Thursday , March 19 2026
Breaking News
Home / Politics / நாடாளுமன்ற தக்குதல் விவகாரம் | 8 பேர் பணியிடை நீக்கம்!
NKBB Technologies

நாடாளுமன்ற தக்குதல் விவகாரம் | 8 பேர் பணியிடை நீக்கம்!

நாடாளுமன்ற தக்குதல் விவகாரம் |  8 பேர் பணியிடை நீக்கம்!

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் 2 பேர் அத்துமீறிய விவகாரம் தொடர்பாக 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி புதிய நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த இருவர் புகை குப்பிகளை வீசி ரகளையில் ஈடுபட்ட அதே நேரத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் ஒரு பெண் உள்ளிட்ட இருவர், வண்ண புகை உமிழும் குப்பிகளை கையில் ஏந்திய படி ‘பாரத் மாதாகி ஜெ’, ‘சர்வாதிகாரம் ஒழிக’, ‘ஜெய் பீம்’, ‘ஜெய் பாரத்’ என்றவாறு கோஷமிட்டனர்.

அவர்களையும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் கைது செய்து அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேரையும் அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் டெல்லி காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு வளையத்தை மீறி 2 பேர் அத்துமீறிய விவகாரம் தொடர்பாக 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Bala Trust

About Admin

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES