Tuesday , January 28 2025
Breaking News
Home / தென் மாவட்டங்கள் / அண்ணாமலை அரசியல் வியாபாரி ; அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கடும் தாக்கு..!
MyHoster

அண்ணாமலை அரசியல் வியாபாரி ; அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கடும் தாக்கு..!

எடப்பாடியாரை விமர்சித்தால் தென் மாவட்டத்தில் அண்ணாமலை கால் வைக்க விடாமல் முற்றுகை போராட்டம் செய்வோம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்த அதிமுக மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் பா. சரவணன் பரபரப்பு பேட்டி

மதுரை ஆக 27

கடந்த சில நாட்களாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கடும் விமர்சனம் ‍செய்து வருகிறார்,

இதனை தொடர்ந்து தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது, மேலும் தமிழகம் முழுவதும் அண்ணாமலை உருவ பொம்மை எரிக்கப்பட்டும், கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அதிமுக மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் பா. சரவணன் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி, மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் லோகநாதனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்

அதில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை அதிமுக பொது செயலாளர் எடப்பாடியாரை களங்கப்படுத்தும் நோக்கில் பேசி உள்ளார், எடப்பாடியாரை அவமானப்படுத்தும் நோக்கிலும், பொது அமைதியை சீர் குலைக்கும் வகையிலும்,சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து அவதூறாக அண்ணாமலை பேசி வருகிறார்,

அதிமுக குறித்தும், எடப்பாடியார் மீதும் அவதூறுகளை பரப்பி வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்,

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன் கூறுகையில்,

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் வகையில் அண்ணாமலை பேசியுள்ளார், 51 ஆண்டுகள் கடந்து அதிமுக ஆலமரம் போல செயல்படுகிறது, தமிழகத்தில் அதிமுக 31 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளது,

சாமானிய மக்களுக்காக புரட்சிதலைவர், புரட்சிதலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார், தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மட்டுமே இடம் உள்ளது, பாஜக என்பது மழை பெய்த உடன் முளைக்கும் காளான் போன்றது, அண்ணாமலை ஒரு காலி பெருங்காயம் டப்பா.

பாஜக என்பது வீடியோ கட்சி, அண்ணாமலை அரசியல் வியாபாரி, அதிமுக கூட்டணியில் இருக்கும்போது அண்ணாமலை எடப்பாடியாரை பாராட்டி பேசினார், தற்போது அண்ணாமலை எடப்பாடியாரை தனிநபர் விமர்சனம் செய்யும் அளவிற்கு தரம் தாழ்ந்து பேசி உள்ளார்,

அண்ணாமலைக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் வெகுண்டு எழுந்தால் என்னவாகும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். மதுரையில் மட்டும் 6000 நிர்வாகிகள் 1.50 லட்சம் தொண்டர்கள் எடப்பாடியாருக்கு காவல் அரனாக உள்ளனர் என்பதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும் .

நாங்கள் வெகுண்டு எழுந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடு ஏற்படும், அதிமுக தொண்டர்கள் அண்ணாமலைக்கு எதிராக ஆன்லைன் புகார்கள் அளிக்க உள்ளனர், அண்ணாமலை தரம் கெட்ட அரசியல் வியாபாரி, தமிழகத்தில் அண்ணாமலை விஷ விதையை விதைத்து வருகிறார், பாஜகவின் மூத்த நிர்வாகிகள் தமிழிசை, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றோர் செய்த நல்ல அரசியலை அண்ணாமலை செய்யவில்லை, அண்ணாமலை நாக்கை அடக்க வேண்டும், இல்லையெனில் நாக்கு அழுகி விடும்”

தொடர்ந்து எடப்பாடியாரை விமர்சித்தால் தென் மாவட்டத்தில் அண்ணாமலை கால் வைக்க முடியாத அளவில் நாங்கள் முற்றுகை போராட்டம் செய்வோம், பத்து பைசா நாம் லஞ்சம் வாங்கவில்லை என்று அண்ணாமலை கூறுகிறார், ஏற்கனவே டிஎம்கே பைல் என்ற ஊழல் பட்டியலை வெளியிட்டு தற்போது அண்ணாமலை அமைதியாகி விட்டார் இதன் மூலம் பணம் கை மாறி உள்ளதா? இதை நான் சொல்லவில்லை திருச்சி சிவா சொல்லிவிட்டார்.

அதுமட்டுமல்லாது ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் வழக்கில் நெருக்கமானவர்கள் இன்றைக்கு அண்ணாமலையிடம் நெருக்கமாக உள்ளனர். அது மட்டுமல்ல சென்னையில் விமான நிலையத்தில் ஒரு கடை உள்ளது அதில் தங்கம் கடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது அந்த கடையை பெற்றுக் கொடுத்தவர் பாஜக சேர்ந்தவர் தான் என்பது அண்ணாமலைக்கு தெரியுமா?

எடப்பாடியாருக்கு மதி நுட்பம் இல்லை என்று அண்ணாமலை கூறுகிறார் உங்களுக்கு தான் மூளையே கிடையாது. எடப்பாடியார் நான்கரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சி செய்தார். அப்போது திமுக காங்கிரஸ் அரசு கொண்டுவந்த நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது அதிலிருந்து அரசு பள்ளி மாணவர்களை காப்பாற்ற, 7.5 சகவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தார் இதன் மூலம் ஆண்டுதோறும் 665க்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற்று வருகிறார்கள், இதன் மூலம் ஒரு சாமானிய வீட்டு பிள்ளையும் மருத்துவராக்கியுள்ளார்

இன்றைக்கு எடப்பாடியார் இரண்டு கோடி தொண்டர்களால் தேர்வு செய்துள்ளனர் ,ஆனால் பாஜக தலைவர் பதவி என்பது நியமன பதவி, தேவை என்றால் கூட மூன்று மாதம் மெடிக்கல் போட்டு கொண்டு வெளிநாடு செல்லலாம், ஆகவே அண்ணாமலை எடப்பாடியாரை பற்றி விமர்சித்தால் தக்க தகுந்த பதிலடியை நாங்கள் கொடுப்போம் என கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரையில் 50-வது ஆண்டை கொண்டாடும் சங்கு சக்ரா ஹோட்டல் (சங்கம் ஹோட்டல்)

சிறந்த விருந்தோம்பலில் 50 வது ஆண்டை கொண்டாடும் சங்கு சக்ரா ஹோட்டல் (சங்கம் ஹோட்டல்)அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES