தமிழ்நாடு கல்வி ஆலோசகர் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக மாநில அளவிலான விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் 75 ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது , 75 பள்ளி முதல்வர்களுக்கு சிறந்த முதல்வர் விருது மற்றும் 300 ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் குஜராத் மார்வாடி பல்கலைக் கழகத்தின் முதல்வர் விருதினை வழங்கினார்.
மதுரை மாவட்டம் மேலக்குயில்குடி மலை மேல் அமைந்திருக்கும் சீரடி சாய்பாபா மலைக்கோயில் மற்றும் திருவண்ணாமலை கிரிவலப் பாதை, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, முப்பையூர் உள்ளிட்ட நான்கு இடத்தில் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமி அவர்களின் தலைமையில் பக்தர்களுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை வாழை இலையில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உணவருந்தி வருகின்றனர்.
மேலும் மதுரை நகரில் காளவாசல், ஆண்டாள்புரம், சாய்பாபா கோவில், ரயில்வே நிலையம் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் ஆதரவற்றோர்கள் 500-க்கும் மேற்பட்டோருக்கு வாகனத்தில் சென்று அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை மாநகர் முழுவதும் காரில் சென்று ஆதரவற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் பணிகள் நடைபெற்றது.
வாகனத்தில் சென்று அன்னதானம் வழங்கும் பணி மற்ற மூன்று மாவட்டங்களிலும் விரைவில் தொடங்க உள்ளோம் என ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை (31.01.2025) அரியலூர், மின் நகரில் அமைந்துள்ள குமரேசன், சிவகாமி இல்ல புதுமனை புகு விழாவிற்கு மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள் வருகை தந்து விழாவினை சிறப்பித்தார்.
அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.எஸ். இன்டர்நேஷனல் பள்ளியில் குடியரசு தின விழா மற்றும் சமுதாய விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பள்ளப்பட்டி ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆசிரியர் வடிவேல் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி விழா சிறப்புரை ஆற்றினார். சமுதாய விழாவின் நிகழ்வாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து கண் சிகிச்சை முகாம் ஆனது காலை 8 மணி முதல் நடைபெற்றது.
oplus_1024oplus_1024
500 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு கண் சிகிச்சை பெற்றனர்.பள்ளி நிர்வாகச் செயலர் மற்றும் தாளாளர் முன்னிலை வகித்தனர். பள்ளி துணை முதல்வர் நன்றி கூறினார்.
திருச்சி திருவானைக்காவல் ஆலயத்தில் நடைபெற்ற நாட்டிய பிரதிட்சணம் நிகழ்ச்சியில் பல நாட்டிய கலைஞர்கள் மற்றும் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்களும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இதில் அரவக்குறிச்சி ஆறுமுகம் அகடாமியின் பசுமை அரசி என்கிற செல்வி நிரஞ்சன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு பரிசினை பெற்றார்.
மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிக்கலான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்
மதுரையைச் சேர்ந்த 47 வயதான ஆண் ஒருவருக்கு ஒரே ரத்த வகையான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறுநீரகம் கிடைக்காததால் மாற்று ரத்த ரத்த பிரிவை கொண்ட நபரிடம் சிறுநீரகத்தை தானமாக பெற்று பொருத்தமற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர். பாதிக்கப்பட்டவர் “ஓ” இரத்த வகையை சேர்ந்தவர். அவரது மனைவியோ “பி” ரத்த வகையை சேர்ந்தவர். அவரது மனைவியின் சிறுநீரத்தை பொருத்துவதற்கு மருத்துவர்கள் முயற்சி மேற்கொண்டனர். சிறுநீரக மாற்றத்திற்கு முன்பாக நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியின் அமைப்பை குறைக்க சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 18-ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்து டிசம்பர் 26-ம் தேதி கணவன், மனைவி இருவரும் நலமுடன் வீடு திரும்பினர். இதுகுறித்து மருத்துவ சேவை இணை இயக்குனர் டாக்டர் பிரவீன்ராஜன் கூறியதாவது :- மதுரை அப்போலோ மருத்துவமனையில் மாறுபட்ட ரத்த பிரிவை உள்ளடக்கிய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் நலமுடன் உள்ளது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது என கூறினார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மதுரை மண்டல முதன்மை செயல் அதிகாரி நீலக்கண்ணன், மருத்துவர்கள் அருண்குமார், சங்கர்,சரவணன் அழகப்பன், ஸ்ரீதர்,சுப்பையா, அப்துல்காதர், இந்து, அய்யப்பன், விற்பனை பொது மேலாளர் மணிகண்டன், நிர்வாக துணை பொது மேலாளர் லாவண்யா உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் பூமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கரூர் அருகே கம கமன்னு விருந்து அனைவருக்கும் சிக்கன் பிரியாணி | பஞ்சாயத்து தலைவர் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து ஊரே ஒன்று கூடி விழா எடுத்த சுவாரஸ்யம் | வீடு வரை கொண்டு சென்று வழி அனுப்பிய பொதுமக்கள் | செய்த சாதனைகளை சொந்த நிதி செயல்பாட்டு அறிக்கையாக புத்தகம் | 40 பக்கம் கொண்ட புத்தகத்தினை வெளியிட்ட பஞ்சாயத்து தலைவர்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடவூர் ஊராட்சி ஒன்றியம், வரவணை ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் கந்தசாமி, இவரை கந்தசாமி ஐயா என்று தான் சொல்வார்கள். அந்த அளவில் மதிப்புமிக்க ஒரு எளியவர், முன்னாள் தலைமை ஆசிரியரும் கூட, இவரிடம் படித்த நல்ல மாணவர்கள் ஒரு அமைப்பாகவும், இவருடைய மகன் நரேந்திரன் கந்தசாமி, இதே பகுதியில் பசுமைக்குடி என்கின்ற தன்னார்வ அமைப்பினை நடத்தி வரும் நிலையில், ஏராளமான பகுதிகளில் சொந்த செலவில் மரங்களை நட்டு பின்னர் அதற்காக தினந்தோறும் தண்ணீரையும் ஊற்றி வரும் நிலையில், தற்போது அந்த மரக்கன்றுகள் அனைத்தும் மரங்களாகவே உருவெடுத்துள்ளன. இதுமட்டுமில்லாமல், பசுமைக்குடி மூலமாக விளைவித்த காய்கறிகளை, கொரோனா 1, கொரோனா 2 ஆகிய காலங்களில் வீடுகளிலே இருந்த மக்களுக்கு சுமார் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல், இலவசமாக காய்கறிகளையும் தந்த ஒரு சமூக செயல் தமிழக அளவில் மிகுந்த பெயர் பெற்றது.
இப்புகழ்பெற்ற பசுமைக்குடி தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நரேந்திரன் கந்தசாமியின் தந்தை, கந்தசாமி ஐயா அவர்களுடைய பஞ்சாயத்து தலைவர் பதவி நேற்றுடன் முடிவடைந்ததோடு, அவருக்கு ஊரே ஒன்று கூடி விழா எடுத்ததோடு, அனைவருக்கும் சிக்கன் பிரியாணிகளையும் பரிமாறப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல், அவருக்கு பிரிவு உபச்சாரவிழா ஒன்றினை நடத்தி, அந்த விழா முடிந்த கையோடு அனைவரும் ஒன்று கூடி, அவரை வீடு வரை கொண்டு சென்று வழி அனுப்ப பட்ட சம்பவமும் மிகுந்த சுவாரஸ்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு உதவி மையம் தொடங்கி கடந்த ஓராண்டு காலமாக சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதில் 40 குடும்ப ஓய்வூதியர்கள் இருக்கிறார்கள். இன்று (06/01/2025) பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பொருள்களை தலைவர் திரு.D.ரெங்கராஜீ அவர்கள் தலைமையிலும் மற்றும் செயலாளர் திரு.P.வேலுசாமி, பொருளாலர். K.வீரமலை, து.தலைவர்கள் திரு.A. வடிவேல், திரு.P. முருகையன், துணை செயலாளர் திரு. K.கிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பனர்கள் முன்னிலையிலும் 40 குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டது.
உதவி மையம் சார்பாக,
ஓய்வு பெற்று உடல் நலம் பாதிக்கப்படோருக்கு உடன் இருந்து மருத்துவமனையில் சேர்க்க உதவிகள் செய்வது.
மருத்துவமனை செலவுகளை பெற படிவம் தயார் செய்து கரூவூலத்தில் கொடுத்து மேல் நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் கூறுவது.
காவல் ஆளினர்கள் இறந்துவிட்டால் அவர் துணைவியாருக்கு ஓய்வூதியம் பெற்றுத்தர அனைத்து நடவடிக்கை மேற்க்கொள்வது போன்ற கடமைகளை செய்வது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரை பாராளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தரகுறைவாக பேசியதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அமைச்சர் அமித்ஷா பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மற்றும் அவர் வகித்து வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் பதவியை விடுவிக்க கோரியும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி பேரணியாக சென்று கரூர் மாவட்ட வருவாய் துறை அவர்களிடம் மனு அளித்தபோது…
இந்திய மருத்துவ கவுன்சில் அறுவை சிகிச்சை பிரிவு, தேசிய துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன், டாக்டர் மருதுபாண்டியன் அவர்களை, மதுரையில் தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநில தலைவர் முனைவர் பிச்சைவேல் தலைமையில் மதுரையில் சந்தித்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஆர் ராமன், வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, முருகேசபாண்டியன், விவேகானந்தன், பழனிவேல்முருகன், சரவணன், சாய் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நற்சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.