அம்மா உணவகங்களுக்கு கடந்த மூன்றாண்டுகளில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டு, நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரின் பசியாற்றும் நடவடிக்கைகளை நமது அரசு மேற்கொண்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியது ஒரு கூட்டம். அவர்களது தீய எண்ணங்களுக்கு இடமளிக்காமல், கடந்த மூன்றாண்டுகளில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டு, நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரின் பசியாற்றும் நடவடிக்கைகளை நமது அரசு மேற்கொண்டிருக்கிறது.
இன்று தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் உணவின் தரம் குறித்தும்; அங்குள்ள பணியாளர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தேன். அதையொட்டி, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாகப் பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகள் வாங்கவும் – அம்மா உணவகங்களைப் புனரமைத்திட 14 கோடி ரூபாய் ஒதுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
#DravidianModel #அனைவருக்குமான_ஆட்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.