அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியும், சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் எனது தலைமையில் இன்று (22.8.2024) மாலை சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வரிகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தேன்.
கரும்பு விவசாயிகள் சமூதாய நலக்கூடம் விழுப்புரம் மத்தி மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம்…
விழுப்புரம், கரும்பு விவசாயிகள் சமூதாய நலக்கூடம் விழுப்புரம் மத்தி மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு காங்கிரஸ் பேரியக்கத்தின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி குறித்து விரிவாக ஆலோசனை செய்தோம்.
விழாவில் விழுப்புரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அந்த கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸ் பேரியக்கத்தில் எனது முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., அவர்கள், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் திரு.எஸ்.ராஜேஷ்குமார் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்கள் திரு.டி.என்.முருகானந்தம் அவர்கள், திரு.சொர்ணா சேதுராமன் அவர்கள், அமைப்புச் செயலாளர் திரு.ராம்மோகன் அவர்கள், மாவட்டத் தலைவர்கள் திரு.ஆர்.பி.ரமேஷ் அவர்கள், திரு.வி.சீனிவாசகுமார் அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் திரு.சிறுவை ராமமூர்த்தி அவர்கள், விழுப்புரம் நகரத்தலைவர் திரு.செல்வராஜ், கானை வட்டாரத்தலைவர் திரு காத்தவராயன் அவர்கள், மயிலம் வட்டாரத்தலைவர் திரு.காத்தவராயன் அவர்கள், விக்கிரவாண்டி நகரத்தலைவர் திரு.குமார் அவர்கள், விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
அதானி + செபி இணைந்து செய்துள்ள பங்குச்சந்தை ஊழலுக்கு கண்டன ஆர்ப்பாட்டம்…
அதானி + செபி இணைந்து செய்துள்ள பங்குச்சந்தை ஊழலுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியும், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை அவர்களின் தலைமையில் நாளை மாலை 3 மணியளவில் சென்னை சாஸ்திரிபவன் முன் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க அழைக்கிறோம்.
இரண்டாவது முறையாக மகத்தான வெற்றியடையச் செய்தமக்களின் பேரன்பிற்கும் பேராதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு…
இந்தியா கூட்டணி-காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி MP இரண்டாவது முறையாக மகத்தான வெற்றியடையச் செய்தமக்களின் பேரன்பிற்கும் பேராதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர், மாண்புமிகு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் நேற்று குஜிலியம்பாறை ஒன்றியம் லந்தக்கோட்டை ஊராட்சியில் துவங்கிவைத்தார்கள்.
தேர்தல் காலம் போலவே பேரன்போடு வரவேற்ற எமது சகோதர சகோதரிகளுக்கும், தேர்தல் பணியில் இரவு,பகலாக உழைத்து வெற்றியைத் தேடித்தந்த இந்தியா கூட்டணி நிர்வாகிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தோம்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட,வட்டார காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர் .
அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்….
அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியும், சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் நாளை (22.8.2024) வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் இந்நாள் – முன்னாள் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் சர்க்கிள் / வட்டார நிர்வாகிகள், சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துணை அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்பார்கள்.
அதானியின் பங்குச் சந்தை மோசடி
அதானியின் பங்குச் சந்தை மோசடி குறித்து அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆதாரத்துடன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. இதில் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி பூச்சும், அவரது கணவரும் சம்பந்தப்பட்டுள்ளது சமீபத்தில் ஆதாரங்களுடன் வெளி வந்திருக்கிறது. அரசாங்கத்தையே விலைக்கு வாங்கியுள்ள அதானிக்கு செபி தலைவரை விலைக்கு வாங்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
செபி தலைவரும், அவரது கணவரும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் ரகசியமாக முதலீடு செய்ததாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிதிகள் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, ரவுண்ட்-டிரிப்பிங் நிதிகள் மூலம் பங்குகளை உயர்த்த பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதானி குழுமத்தில் சந்தேகத்திற்குரிய பங்குகள் தொடர்பாக செபி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காமல் இருக்க செபி தலைவர் அதானியின் சகோதரருடன் தொழில் கூட்டாளியாக இருப்பது தான் காரணமாக உள்ளது. செபி தலைவரும், அவரது கணவரும் அதானி நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதன் காரணமாகவே அதானி தொடர்புடைய பங்கு மோசடிக்கு எதிராக செபி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய பங்கு சந்தை என்பது ரூபாய் 25 லட்சம் கோடி முதல் ரூபாய் 30 லட்சம் கோடி வரை சந்தை மதிப்பு கொண்டது. முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு செபி அமைப்பிற்கு இருக்கிறது. அந்த அமைப்பே அதானி நிறுவனத்தோடு சேர்ந்து கொண்டு லாப நோக்கில் செயல்பட்டது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். உச்சநீதிமன்றமும் இந்த குற்றச்சாட்டை தன்னிச்சையாக முன்வந்து சிறப்பு புலனாய்வுக் குழு மூலமாக விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சமூக நீதியை நோக்கமாகக் கொண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கடந்த மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. மேலும், இடஒதுக்கீட்டு வரம்பை 50 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமலும், 2021 இல் நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் மோடி அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதன்மூலம் சமூக நீதிக்கு எதிராக பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்கு எதிராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
அதானியின் பங்குச் சந்தை மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள செபியின் தலைவர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டு இதுகுறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரிக்க வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக நாளை (22.8.2024) வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகம் எதிரே எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று நாட்டையே உலுக்கி வருகிற பங்குச் சந்தை மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கவும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்ப உள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று சாஸ்திரி பவனே திணறியது என்கிற வகையில் அமைய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
புதுச்சேரியில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளை ஒட்டி அன்னாரது சிலைக்கு ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில தலைவர் சு.அமுதரசன் தலைமையில்நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் -ஒரு சிறப்பு பார்வை
சாமானிய மக்களுக்கும் ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை உருவாக்கியவரும் நவீன இந்தியாவை உருவாக்கிய தொலைநோக்கு பார்வை கொண்ட மகத்தான தலைவர் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடைய பிறந்தநாள் விழாவை ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக
20 .8.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு தலைவர் ராஜீவ் காந்தியின் சிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்
Re சேகர் சேர்மன் ஊடகப்பிரிவு
பஞ்சாயத்து ராஜ் மாநில பொதுச் செயலாளர்கள் கோவிந்தன், புஷ்பராஜ்,
தொகுதி தலைவர்கள் சங்கர் பாபு,
ஹேமாவதி செல்வம், திருநாராயணன்,
தெற்கு மாவட்ட துணைத் தலைவர் பொன்னம்பலவாசன், பொதுச் செயலாளர் சத்தியசீலன் , மூர்த்தி பொதுச் செயலாளர்
சேவாதல் துணைத் தலைவர் ஆறுமுகம்,
தொகுதி செயலாளர் முகிலன்,
மோகன் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா…
பாரத ரத்னா திரு.ராஜீவ்காந்தி அவர்களின் 80வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நேற்று (20.08.2024) சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டேன். மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினேன். பாரத ரத்னா ராஜீவ்காந்தி அவர்கள் குறித்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட ஊடக ஆளுமைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. விழாவில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவல்ல பிரசாத் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் இந்நாள்- முன்னாள் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் சர்க்கிள் / வட்டார நிர்வாகிகள், சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துணை அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றார்கள்.
உபி-யில் சுட்டு கொல்ல பட்ட தலித் இளைஞர் அர்ஜுன் பாசியின் குடும்பத்தினரை சந்தித்தார் ராகுல்…
உபி-யில் சுட்டு கொல்ல பட்ட தலித் இளைஞர் அர்ஜுன் பாசியின் குடும்பத்தினரை சந்தித்தார் ராகுல். தலித் இளைஞர் அர்ஜுன் பாசி பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவரது குடும்பத்தினர் தொடர்ந்து நீதி கேட்டு வருகின்றனர். இன்று எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி ரேபரேலியில் அர்ஜுன் பாசியை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தார். இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்பி தலித் குடும்பத்திற்கு நீதி வழங்குவோம் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரை உருவாக்குவதே குறிக்கோள்-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை
நிலையான ஸ்ரீபெரும்புதூர் முயற்சியானது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத்தை அதன் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் கட்டமைப்பில் நிலையான வளர்ச்சி நடைமுறைகளை ஒருங்கிணைத்து மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்ளூர் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது, இந்த முயற்சி சமூக ஈடுபாட்டை வளர்க்கிறது மற்றும் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது.
ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (SDGs), குறிப்பாக SDG 13 (காலநிலை நடவடிக்கை) உடன் இணைவதன் மூலம், இந்த முயற்சி உள்ளூர் பொருளாதாரங்களை மேம்படுத்தும், சமூக பிணைப்புகளை வலுப்படுத்தும் மற்றும் பகிரப்பட்ட பொறுப்புணர்வு உணர்வை வளர்க்கும்.
காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு செயல் திட்டத்துடன் இணைந்து, இந்த முயற்சியானது, காலநிலையை எதிர்க்கும் தன்மையை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கிறது, மேலும் ஸ்ரீபெரும்புதூரை பசுமையான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கி நகர்த்துகிறது.
Kwins Global International Relations, School of Policy and Governance (SPG), BlueDrop Enviro, Eva India மற்றும் Strategy & Governance Consultants ஆகியவற்றுடன் இணைந்து முக்கிய நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து, சுற்றுச்சூழல் நடவடிக்கைக்கான முன்மாதிரி தொகுதியாக ஸ்ரீபெரும்புதூரை உருவாக்குவதே குறிக்கோள். நிலையான மதிப்புகள்.