத்து பரிசுகளை வழங்கினர்.

மேலும் சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர் பாஜகவின் கூடுதல் பொறுப்பாளர் மகா சுசீந்திரன், கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம், கபடி கழக மாநில தலைவர் சோலை ராஜா விளையாட்டுப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர்கள் சுரேஷ்குமார், பிரகாஷ், மாவட்ட செயலாளர்கள் ஜெயபாலன், கராத்தே செல்வகுமார், வர்த்தகப்பிரிவு மாவட்ட செயலாளர் கோல்டு பிச்சை, திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல் தலைவர் இளையராஜா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஐராவதநல்லூரில் பாஜக வார்டு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!

மதுரை ஐராவதநல்லூரில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு பாஜக வார்டு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!



பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72 வது பிறந்தநாள் முன்னிட்டு, மதுரை மாநகர் 41 வது வார்டு ஐராவதநல்லூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாநில தலைவர் அண்ணாமலை, பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், மாவட்ட தலைவர் மகா சுசிந்திரன் ஆகியோர் உத்தரவுபடி அனுப்பானடி மண்டல் பொறுப்பாளர் மாவட்ட துணைத்தலைவர் ரோஜா ராணி அறிவுறுத்தலின்பேரில் கொடியேற்றி பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு வார்டு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் தலைமை வகித்தார். அனுப்பானடி மண்டல் பொதுசெயலாளர் ராம்தாஸ் முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயற் குழு உறுப்பினர் கோதண்டராமன், கிளைத்தலைவர் முருகன் ஆகியோர் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்..

மாவட்ட கூட்டுறவு பிரிவு சார்பில் மாவட்ட துணைத்தலைவர் மீசை முருகேசன் சுமார் 200 மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கினார்.

விழாவில் மாவட்ட மீனவரணி துணைத்தலைவர்கள் கார்த்திக்குமார், அருண், மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் வாசு, மகளிரணி செயலாளர் அம்பிகா, மண்டல் துணைத் தலைவர் ராஜீவ் காந்தி, செயலாளர் முருகன், மண்டல் கூட்டுறவு பிரிவு நிர்வாகிகள் மகேசுவரன், ராம் ராஜ், வெங்கடேசன், கிளைத்தலைவர்கள் சுந்தரபாண்டி, பன்னீர்செல்வம், மோகன், கார்த்திக்ராஜா, தசானம், செந்தில்குமார், பங்கேற்றனர்.

மதுரை மாவட்டச் செய்தியாளர் கனகராஜ்

தமிழக முதல்வருக்கு பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன் கோரிக்கை.!!

சென்னை,செப்.19:-

பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறையின் இயக்குனர் ஆகியோர்களுக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.

அந்தக் கோரிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:-

போலி ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் வேலைக்கு சென்று குடிவரவு அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட 4000 இந்தியர்கள் இந்திய தூதரக உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இதில் 2500 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மீதம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, உத்திர பிரதேஷ், மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 15 பேர் மட்டும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஏராளமானார் போலி ஏஜென்ட்களின் நயவஞ்சக வார்த்தைகளை நம்பி சுற்றுலா விசாவில் வேலைக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது. இருப்பினும் மலேசியா குடி வரவு அதிகாரிகள் இவர்களை தஸ்தா வேஜ்கள் அடிப்படையில் கண்டறிந்து கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே Not To Land என்ற முத்திரையிட்டு வந்த விமானத்திலேயே தாயகம் திருப்பி அனுப்பி வைக்கின்ற சம்பவங்கள் தினசரி நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.

அதே நேரத்தில் மலேசியாவில் விசா இல்லாமல் இருக்கும் நபர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தின் ஒப்புதலின்படி அவர்களை சிறையில் அடைக்கும் பணிகளையும் குடிவரவு அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். மலேசிய அரசாங்கம் பொது மன்னிப்பு வாய்ப்பை ஜூலை, 2022 மாதத்துடன் நிறுத்திக் கொண்டதால் விசா இல்லாமல் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப ரூபாய் 60 ஆயிரம் (3100 ரிங்கிட்) அபராதமாக செலுத்தி நாடு திரும்ப வேண்டும் என்ற சூழ்நிலை தற்பொழுது உள்ளது.

இதையெல்லாம் நன்கு அறிந்த போலி ஏஜெண்டுகள் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கிலும் மற்றவர்களின் வாழ்க்கையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கிலும் நயவஞ்சகத்துடன் பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்தியாவில் இருந்து தாய்லாந்து நாட்டிற்கு விமான மார்க்கமாக அழைத்துச் சென்று பிறகு தாய்லாந்து நாட்டிலிருந்து மலேசியா நாட்டிற்கு சட்டவிரோதமாக ஊடுருவச் செய்யும் வேலைகளை செய்து வருவது வேடிக்கையாக உள்ளது. எல்லையை கடக்கும் பொழுது குடிவரவு அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக எல்லையை கடப்பவர்களுக்கு வாழ்நாள் சிறை என்ற ஆபத்தை உணராமல் செயல்படுவது வருத்தத்தை அளிக்கின்றது. சில நேரங்களில் சட்டவிரோதமாக எல்லையை கடக்கும் பொழுது அந்நிய சக்திகள் ஊடுருவல் என்று அந்நாட்டு ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தும் அபாயமும் உள்ளது.

அந்நிய நாட்டுச் சிறையில் இந்தியன் மற்றும் தமிழன் மண்டியிட்டு கிடக்க கூடாது. அதனால் இச்செயலை செய்யும் போலி ஏஜெண்டுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது பற்றி விரிவான விழிப்புணர்வுகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தனது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் கொச்சையான வசனங்களின் மூலம் காங்கிரஸ் தலைவர் மற்றும் குடும்ப உறவுகள், பெண்கள் புகைப்படங்களை பதிவிட்டு அவமானப்படுத்தி வரும் கரூர் மாவட்ட பாஜக வினர்….

சமூக ஊடகங்களில் கொச்சையான வசனங்களின் மூலம் காங்கிரஸ் தலைவர் மற்றும் குடும்ப உறவுகள், பெண்கள் புகைப்படங்களை பதிவிட்டு அவமானப்படுத்தி வரும் கரூர் மாவட்ட பாஜக வினர்.

திரு ராகுல் காந்தி அவர்களின் சொந்த சகோதரி மகளுடன் தனிப்பட்ட குடும்ப விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை எடுத்து அதற்கு கொச்சையான வசனங்களை இணைத்து அருவருக்கத்தக்க வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பாஜக வினர் பரப்பி வருகின்றனர்.

இதனைக் கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அதன் முக்கிய நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் தெரிவித்து அத்தகைய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கே.புதூர் பகுதியில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதிகளில், மாநில தலைவர் அண்ணாமலை ஆணைக்கினங்க, பாஜக மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்தரன் ஆலோசனைப்படி, பேராசிரியர் ராம.சீனிவாசன் மற்றும் புதூர் மண்டல் பொறுப்பாளர் மற்றும் கூட்டுறவு பிரிவு மாநிலச் செயலாளர் பாஸ்கரன் ஜி ஆகியோர் வழிகாட்டுதலின்படியும், மண்டல் தலைவர் மாணிக்கம் தலைமையில்
கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பின்னர் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம்,நீர் மோர் பந்தல், இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம், மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல், ஜோதி மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுரேஷ், மணிவண்ணன், மீனா,ராஜ்குமார், ஜனார்த்தனன், ராம்குமார், ஹரி, துரைமாறன், ஆதிஸ்வரன், கந்தன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES