அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரியும், அனைத்து முக்குலத்தோர் நலக் கூட்டமைப்பு தலைவருமான எம்.சம்பத் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை,முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்.
திருப்பரங்குன்றத்தில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்கும் திட்டம்..
மதுரை திருப்பரங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கும் பணியை இன்று முதல் ஆறு நாட்களுக்கு வீடு வீடாக சென்று 50 க்கும் மேற்பட்ட குழுவினர் களப்பணியில் ஈடுபட உள்ளனர்.
மருத்துவ சேவை செய்து வரும் இந்த குழுவினருக்கு நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் சார்பாக நிறுவனத் தலைவர் ஸ்டார் குரு அவர்கள் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதற்கான தொடக்க விழா திருப்பரங்குன்றத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் டாக்டர் ஏ.பூபேஷ்குமார் வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் ஹார்விப்பட்டி குமார் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ் மாணவர்களின் சிறப்பு முகாம்..!
NSS சிறப்பு முகாம் நிறைவு விழா
பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியின் என் எஸ் எஸ் மாணவர்களின் சிறப்பு முகாம் மருவத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 30/09/2024 முதல் 06/10/2024 முடிய நடைபெற்றது.
பள்ளி வளாக தூய்மை, மருவத்தூர் முனியப்பா கோவில், அய்யனார் கோவில் உழவாரப்பணி 50 மரக்கன்றுகள் மற்றும் விதைகள் நடுதல் , போதைப்பொருள் விழிப்புணர்வு
பேரணி , முழு சுகாதாரம் கழிப்பறை பயன்படுத்துதல் விழிப்புணர்வு பேரணி கருத்தரங்கம் பிளாஸ்டிக் ஒழிப்பு மஞ்சப் பையின் பயன்பாடு ,மழைநீர் சேகரிப்பு பேரணி, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ,உயர்க் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளையும் மிகவும் சிறப்பாக நடத்திய முதுகலை ஆசிரியர் மற்றும் NSS திட்ட அலுவலர் ப.பஞ்சாபகேசன் அவர்களை NSS மாவட்ட தொடர்பு அலுவலர் K.செல்ல பாண்டியன் ,மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சத்யா முருகன், தொழிற்கல்வி ஆசிரியர் பு.செங்குட்டுவன் ,முதுகலை ஆசிரியர் க. ஜெயராமன் வாழ்த்து தெரிவித்தனர்.என்எஸ்எஸ் திட்ட உதவி அலுவலர் ப.வேல்முருகன் நன்றி தெரிவித்தார் .
தந்தையை இழந்த கல்லூரி மாணவனுக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கிய சிங்கப்பூர் குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர்…!
சிவகங்கை மேலமங்கத்தில் வசித்து வரும் கனரக ஊர்தி ஓட்டுநரான ஜோர்ஜ் டோமினிக்(49)அவர்கள் கடந்த மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார்.
இவரது மூத்த மகனான அலோசியஸ் என்பவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பெட்ரோலியம் என்ஜினியரிங் துறையில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார். மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பமாக இருந்தாலும் தன் மகனை படிப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தந்தை இரவு பகலாக வேலை செய்து இவரது படிப்பிற்கான செலவுகளை கவனித்து வந்தார்.
திடீரென ஜோர்ஜ் டோமினிக் மாரடைப்பால் மரணமடைந்த காரணத்தினால், அவருடைய மூத்த மகனான அலோசியஸ் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்.
இதை அறிந்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் அவர்கள், சிங்கப்பூரில் செயற்பட்டு வரும் தொண்டு நிறுவனமான குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர் முனைவர் மணிவண்ணன் நாச்சியப்பன் அவர்களிடம் இந்த மாணவனின் நிலையைப் பற்றித் தகவல் தெரிவித்தார்.
மாணவனின் குடும்ப நிலையைக் கேட்டறிந்த முனைவர் மணிவண்ணன் நாச்சியப்பன் மாணவனின் கல்விக் கட்டணம் முழுவதையும் பொறுப்பேற்று ஒரு இலட்சம் ரூபாயை நன்கொடையாக அனுப்பி வைத்தார்.
இப்பணத் தொகையினை கடந்த ஞாயிறு அன்று மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து முனைவர் நீலமேகம் நிமலன் அவர்கள் அந்த மாணவனின் தாயார் செல்வியிடம் வழங்கினார். நிதியுதவியை பெற்றுக் கொண்ட அவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், நிகழ்வில் பங்கு கொண்ட 600 ற்கும் மேற்பட்டவர்களிடம் பேசிய முனைவர் நீலமேகம் நிமலன் மாரடைப்பு வராமல் தடுப்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இளைஞர் குரல் செய்தியாளர் மதுரை கனகராஜ்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு K V தங்கபாலு Ex MP, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு ராஜேஷ்குமார் MLA, தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் திரு ரூபி மனோகரன் MLA ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு கணேஷ் MLA, திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் திரு.ராபர்ட் புருஸ் MP அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில மாவட்ட நிர்வாகிகள், கேரள மாநில மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கு.செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிக்கை…
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் பரப்புரையில் நரேந்திர மோடி நிறைய வாக்குறுதிகளை கொடுத்து 2019 வரை அதை நிறைவேற்றாமல், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி 2024 மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையில்லாத நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் சிறுபான்மை, பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சின் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டன. விவசாயிகளுக்கு எதிராக அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்க 2021 இல் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் போது, சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டுமென்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். அதை நிறைவேற்றி பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கி, சமூகநீதி பெறுகிற வாய்ப்பை அளிக்க பிரதமர் மோடி தயாராக இல்லை.
பிரதமர் மோடி ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்கு பதிலாக பிரதமர் மோடி அலுவலகத்தில் அதிகார குவியல் ஏற்பட்டு ஜனநாயக விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரி போல பிரதமர் மோடி செயல்பட்டதற்கு கடிவாளம் போடுகிற வகையில் மக்களவை எண்ணிக்கையில் 60 சதவிகிதம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், 40 சதவிகிதம் இந்தியா கூட்டணிக்கும் மக்கள் வாக்களித்து ஜனநாயகத்தை செழுமைப்படுத்தியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணியின் சார்பாக எதிர்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல்காந்தியின் ஆணித்தரமான வாதங்களை எதிர்கொள்ள பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களால் முடியவில்லை.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தாமஸ் பிக்கெட்டி அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன்படி, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததை காட்டிலும் சமமின்மை அதிகம் உடையதாக பிரதமர் மோடி ஆட்சி செயல்படுகிறது. இந்தியாவில் உயர்நிலையில் உள்ள 1 சதவிகித நபர்கள் 70 சதவிகித சொத்துகளை குவித்து வருவதாக ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்களை வெளியிட்டது. அதேநேரத்தில் ஏழை, எளிய மக்களுக்காக அன்னை சோனியா காந்தி கொண்டு வந்த உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ஒவ்வொருவருக்கும் 5 கிலோ உணவு தானியம் 80 கோடி மக்களுக்கு 2008 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வந்தது. இந்தியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள நாடாக மாற்றி மூன்றாவது நிலைக்கு கொண்டு வருவேன் என்று கூறிவருபவர் நரேந்திர மோடி. ஆனால், அவரது ஆட்சியில் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு 80 கோடி மக்களுக்கும் இலவச உணவு தானியம் வழங்குகிற நிலையில் தான் அவரது ஆட்சி நடைபெற்று வருகிறது. உலக பசி குறியீட்டில் இந்தியா 125 நாடுகளில் 111-வது இடத்தில் இருக்கிறது. 20 கோடி மக்களை வறுமையிலிருந்து விரட்டியதாக கூறிய மோடி ஆட்சியில் வறுமை ஒழிப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
பிரதமர் மோடி ஆட்சியில் தொடர்ந்து கோடீஸ்வரர்கள் மேலும் கோடீஸ்வரர்களாக ஆவதற்கு நாட்டின் வளங்களை சூறையாடி சொத்துகளை குவித்து வருகிறார்கள். கடந்த ஜூலை 2024 ஹ{ரூன் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் நம்பர் 1 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. 2020 ஆம் ஆண்டில் நான்காவது இடத்தில் இருந்த கௌதம் அதானி, தற்போது நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டை விட அதானியின் சொத்து மதிப்பு 95 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் அதானியின் சொத்து மதிப்பு ரூபாய் 10 லட்சம் கோடிக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே கோடீஸ்வரர்களை உருவாக்கும் நாடாக இந்தியா மாறி வருகிறது. சீனாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 25 சதவிகிதம் சரிந்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் 29 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.
கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளிலும் ஒரு கோடீஸ்வரரை மோடி ஆட்சி உருவாக்கி சாதனை படைத்துள்ளது. 2023 இல் 259 கோடீஸ்வரர்கள் இருந்தனர். அது நடப்பாண்டில் 334 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 159 லட்சம் கோடியாக உயர்ந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 50 சதவிகிதமாக உயர்ந்திருப்பதன் மூலம் மோடி ஆட்சி யாருக்காக நடக்கிறது ? அதானி, அம்பானி உள்ளிட்ட கோடீஸ்வரர்களை மேலும் கோடீஸ்வரர்களாக ஆக்கி அதன்மூலம் தேர்தல் பத்திர நன்கொடையை குவித்து தேர்தல் களத்தில் சமமின்மையை உருவாக்கி, அதன்மூலம் தேர்தலில் வெற்றி பெற்றவர் தான் பிரதமர் மோடி. மோடி ஆட்சி நடப்பது கோடீஸ்வரர்களுக்கான ஆட்சியே தவிர, நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கானதாக இல்லை என்பதையே கோடீஸ்வரர்களின் சொத்து குவிப்பு விவரம் உறுதிப்படுத்துகிறது.
எனவே, மோடி ஆட்சி என்பது அப்பட்டமான ஒரு மக்கள் விரோத ஆட்சி என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டு உரிய பாடத்தை உரிய நேரத்தில் நிச்சயம் வழங்குவார்கள்.
விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை…
மாண்புமிகு திரு : உதயநிதிஸ்டாலின் அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து சர்வதேச அளவில் தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தப்பட வேண்டும்; தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் திறம்பட வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர். அவ்வகையில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி தமிழ்நாட்டிற்கு மேலும் புகழ் சேர்த்திட எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார் திரு.கு.செல்வப்பெருந்தகை MLA தலைவர்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி