Saturday , March 21 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் கடுமையான வெயிலில் மக்களை காக்கும் விதமாக நீர்,மோர் வழங்கிய தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள்..!
NKBB Technologies

மதுரையில் கடுமையான வெயிலில் மக்களை காக்கும் விதமாக நீர்,மோர் வழங்கிய தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள்..!

பொதுமக்களின் நலன் கருதி சமூக அக்கறையுடன் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் மதுரை மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மக்களவைத் தேர்தல் 2024 தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதையொட்டி பொதுமக்கள் அனைவரும் 100% வாக்கினை பதிவு செய்ய வேண்டும், ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் எம்.கணேஷ், செயலாளர் ஆ.மாயகிருஷ்ணன், பொருளாளர் கவிதா, துணைத்தலைவர்கள் சிவ.கதிரவன், பாலா, இணைச்செயலாளர் சிதம்பரம், செயற்குழு உறுப்பினர்கள் கார்த்தி, வெங்கடேஷ், சுரேஷ், உறுப்பினர் அஜித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES