Saturday , February 22 2025
Breaking News
Home / செய்திகள் (page 36)

செய்திகள்

All News

“காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்!” – திருமாவளவன்

"காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்!" - திருமாவளவன்

அரியலூர்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என சிதம்பரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளரும், அக்கட்சியின் தலைவருமான திருமாவளவன் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை, நக்கம்பாடி, சொக்கநாதபுரம், நமங்குணம், வஞ்சினபுரம், மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, படைவெட்டிக்குடிக்காடு, அயன்தத்தனூர், குழுமூர், அங்கனூர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, ‘அம்பானி, அதானிக்காகவே பிரதமர் மோடி 10 ஆண்டு கால ஆட்சியை நடத்தினார். அம்பேத்கர் எழுதிய அரசமைப்பு சட்டத்தை மாற்றுவதே பாஜகவின் நோக்கம். எனவே, அரசமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க பானை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்’ எனக் கூறி வாக்கு சேகரித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, விளிம்புநிலை மக்களை மீட்கும் அறிக்கை. வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை சீர்செய்யும் அறிக்கை.

மத்திய அரசுப் பணியில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பை உயர்த்துவது, நீட் தேர்வில் மாநில அரசின் முடிவுக்கே விடுவது, பொதுப் பட்டியலில் உள்ளவற்றை மாநில பட்டியலுக்கு மாற்றுவது உள்ளிட்டவை வரவேற்கத்தக்க திட்டங்கள்.

இத்திட்டங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளன. எனவே, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர். இவ்வாறு அவர் கூறினார்.

பிரச்சாரத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மற்றும் மக்கள் சேவை இயக்கம், உலக மகளிர் கழகம் இணைந்து நடத்திய முப்பெரும் விழா

மதுரை காந்தி மியூசியத்தில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மற்றும் மக்கள் சேவை இயக்கம், உலக மகளிர் கழகம் சார்பாக உலக மகளிர் தின விழா மற்றும் மாற்றுத்திறனாளிகள் தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது.


இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நிறுவனத் தலைவர் கா.ஜெயபாலன், பொதுச் செயலாளர் சூர்யா வெற்றிகொண்டான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்நிகழ்விற்கு தலைமை நிலைய செயலாளர் திருமதி பிரியா கிருஷ்ணன் தலைமை வகித்தார்.ஓய்வு பெற்ற நீதிபதி சடையாண்டி முன்னிலை வகித்தார்.


இதில் உலக மகளிர் கழக நிறுவனர் திருமதி ராணி நல்லமுத்து, பொருளாளர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் சோலைமலை, துணைதலைவர் வெள்ளிங்கிரி, ரவீந்திரன், முத்துமுருகன், முரளிதரன் சிவாச்சாரியார்,துணை மேயர் நாகராஜ், நுகர்வோர் நீதிபதி திருமதி பாக்கியலட்சுமி, உலக மகளிர் கழகம் சுசிலா செந்தாமரை, ஜெயக்குமார், சுகுமார்,இளவரசன், சுரேஷ், திருமதி மெகராஜ், முருகேஸ்வரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை பாலரங்காபுரம் பகுதியில் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த பாஜக நிர்வாகிகள்..!

பாஜக பாராளுமன்ற வேட்பாளர் பேராசிரியர் இராமஸ்ரீநிவாசனை ஆதரித்து மதுரை பாலரங்காபுரம் பகுதியில் தமிழ் இலக்கிய மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே ஞானேஸ்வரன், நெசவாளர் பிரிவு பாலரங்கபுரம் மண்டல் தலைவர் டி.கே.குமரன், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணி ஆறுமுகம் ஆகியோர் வீடு வீடாக நோட்டீஸ் வழங்கி வாக்கு சேகரித்தனர்.

பாஜக மதுரை வேட்பாளர் பேராசிரியர் இராம சீனிவாசனை ஆதரித்து சமுதாய தலைவர்களிடம் வாக்கு சேகரிப்பு

மதுரை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் பேராசிரியர் இராமஸ்ரீநிவாசனை ஆதரித்து, சமுதாய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோரை சந்தித்து, பாஜக நகர் மாவட்ட துணைத் தலைவர் வினோத்குமார், ஓ.பி.சி அணி மாவட்ட தலைவர் வேல்முருகன், மாவட்ட துணைத் தலைவர் ஜனா ஸ்ரீ முருகன், தமிழ் இலக்கிய மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே ஞானேஸ்வரன், மாவட்ட செயலாளர் சரவணகுமார், ஓ.பி.சி அணி மாவட்ட பார்வையாளர் லட்சுமி நாராயணன்,கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் செந்தில்வேல் உள்ளிட்டோர் ஆதரவு திரட்டினார்கள்.

“விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் பாஜக” : மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு!

"விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் பாஜக" : மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு!

ED,IT,CBI உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிய பாசிச பா.ஜ.க மிரட்டி வருகிறது.

மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான எதிர்க்கட்சி தலைவர்களை பா.ஜ.கவில் இணையவைப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

பா.ஜ.கவில் இணைந்துவிட்டால் அவர்களது ஊழல் வழக்குகள் காணாமல் போய்விடுகிறது. அப்படி இல்லை என்றால் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு.

இந்நிலையில் 10 ஆண்டுகால மோடி ஆட்சியில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேர் பா.ஜ.க.,வில் சேர்ந்துள்ளனர் என்று “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இக்கட்டுரையை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள சமூகவலைத்தளப் பதிவில், சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு, அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்கள், பா.ஜ.க.வில் இணைந்தால் மோடி வாஷிங்மெஷின் மூலம் தூய்மையாகின்றனர் என்று சாடியுள்ள அவர், 2014 ஆம் ஆண்டு முதல் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 25 தலைவர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் பா.ஜ.க. வில் இணைந்ததும் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டது அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி யின் செயல், ஜனநாயகத்திற்கு சாபமாக மாறியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான விசாரணை அமைப்புகளின் வழக்குகள் குறித்த புலனாய்வு அறிக்கையை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பா.ஜ.க.வுடன் சேர்ந்ததால் ஆதாயமடைந்த 25 பேரில் அஜித் பவார், பிரஃபுல் படேல் உள்ளிட்ட 12 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள், பா.ஜ.க.வில் இணைந்தால் மோடி வாஷின்மெஷின் மூலம் சுத்தப்படுத்தப்படுகிறார்கள் என்பது இதன்மூலம் தெரிய வருவதாக கார்கே குறிப்பிட்டுள்ளார்.

“திமுக ஆட்சியில்தான் பெண்கள் மகிழ்ச்சி” – திண்டுக்கல்லில் லியோனி பிரச்சாரம்

"திமுக ஆட்சியில்தான் பெண்கள் மகிழ்ச்சி" - திண்டுக்கல்லில் லியோனி பிரச்சாரம்

திண்டுக்கல்: திமுக ஆட்சியில் பெண்கள்தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கி றார்கள் என தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி பேசினார்.

திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி பேசியதாவது: திமுக ஆட்சியில் பெண்கள்தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இலவசப் பயணம், மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை என தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு கொடுத்து வருகிறார்.

ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஒற்றை விரலால் மண்டையைத்தான் சொறிய முடியும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வருகிறார். பாஜகவின் கபட நாடகம் முடிவுக்கு வர இருக்கிறது, என்றார்.

1 ரூபாய் தமிழகம் வரி கொடுத்தால் திரும்பி வருவது 29 பைசா தான் : கனிமொழி தேர்தல் பிரச்சாரம்…

1 ரூபாய் தமிழகம் வரி கொடுத்தால் திரும்பி வருவது 29 பைசா தான் : கனிமொழி தேர்தல் பிரச்சாரம்

விருதுநகர் : விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து கனிமொழி எம்.பி. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகிறார். நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் எனக்கு புரியாத மொழியில் பதில் வருகிறது. 1 ரூபாய் தமிழகம் வரி கொடுத்தால் திரும்பி வருவது 29 பைசா தான்,”இவ்வாறு தெரிவித்தார்.

இன்று காலை கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திரு.ஜோதிமணி அவர்கள் சுற்றுப்பயணம்!

Image

இன்று 03/04/2024 காலை கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் : கேர்நகர், அண்ணாநகர், சௌந்திராபுரம், மொடக்கூர் கீழ்பாகம் ஊராட்சி – வடுகபட்டி ஆகிய பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கரூர் மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அன்பிற்குரிய அண்ணன் திரு. அப்துல்லா எம்.பி அவர்கள், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.மொஞ்சனூர் இளங்கோ ஆகியோர் தலைமையில், கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் திரு. சின்னசாமி அவர்கள் முன்னிலையில். அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி திமுக பொறுப்பாளர் திருமிகு. மீனா ஜெயக்குமார் அவர்கள், ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகத்தின் செயலாளர் அண்ணன் திரு எம்.எஸ். மணி அவர்கள், வட்டாரத் தலைவர் அண்ணன் திரு. காந்தி அவர்கள், நாகம்பள்ளி பேரூராட்சி தலைவர் அண்ணன் திரு. மணி அவர்கள், ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் அண்ணன் திரு. பூபதி ஆகியோருடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இரண்டரை ஆண்டுகால பொற்கால ஆட்சி மற்றும் எனது ஐந்தாண்டு சாதனைகளை மக்களின் பேராதரவோடு விளக்கமாக எடுத்துரைத்தோம். மிகுந்த அன்போடும், மகிழ்ச்சியோடும் வரவேற்பு அளித்த அப்பகுதி தாய்மார்கள், பெரியோர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி நமதே!

நேற்று கரூரில் பிரச்சாரப் பொதுக்கூட்டம்!

கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதியாரின் நல்வாழ்த்துக்களுடன்,

கழக இளைஞரணிச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களது வாழ்த்துக்களுடன், கரூர் மண்ணின் மைந்தர் மாண்புமிகு எங்கள் அமைச்சர் அண்ணன் V செந்தில்பாலாஜி அவர்களது ஆதரவு பெற்ற,

கரூர் நாடாளுமன்ற தொகுதி திமுக, காங்கிரஸ் இந்தியா அணி கூட்டணி வேட்பாளர் செல்வி
செ ஜோதிமணி அவர்கள் மகத்தான வெற்றி பெற,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு செல்வப் பெருத்தகை MLA அவர்கள்,

இன்று 2.4.2024 செவ்வாய் மாலை 7 மணிக்கு,

கரூர் மாநகரம், உழவர் சந்தை அருகே நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் திரளாக கூடியிருந்த பொதுமக்களிடத்திலே கைச்சின்னத்திற்கு ஆதரவு திரட்டி எழுச்சியுரையாற்றினார்.
தொகுதிப் பொறுப்பாளர் புதுகை அப்துல்லா எம்பி உள்ளட்ட நிர்வாகிகள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

திருவண்ணாமலையில் நடந்தே சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவண்ணாமலையில் நடந்தே சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவண்ணாமலையில் நடந்து சென்று திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES