என் மீது தெரிவிக்கும் விமர்சனங்களால் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுகுறிக்கி கிராமத்தில் இன்று நடந்த காலபைரவர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தனி நபர்களை தாக்கிப் பேசுவது பாஜகவினருக்கு பழக்கப்பட்ட ஒன்று தான் என்றும் குறிப்பாக, வடமாநிலங்களில் தனிநபர்களை தாக்கிப் பேசுவது அதிகமாக நடைபெறும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் …
Read More »தனிநபர்களை தாக்கி பேசுவது பா.ஜ.க.வினருக்கு பழக்கப்பட்ட ஒன்று: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி
கிருஷ்ணகிரி: தனிநபர்களை தாக்கி பேசுவது பா.ஜ.க.வினருக்கு பழக்கப்பட்ட ஒன்று என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுகுறிக்கி கிராமத்தில் நடந்த காலபைரவர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; தனி நபர்களை தாக்கிப் பேசுவது பாஜகவினருக்கு பழக்கப்பட்ட ஒன்று தான். குறிப்பாக, வடமாநிலங்கள் போல் தற்போது தமிழ்நாட்டிலும் தனிநபர்களை பா.ஜ.க.வினர் தாக்கி பேச தொடங்கியதாக அவர் குற்றச்சாட்டியுள்ளார். …
Read More »தேர்தலில் வெற்றியும், தோல்வியும் சகஜம்.. ஸ்மிருதி இரானி மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் காந்தி..!!
டெல்லி: ஸ்மிருதி இரானியை இழிவாகவும், கேவலமாக பேசுவதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அமேதி மக்களவை தொகுதியில் 2019ம் ஆண்டு ராகுல்காந்தியை தோற்கடித்தவர் ஸ்மிருதி இரானி. ஒன்றிய அமைச்சராகவும் அவர் இருந்து வந்தார். ஆனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிதி இரானி தோல்வி அடைந்தார். புதிய அரசு அமைக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் முன்னாள் …
Read More »முதலமைச்சருடன் திருமாவளவன் சந்திப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமானதொல். திருமாவளவன் அவர்கள் சந்தித்துப் பேசினார். கடந்த 5 ஆம் தேதி தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை; உண்மை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். கூலிப்படை கும்பலை, சாதியவாத கும்பலை …
Read More »தமிழகத்திற்கு தினமும் 1 டி.எம்.சி.,: கர்நாடகா அரசுக்கு உத்தரவு
சென்னை : தமிழகத்திற்கு இம்மாதம் இறுதிவரை நாள்தோறும், 1 டி.எம்.சி., நீர் திறக்கும்படி, கர்நாடகாவிற்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவு, காவிரி மேலாண்மை ஆணையம் வாயிலாக முறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19 டி.எம்.சி., நீரில், 2.25 டி.எம்.சி., மட்டுமே கிடைத்தது.இம்மாதம், 31.2 …
Read More »வெளிநாட்டில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி: அமைச்சர் உதயநிதி வழங்கினார்!
அமைச்சர் உதயநிதி : அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வரும் நவ.10 முதல்17-ம் தேதி வரை உலக கேரம் போட்டி நடைபெற உள்ளது, இந்த போட்டியில் தமிழகத்தின் சார்பில் கே.நாகஜோதி, எம்.காசிமா, வி.மித்ரா ஆகிய 3 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் பயிற்றுநர் மரியா இருதயம் செல்கிறார். இவர்களுக்கான செலவின தொகையாக தலா ரூ.1.50லட்சத்துக்கான காசோலையை, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் …
Read More »எல்லோரையும் மிரட்டுவதுபோல அண்ணாமலை என்னை மிரட்ட முடியாது: செல்வப்பெருந்தகை!
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது:- எல்லா வழக்குகளையும் பார்த்தவன். மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும். எல்லோரையும் மிரட்டுவதுபோல என்னையும் அண்ணாமலை மிரட்டிக் கொண்டிருக்கிறார். எனது வழக்கின் தன்மை பற்றி அவருக்கு தெரியவில்லை. எங்கள் மீது வழக்கு பதிவு செய்தபோது ‘நீங்கள் சாதாரண நகர காவல்துறை, இதற்கு மேல் உயர் அதிகாரிகள், சிபிசிஐடி, சிபிஐ வலுவான அமைப்புகள் இருக்கிறது’ என …
Read More »நேபாளத்தில் கனமழை: மண்சரிவு ஏற்பட்டு ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு..!!
நேபாளம்: நேபாளத்தில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளை சூழ்ந்துள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், காத்மாண்டு நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முகிலிங்-நாராயண்காட் நெடுஞ்சாலையில் சிட்வான் மாவட்டத்தில் இரண்டு பேருந்துகள் சென்று கொண்டிருந்தன. ஒரு பேருந்து …
Read More »10 நாட்களாக நோட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங் கொலை
சென்னை: பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை 10 நாட்களாக நோட்டமிட்டு கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான சிபிசிஐடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட 11 பேரை காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் எவ்வளவு பணம் கைமாறியது என்பது குறித்தும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 5 நாள் காவலில் எடுக்கப்பட்டுள்ள 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை …
Read More »படுதோல்விக்குப் பிறகும் மத்திய அரசு பாடம் கற்கவில்லை: முதல்வர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: தமிழ்நாட்டில் படுதோல்வி அடைந்த பிறகும் அதிலிருந்து மத்திய அரசு பாடம் கற்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.07.2024) தருமபுரி மாவட்டம், பாளையம் புதூர் ஊராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தொடங்கி வைத்து, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை …
Read More »