Friday , November 22 2024
Breaking News
Home / அறிவியல் / டீ குடிக்கும் நேரத்தில் சார்ஜ் ஏறிவிடும் – சோலார் ஆட்டோ
MyHoster

டீ குடிக்கும் நேரத்தில் சார்ஜ் ஏறிவிடும் – சோலார் ஆட்டோ

“டீ குடிக்கும் நேரத்தில் சார்ஜ் ஏறிவிடும்!” – #தேனியைக் கலக்கும் #சோலார் #ஆட்டோ

பெட்ரோல் விற்கும் விலையைப் பார்த்தால், இன்னும் சில ஆண்டுகளில் எல்லாச் சாலைகளிலும் சோலார் வாகனங்களைப் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், மாற்று எரிபொருள்களுக்கு மனிதன் தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்வதே சாலச்சிறந்தது. அந்த வகையில், சூரிய ஒளி மூலம் இயங்கக்கூடிய ஆட்டோவைக் கண்டுபிடித்துள்ளார் தேனியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரர். அவரைப் பார்ப்பதற்கு #கம்பம் அருகே உள்ள #காமயகவுண்டன் பட்டிக்குப் புறப்பட்டோம்.

“பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும். இதனால், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் மிகவும் சிரமப்படுவர். இதெல்லாம் இல்லாமல் இருக்க மாற்று எரிபொருளுக்கு மனிதர்கள் மாற வேண்டும். நிலநடுக்கோட்டுக்கு அருகே இருக்கும் இந்தியாவுக்கு வருடத்தின் பெரும்பாலான நாள்களில் சூரிய ஒளி கிடைத்துக்கொண்டே இருக்கும். அதனை வெறும் ஒளியாக, வெளிச்சமாகப் பார்க்காமல், ஆற்றலாக நான் பார்த்தேன். அதன் விளைவுதான் இந்த சோலார் ஆட்டோ.” என்று கூலாகப் பேச ஆரம்பித்தார் சுகுமார்.

விழாக்களுக்குப் பந்தல் போடும் தொழில் செய்துவரும் சுகுமாரிடம், சோலார் ஆட்டோ தயாரிக்க வேண்டும் என்று எப்படி எண்ணம் வந்தது என்று கேட்டோம். “பத்தாம் வகுப்புக்குப் பிறகு ஐ.டி.ஐ.யில் சேர்ந்து டர்னர் பிரிவில் படித்தேன். அதன் பின்னர் எல்லைப்பாதுகாப்புப் படையில் வேலைக்குச் சேர்ந்து, சர்வீஸ் முடித்துவிட்டு தொழில் செய்யலாம் என்று யோசித்த போதுதான் மீண்டும் படிக்கும் எண்ணம் வந்தது.

காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் 15 நாள் காற்றாலை பயிற்சி மற்றும் ஒரு வார கால சோலார் பயிற்சி படித்து முடித்தேன். படிப்பைப் படித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், அதைப் பயன்படுத்தி ஆட்டோவுக்கான உபகரணங்கள் வாங்கி சோலார் ஆட்டோவைத் தயாரித்திருக்கிறேன்.
சோலார் ஆட்டோவை இயக்குவது எளிதானது. கியர் இல்லை. ரிவர்ஸ் வருவதற்கு ஒரு பட்டனை அழுத்தினால் போதும். இந்த ஆட்டோ, 30 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும். அதற்கு மேல் வேகத்தை அதிகப்படுத்த ‘ஐ கேர்’ என்ற சான்றிதழ் பெற வேண்டும். ஒரு முறை சார்ஜ் ஏற்றிக்கொண்டால் போதும் 60 கிலோமீட்டரிலிருந்து 80 கிலோமீட்டர் வரை எளிதாகச் செல்ல முடியும்.

டீ குடிக்கும் நேரத்தில் சார்ஜ் ஏறிவிடும். பெரிய அளவில் சத்தம் வராது. புகை வெளியிடாது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனமாக இருக்கும். சூரிய ஒளி குறைவாக இருக்கும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இருக்கும் என்னால் சோலார் ஆட்டோவை வைத்துக்கொண்டு பந்தல் போடும் பணிகளைச் செய்ய முடிகிறது என்றால், அதிக வெயில் இருக்கும் பகுதிகளில் சிறப்பாக சோலார் ஆட்டோவைப் பயன்படுத்த முடியும். நல்ல வருமானமும் கிடைக்கும். வாழ்துக்கள் சகோதரா.

Bala Trust

About Admin

Check Also

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES