தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க கோரி பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் துரைபாஸ்கர், மேற்கு மாவட்ட தலைவர் சி.ரத்தினசாமி, கிழக்கு மாவட்ட தலைவர் பூமிராஜன் ஆகியோர் ஏற்பாட்டில் மதுரை புதூர் பேருந்து நிலையம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநில செயற்குழு உறுப்பினர் மு.மு.க. செந்தூர்பாண்டியன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மாநகர், கிழக்கு, …
Read More »மதுரையில் இந்திய சிலம்பம் அறக்கட்டளை மற்றும் வேல்டு ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்டு இணைந்து உலக சாதனை முயற்சி
இந்திய சிலம்பம் அறக்கட்டளை மற்றும் வேல்டு ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்டு இணைந்து உலக சாதனை முயற்சி மதுரை,டிச.27- இந்திய சிலம்பம் அறக்கட்டளை மற்றும் வேல்டு ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்டு இணைந்து நடத்திய பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கண்களை கட்டிக்கொண்டு ஒரு மணி நேரம் இடைவிடாமல் தொடர்ந்து சிலம்பம் சுழற்றும் உலக சாதனை முயற்சி மதுரை எஸ்.எஸ்.காலனியில்நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இந்திய …
Read More »அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் மதுரை ராமராயர் மண்டபம் கிளை சார்பாக அன்னதானம்
அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பாக மதுரை ராமராயர் மண்டபம் கிளை சார்பாக 12 ஆம் ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு மாபெரும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. முன்னதாக அன்று காலை சிறப்பு தீபராதனை,பஜனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் குருநாதர் மலைராஜன், சுந்தரமகாலிங்கம், ஆர்.சி.மணிகண்டன், மருதுபாண்டியன், பி.கே.ராஜா, வெங்கடேஸ்வரன், ஆறுமுகம், மன்னாதிமன்னன் மற்றும் சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இளைஞர் குரல் …
Read More »நேதாஜி சுபாஷ் சேனை மாநிலச் செயலாளர் சுமன், வேலுநாச்சியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்
வீரமங்கை வேலுநாச்சியாரின் 227-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் உள்ள அவரது நினைவிடத்தில், நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில செயலாளர் சுமன்தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் சக்திவேல் பாண்டியன், களஞ்சியம் முருகன், தத்தனேரி கார்த்திக், சேதுபதி, நிர்மல்குமார், பாலா உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Read More »தென்இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்
தென்இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக ஜனவரி 7ஆம் தேதி அன்று மதுரையில் நடக்க உள்ள மாவட்ட மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை கண்மாய்கரையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசுகையில் :- வரும் ஜனவரி 07 ஆம் தேதி அன்று நமது கட்சி சார்பாக மாவட்ட மாநாடு சிறப்பாக நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் …
Read More »அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக ஒட்டன்சத்திரத்தில் கருத்தரங்கு.
பழனி அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக விவசாயிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசினார். மேலும் இந்நிகழ்வின் போது அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவராக நவீன்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு விவசாயிகள் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Read More »பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
மதுரையில் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாவட்ட மாவட்டத் தலைவர் பி.வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். பிரிவுனுடைய மாவட்ட பார்வையாளர் மோடி சங்கர் முன்னிலை வகித்தார். தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும்,பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே.ஞானேஸ்வரன் அவர்கள் வழி காட்டினார். இக்கூட்டம் தமிழ் இலக்கிய மற்றும் …
Read More »ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய கோரி தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்கத்தினர் மதுரையில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்கம் சார்பாக ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.எஸ் சரவணன் தலைமை வகித்தார். ஆலோசகர் கோபாலகிருஷ்ணன், கோவை சுரேஷ்பாபு, பெரம்பலூர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைவர் நடராஜன், பொதுச்செயலாளர் எம்.எஸ் சரவணன், பொருளாளர் திருலோகசந்தர், நிர்வாக செயலாளர் ராமச்சந்திரன், முதன்மைத் தலைவர் மகேந்திரன் உள்பட ஏராளமானோர் …
Read More »மதுரை எல்லீஸ் நகர் அருகே போடி லைன் அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்
மதுரை எல்லீஸ் நகர் அருகே உள்ள போடி லைன் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில், ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி, ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 13/12/2023 புதன்கிழமை அன்று கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. பின்னர் மறுநாள் வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு மேல் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின்னர் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் …
Read More »நரசுஸ் மணி இல்ல திருமண விழாவில் அண்ணாநகர் முத்துராமன் பங்கேற்று வாழ்த்து
மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் தெற்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகி நரசுஸ் எஸ்.மணி இல்லத் திருமண விழா நடைபெற்றது. , இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும் சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் மணமக்கள் ஆதிசங்கரி – ராஜேஷ்கண்ணன் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இவ்விழாவில் போட்டோகிராபர் எம்.ராமலிங்கம், …
Read More »