காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கவிருந்த தென்கிழக்கு ஆசிய சுற்றுப்பயணம் எதிர்பாராத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது ரத்து செய்யப்பட்ட பயணத்தின் போது, ராகுல் காந்தி இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்குச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.
Read More »ஜாதிவாரி கணக்கெடுப்பு கர்நாடகா காங்கிரசை பிளவுபடுத்துகிறது: டி.கே.சிவகுமாரின் நிலைப்பாட்டை பகிரங்கமாக விமர்சிக்கும் வகையில், ‘அனைத்து மேல்சாதி மக்களும் இதில் ஒன்றுபட்டுள்ளனர்’ என்று கார்கே கூறுகிறார்.
மாநிலத்தின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, திங்கள்கிழமை (டிசம்பர் 11) ராஜ்யசபாவில் சிவகுமாரின் நிலைப்பாட்டை பகிரங்கமாக விமர்சித்தார். மாநில அரசாங்கத்திற்குள் உள்ள உள் பூசல்கள் குறித்து பாஜக உறுப்பினர்கள் தனது கருத்தைக் கேட்டபோது, இந்தப் பிரச்சினையில் உயர் சாதி தனிநபர்கள் ஒற்றுமையாக இருப்பதாக கார்கே …
Read More »விராலிமலை சட்டமன்றத் தொகுதி, விராலிமலை ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சியில் வேலப்புடையான்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தோம்.
உடன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரு. முருகேசன், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் திரு. மணி, விராலிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமிகு. காமு மணி, திமுக ஊராட்சி ஒன்றிய செயலாளர் திரு.சத்தியசீலன், மாவட்ட கவுன்சிலர் திருமிகு. சாந்தி தங்கசிங்கம், ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் திரு.பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Read More »கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சேலத்தில் நிறைவடையும். பிரசார பேரணியில் 188 இருசக்கர வாகனங்கள் பங்கேற்றுள்ளனர்.
Read More »திராவிட மாடல் ‘திமுக’ அரசால் சிறப்பிக்கப்பட்ட இடதுசாரி தலைவர் சங்கரய்யா-முதல் தகைசால் தமிழர் விருது!
சென்னை: இந்தியாவின் முதுபெரும் இடதுசாரித் தலைவரான இன்று மறைந்த சங்கரய்யாவுக்கு (வயது 102) தமிழ்நாட்டில் ஆளும் திராவிட மாடல் திமுக அரசு தமது முதலாவது தகைசால் தமிழர் விருது வழங்கி பெருமைப்படுத்தியது. இந்தியாவின் விடுதலைக்காக சிறைவாசம் அனுபவித்தவர் சங்கரய்யா. 95 வயது வரை தமது போராட்ட குணத்தை இடைவிடாது கடைபிடித்தவர். 95 வயதில் ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்ட களத்தில் நின்றவர் சங்கரயா. இன்று வயது முதுமையின் காரணமாக 102 …
Read More »மத்திய பிரதேசத்தில் குவிந்துள்ள தலைவர்கள்! சூடு பிடிக்கும் தேர்தல் களம்!!
மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் வருகிற நவம்பர் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு குவிந்துள்ளனர். 230 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் வருகிற நவம்பர் 17 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் அதுபோல காங்கிரஸ் முன்னாள் …
Read More »‘மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர்தான் கிடைக்கும்!’ – சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் பேச்சு!!
மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர்தான் கிடைக்கும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அங்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் பூபேஷ் பகேல், ‘பிரதமர் மோடி …
Read More »காஷ்மீர் இந்தியாவில் இருப்பதற்கு காரணமானவர் ஜவஹர்லால் நேரு: கே.எஸ்.அழகிரி பேட்டி
சென்னை: ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்த நாளையொட்டி, கிண்டி கத்திபாராவில் உள்ள அவரது சிலைக்கு அருகே அலங்கரிக்கப்பட்ட படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று நடந்தது. இதில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, நிர்வாகிகள் கோபண்ணா, விஜய் வசந்த் எம்பி, அசன் மவுலானா எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர். நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு …
Read More »பாரதி நர்சரி & பிரைமரி பள்ளி சார்பில் குழந்தைகள் தினம் பள்ளப்பட்டியில்…
இமாம் அபு ஹனிபா டிரஸ்ட் நடத்தும் பாரதி நர்சரி & பிரைமரி பள்ளி சார்பில், இன்று குழந்தைகள் தினம் (பண்டிட் ஜவஹர்லால் நேரு) பிறந்த நாள் குழந்தைகள் தினம் முறையாக அனுசரிக்கப்பட்டது. மாவட்ட அரசு தலைமை காஜி சிராஜுதீன் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்க, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகிக்க, நிகழ்ச்சி இனிமையாக துவங்கியது. அரவக்குறிச்சி ஆர்டிஓ தோழர் குண்டுமணி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக …
Read More »”பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அளித்தது காங்கிரஸ்”: ப.சிதம்பரம்
புதுடெல்லி: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கியது காங்கிரஸ் கட்சியே என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு எப்பொழுது அமலுக்கு வந்தது என்ற உண்மைகளைத் தெரிந்து கொள்வோம். 1951ஆம் ஆண்டு சமூக, பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு ஏதுவாக அரசியல் சாசனம் திருத்தப்பட்டது. அதை நிறைவேற்றியது …
Read More »