தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்கம் சார்பாக ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.எஸ் சரவணன் தலைமை வகித்தார். ஆலோசகர் கோபாலகிருஷ்ணன், கோவை சுரேஷ்பாபு, பெரம்பலூர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தலைவர் நடராஜன், பொதுச்செயலாளர் எம்.எஸ் சரவணன், பொருளாளர் திருலோகசந்தர், நிர்வாக செயலாளர் ராமச்சந்திரன், முதன்மைத் தலைவர் மகேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆன்லைன் வர்த்தகத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார்.
ஆன்லைன் வர்த்தகத்தை முழுமையாக தடை செய்திட வேண்டும். மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு அளித்திட வேண்டும்.
ஒரே மருந்து ஒரே விலை ஏற்படுத்திட வேண்டும்.
மருந்து கடைகளுக்கு மின்சார கட்டணத்தில் இருந்து சலுகை அளித்திட வேண்டும். போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.