மதுரையில் விஸ்வகர்மா யோஜனா திட்ட தொடக்க விழா: மத்திய அமைச்சர் சிங் பாகேல் மற்றும் எம்.எஸ்.எம்.இ சேர்மன் டாக்டர் முத்துராமன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனாவைத் தொடங்குவதற்கு முன், துவாரகாவில் உள்ள இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் விஸ்வகர்மா பகவானுக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, காலணித் தொழிலுடன் தொடர்புடைய கைவினைக் கலைஞர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதும் அவர்களின் கைவினைத்திறனை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
கிராமப்புறங்களில் உள்ள கைவினைக் கலைஞர்கள் பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் பலனைப் பெறலாம். தற்போது 18 வகையான தொழில்கள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.
மதுரையில் இந்த திட்டத்தின் தொடக்க விழா சிக்கந்தர் சாவடியில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சுகாதார துறை அமைச்சர் சிங் பாகேல் கலந்து கொண்டு சிறப்பித்தார். எம்.எஸ்.எம்.இ அகில இந்திய சேர்மன் டாக்டர் முத்துராமன் மற்றும் காந்தி எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் எம்.எஸ்.எம்.இ தமிழ்நாடு பி.ஆர்.ஓ மாறன் உள்பட பலர் பங்கேற்றனர்.