Tuesday , December 3 2024
Breaking News
Home / செய்திகள்

செய்திகள்

All News

அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக கரூர் விஷன் 2030 நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்….

வணக்கம்..! அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக President செந்தில் விஷ்ணு ராம், CII அமைப்பு சார்ந்த சேர்மன், கோ சேர்மன், அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்கள் கிளப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

YouTube player

கரூர் விஷன் 2030, கரூரின் வளர்ச்சிக்காக பல சங்கங்களை ஒன்றிணைத்து அதில் எங்கள் சங்கத்தையும் இணைத்தமைக்கு எங்களது மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

– அரவக்குறிச்சி ரோட்டரி கிளப்.

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்:

*வயது மற்றும் சொந்த ஊர்*: கரூர் மாவட்டம், குறிப்பாக பால்வார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் யோகாஸ்ரீ.

*குடும்பம்*: அவளது தந்தை கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார், டைல்ஸ் பதித்து வருகிறார், மேலும் அவளது பாடும் ஆசைக்கு அம்மா உறுதுணையாக இருக்கிறார்.

*கல்வி மற்றும் பாடிய அனுபவம்*: யோகாஸ்ரீ பல்வேறு கோவில் திருவிழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மாநில அளவிலான போட்டியில் கூட வெற்றி பெற்றதாக குறிப்பிட்டார்.

*சவால்கள்*: யோகாஸ்ரீயின் குடும்பம் நிதிச் சிக்கல்களை எதிர்கொள்கிறது, இதனால் அவர் பாடும் பாடத்தைத் தொடர்வது சவாலானது. அவளுடைய ஆசிரியர் இலவச வகுப்புகளை வழங்கினார், ஆனால் கூட, அவளுடைய தந்தை ₹1 கட்டணத்தை வாங்க சிரமப்பட்டார்.

*உத்வேகம் மற்றும் இலக்குகள்*: யோகாஸ்ரீயின் ரோல் மாடல் ஸ்ரேயா கோஷல்

மேலும் அவர் தனது ஆசிரியரின் ஊக்கத்தால் ஈர்க்கப்பட்டு புகழ்பெற்ற பாடகியாக வேண்டும் என்று கனவு காண்கிறார். போட்டியில் வெற்றி பெற்று தன் குடும்பத்தின் நிலையை மேம்படுத்துவதே அவளது குறிக்கோள்.

யோகஸ்ரீயின் மன உறுதியும் பாடும் ஆர்வமும் தான் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியிலும் மிளிர்கிறது.

கரூரில் இளைஞர்களுக்கு இலவசமாக ஈஷா யோகா 7 நாள் வகுப்பு…

🤩 இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

💥 கரூரில் இலவசமாக ஈஷா யோகா 7 நாள் வகுப்பு
இளைஞர்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்படுகிறது ! 🤩

📅 நவம்பர் 20-26, 2024
⌚ 6:00 – 8:30 AM / 6:00 – 8:30 PM
🧘🏻‍♀️ வயது: 15 முதல் 25 வரை

சிறப்பம்சங்கள்:
🧐 கவனக் குவிப்பு & ஞாபக சக்தி மேம்படும்
🧘 உடல் & மன நலன் மேம்படும்
🤓 பயம், பதற்றம் & மன அழுத்தத்திலிருந்து வெளிவர உதவும்
🔱 சக்திவாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவிற்கு தீட்சை

உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வல்லமை கொண்ட இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள் ! 🌟

இலவச பதிவிற்கு:
https://isha.co/youthiyp-karur

🌍 இடம்: கொங்கு வேளாளர் திருமண மண்டபம் (சின்ன கொங்கு மண்டபம்), 5வது குறுக்கு சாலை, காமராஜபுரம், கரூர்
📞 8300062000, 8838291255

📍 கூகுள் மேப்: https://maps.app.goo.gl/mrwcfJMsvwUMgYKu5

மதுரையில் ஏழை, எளிய மக்களுக்கு 250-வது நாளாக உணவளித்து வரும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை..

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கும், அவர்களுடன் உடன் இருப்பவர்களுக்கும் தொடர்ந்து இடைவிடாமல் 250-வது நாளாக உணவு வழங்கி வரும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

மதுரையில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்கள் வைகை ஆற்றை காக்கும் விதமாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் இடம் அருகே உள்ள கல்பாலத்தில் ஆகாயத்தாமரைகள் தொடர்ந்து அகற்றி வருகிறார்.

மேலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், நோயாளிகள் மற்றும் அவர்களை கவனித்து வரும் காப்பாளர்கள் என தினமும் ஆயிரம் பேருக்கு,உணவு, குடிநீர், மற்றும் பழங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இந்த அருமையான சேவையால் இதுவரை சுமார் இரண்டரை லட்சம் பேர்கள் பயனடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்களின் தலைமையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் 250-வது நாள் உணவு வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ஜஸ்டின் பிரபாகரன் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு, குடிநீர், ஆப்பிள் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

உணவு வாங்குவதற்காக வந்த ஒரு முதிய பெண்மணி நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்களை நோக்கி கும்பிட்டு, நீங்கள் வழங்கும் உணவு தினமும் பயனுள்ளதாக இருப்பதாகவும், உங்களது சேவை தொடர்ந்து நடைபெற கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என கூறிச் சென்றதை காணும் போது நெகிழ்ச்சியாக இருந்தது.

இந்நிகழ்வில் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் ராஜபாண்டி, ஹார்விபட்டி குமார் உட்பட நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உலகத்திற்கே வழிகாட்டும் கரூர் ரங்கா பாலிமர்ஸ்…

(09.11.2024) கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு ஆர். காந்தி, மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் திரு. செந்தில்பாலாஜி மற்றும் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்கள் ஆகியோர் ஸ்ரீ ரங்கா பாலிமர் நிறுவனத்தைப் பார்வையிட்டனர்.

ஸ்ரீ ரங்கா பாலிமர் வீணான பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தரமான ஆடைகளைத் தயாரித்து உலக அளவில் தடம் பதித்து வருகிறது. சிறப்பான ஆடைகளைத் தயாரிப்பதோடு சுற்றுச்சூழலையும் காப்பது சிறப்பு. சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் உலகமே திணறிக்கொண்டிருக்கும் போது உலகத்திற்கே வழிகாட்டும் ரங்கா பாலிமர்ஸ் நிறுவனம் கரூரில் அமைந்திருப்பது பெருமை என்று கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்கள் தெரிவித்தார்.

உடன் கரூர் மாவட்ட ஆட்சியர்,கைத்தறித் துறை செயலாளர், இயக்குனர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், கரூர் மாநகராட்சி மேயர், துணை மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் , இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் (டாக்பியா) சார்பாக பெருந்திரள் முறையீடு, ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் போராட்டம்…

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் (டாக்பியா) சார்பில் பெருந்திரள் முறையீடு, ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் போராட்டம்.

   
மதுரை & தேனி மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைததுப் பணியாளர் சங்கம் (டாக்பியா) சார்பில் மதுரை மீனாட்சி பஜார் அருகில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வஙகி தலைமை அலுவலகம் முன்பு மதுரை மாவட்ட கௌரவ செயலாளர் ஆ.ம.ஆசிரிய தேவன் தலைமையிலும்,மதுரை மாவட்ட கௌரவ தலைவர் ராஜா,மாநில பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் முன்னிலையில் , 2021 விவசாய கடன் தள்ளுபடி தொகை அரசிடம் இருந்து வந்துள்ளதை நீண்ட நாட்களாக சங்கங்களுக்கு வழங்காமல் உள்ளதை உடனே வழங்க வேண்டும், விவசாய கடன் மற்றும் மகளிர் குழு கடன் வழங்குவதில் தேவையில்லாமல் முட்டுக்கட்டை ஏற்படுத்தி காலந் தாழ்த்துவதை கை விட வேண்டும், 

தொடக்க நிலை சங்கங்கள் பெறும் கடன்களுக்கு கூடுதல் வட்டி வசூலிப்பதை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் சங்கங்களை நசுக்கும் மற்றும் பணியாளர்களை மிரட்டும் மதுரை மாவ‌ட்ட மததிய கூட்டுறவு வஙகி நிர்வாகத்தை கண்டித்தும்  வரும் 11,ஆம் தேதி காலை மாபெரும் பெருந்திரள் முறையீடு போராட்டமும் அடுத்து 18-ஆம் தேதி அதே அலுவலக வளாகம் உள்ளே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் தொடர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்தமும் நடைபெறவுள்ளது. 

இந்த தொடர் போராட்டத்தில் மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் ரேஷன் கடை பணியாளர்கள் தவிர்த்து அனைத்து பணியாளர்களும் கலந்து கொள்வார்கள் என தேனி மாவட்ட செயலாளர் காமராஜ் பாணடியன் மற்றும் மதுரை மாவட்ட செயலாளர் பாரூக்அலி இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.

மதுரையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமில் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்பு..!

மதுரை எல்லீஸ் நகரில் வைகை டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமை மேயர் இந்திராணி பொன்வசந்த் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.மாமன்ற உறுப்பினர் பாமா முருகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மேலாண்மை முதன்மை பயிற்றுநர்களான ஜோசப் சகாயம், சுரேஷ்மரியசெல்வம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் மேலாண்மை பிரதிநிதியான ஜோ ஜார்ஜ் ஆகியோர் பயிற்றுவித்தனர்

வைகை நதி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இராஜன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியை வைகை டிரஸ்ட் விஸ்வ யுவகேந்திரா (நியூடெல்லி) ஆகியவை ஒருங்கிணைப்பு செய்தன.

வைகை டிரஸ்ட் நிறுவனர் அண்ணாதுரை மற்றும் விஸ்வ யுவகேந்திரா நிறுவனத் தலைவர் ரஜத்தாமஸ் ஆகியோர் துவக்க உரையாற்றினர்.

சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் நாராயணன், வழக்கறிஞர் அழகேசன், எஃப்.ஏ.ஐ மேலாளர் டாக்டர் பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் சோலை எஸ்.பரமன் நன்றியுரை கூறினார்.

தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் விழா…

01.11.2024 இன்று காலை 11.00 மணியளவில் குளித்தலை அரசு மருத்துவமணை வளாகத்தில் அன்னை தெரசா தொழுநோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலப்பணிச் சங்கத்தின் சார்பில் தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் ஆகியன வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேற்படி சங்கத்தின் செயலாளர் திரு.ஆர். பெருமாள் அவர்கள்
வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கரூர் அமிர்தா டிரஸ்ட் சேர்மேன், வை.க.முருகேசன் மற்றும் சீடு டிரஸ்ட் இயக்குநர் வை.திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

மேலும் திரு. S.பாலச்சந்தர், காமராஜர் இளைஞர் மன்ற தலைவர், திரு.இரா பாலமுருகன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்,கரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு இயக்க உறுப்பினர் கரூர்மற்றும் இந்திரா டிரஸ்ட் செயலாளர் R.உஷாராணி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் 56 பயனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வின் நிறைவாக பயனாளி திருமதி.முனியம்மா நன்றி கூறினார்.

ஆனையூரில் உள்ள, மதுரை மாநகராட்சி வீடட்றோர் தங்கும் இல்லத்தில், டாக்டர் அம்பேத்கர் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில், இலவச தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா

ஆனையூரில் உள்ள, மதுரை மாநகராட்சி வீடட்றோர் தங்கும் இல்லத்தில் உள்ளவர்களுக்கு, டாக்டர் அம்பேத்கர் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில், இலவச தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா, அம்பேத்கர் பெண்கள் மேம்பாட்டு மைய தலைவர் புஷ்பம் சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதல்வர் எம் கண்ணன், பெட்கிராட் தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள் ரூபி, துணைத்தலைவர் சுசிலா குணசீலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெட்கிராட் நிர்வாக இயக்குனர் எம் சுப்புராம், துவக்க உரையாற்றினார். பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட, 3-வது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வகணபதி கணேசன், மாமன்ற உறுப்பினர் பாபு, தி மு க வட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர், குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து,புத்தாடைகளையும் சிறப்பு உணவையும், வழங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெட்கிராட் துணைத்தலைவர் சுசிலா குணசீலி, காப்பாளர் ஜெயலட்சுமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் தானப்ப முதலி தெரு இல்லத்தின் காப்பாளர், இந்திரா நன்றியுரை கூறினார்.

அயல்நாட்டில் பணிபுரிபவர்களால் நிச்சயமாக ஒரு மாற்றத்தினை உருவாக்க முடியும் – நரேந்திரன் கந்தசாமி

ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதே அரிதாகிப்போன காலத்தில், ஒரு ஊர் மட்டுமல்ல 16 ஊர்களடங்கிய ஊராட்சியில், வாய்ப்பு கிடைத்த இடங்களில் முடிந்த அளவு சொந்த நிதியின் மூலம் வேலைகளை மக்களுக்கு செய்துள்ளோம்
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கிராமத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.

ஒரு நாட்டுக்கு அடிப்படை கிராமம் தான். கிராமங்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும். எனவே கிராமத்தை முன்னேற்ற வேண்டும் முன் மாதிரியான கிராமத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி இது. ஒரு கிராமத்தின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி தெருவிளக்கு வசதி என்பதனை மட்டுமல்லாமல் கிராம மக்களின் உடல் நலம், தொழில் வாய்ப்புகள், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாடு, கல்வி என்று ஒரு ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக சொந்த நிதியில் முடிந்தளவு வேலைகளை செய்துள்ளோம்.
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு ஆனால் தேடிய செல்வத்தை மக்களுக்கும் கொடு என்று என்னைப் பணித்த எனது தந்தை அவரால் முடிந்த பணிகளை அங்கிருந்து செய்ததை பற்றிய பதிவு இது. இதனை விட இன்னும் அதிகமாக செய்து இருப்பவர்கள் ஏராளம் இருப்பார்கள். குறைந்த பொருளாதாரத்தில் புதுமாதிரியான மாற்றத்தை விளைவித்தவர்கள் நிறைய இருப்பார்கள்.

இச்செய்தியை படிக்கும் எவரேனும் அதுபோன்ற வித்தியாசமான கிராம மேம்பாட்டுக்கான முயற்சி கண்டிருந்தால் அதனை எங்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். எங்களது கிராமத்தில் இருந்து சாத்தியமா என்று பரீட்சித்து பார்க்க வேண்டும். அதை மக்களுக்கு கொண்டு சென்றடைய அதனால் எனது கிராமம் முன்மாதிரி கிராமமாக மிளிர முயற்சியினை எடுக்க வேண்டும். ஆதலால் செய்தியை பகிர்ந்து மேலும் இது போன்று பலர் செய்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்.

அயல்நாட்டில் பணிபுரிபவர்களால் நிச்சயமாக ஒரு மாற்றத்தினை உருவாக்க முடியும் என்பது அனுபவபூர்வமான ஆழமான நம்பிக்கை. அரசு பள்ளியில் பயின்று, குக் கிராமத்தில் பிறந்து அயல்நாடு வந்திருக்கும் எவரேனும் இது போன்ற சில கிராமங்களை தத்தெடுத்து அல்லது அவர் பிறந்த கிராமத்தினை முன்னேற்றுவதற்கு ஏதேனும் வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருந்தார் வாருங்கள் நாம் இணைந்து பல முன்மாதிரி கிராமங்களை உருவாக்குவோம்.


நரேந்திரன் கந்தசாமி
பசுமைக்குடி தன்னார்வ இயக்கம்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES