பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை…











தமிழக மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்புகளை பிரதிபலிக்கும்
‘சவுத் இந்தியன் பேங்க்’ -ன் பொங்கல் விளம்பர திரைப்படம் வெளியீடு!
சென்னை ஜன
இந்தியாவின் தனியார் துறை வங்கிகளில் முன்னணி வகிக்கும் சவுத் இந்தியன் பேங்க் தமிழக மக்களுடனான தனது நீண்டகால பிணைப்பையும், தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய விழுமியங்களையும் போற்றி கொண்டாடும் வகையில் பொங்கல் திருவிழாவை மையமாகக் கொண்ட ஒரு விளம்பர திரைப்படத்தை வெளியிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் ஒரு பகுதியைப் பின்புலமாக கொண்டு நடைபெறும் நிகழ்வாக இந்த விளம்பரப் படம் (https://www.youtube.com/watch?v=_aelKdswOrE) உருவாக்கப்பட்டுள்ளது. அறுவடைத் திருநாளான பொங்கலை மக்கள் ஒன்று கூடி எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதை இத்திரைப்படம் அழகாகச் சித்தரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் ஒன்றுகூடி சந்திப்பது, பல்வேறு தலைமுறைகளுக்கு இடையிலான உரையாடல் மற்றும் பொங்கல் பண்டிகைக்கே உரிய தனித்துவ அம்சமான அன்பும் மகிழ்ச்சியும் கலந்த பிணைப்பு போன்ற அன்றாட வாழ்வியல் தருணங்களை இத்திரைப்படம் மிக இயல்பாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. இதில் சவுத் இந்தியன் பேங்க் ஒரு வெறும் வங்கியாக மட்டுமல்லாமல், தமிழ்நாடு மக்களின் வாழ்வோடும் சமூகத்தோடும் பின்னிப்பிணைந்த ஒரு அங்கமாக இணைந்திருப்பது நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
‘உறவுகள்தான் தமிழகத்தின் வலிமை’ என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. இது சவுத் இந்தியன் பேங்க் பின்பற்றி வரும் ‘1929-ம் ஆண்டு முதல் உறவுகளில் முதலீடு செய்தல்’ என்ற தத்துவத்திற்கும், தமிழகப் பண்பாட்டின் வலிமைக்கும் இடையிலான பிணைப்பை அழகாக இவ்விளம்பரம் எடுத்துக்காட்டுகிறது. தமிழகத்தின் உண்மையான செல்வம் என்பது அதன் மக்களும், அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள ஆழமான பிணைப்புமே என்பதை இத்திரைப்படம் உணர்த்துகிறது. நிலைத்து நீடிக்கும் நல்லுறவுகளே வலுவான வளர்ச்சிக்கான அடித்தளம் என்ற இந்த வங்கியின் நம்பிக்கையையும் இது எதிரொலிக்கிறது.
இந்தச் சிறப்பு விளம்பர திரைப்படம் குறித்து சவுத் இந்தியன் பேங்க்-ன் துணைப் பொது
மேலாளர் மற்றும் சென்னை பிராந்திய தலைவர் ஈஸ்வரன் எஸ். கூறுகையில், இந்த பொங்கல் பண்டிகை காலத்தில், நம்பிக்கை மற்றும் பகிர்ந்து கொள்ளப்படும் பண்புகளால் உருவான நல்லுறவுகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். தமிழக மக்களுடனான எங்களது உறவு மிகவும் வலுவானது. மக்களின் அன்றாட வாழ்வையும் சமூகப் பிணைப்பையும் பிரதிபலிக்கும் நேர்த்தியான அம்சங்களை இந்த திரைப்படத்தின் மூலம் நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறோம். இந்த விளம்பரத் திரைப்பட வெளியீட்டோடு சேர்த்து, எங்கள் வாடிக்கையாளர்களுக்காகக் கவர்ச்சிகரமான பொங்கல் திருவிழா
சலுகைகளோடு, வங்கியின் பல்வேறு திட்டங்களின் விரிவான தொகுப்பையும் நாங்கள் வழங்குகிறோம்,” என்றார்.
சவுத் இந்தியன் பேங்க்-ன் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் ரமேஷ் கே.பி. கூறுகையில், “சவுத் இந்தியன் பேங்க் தமிழகத்தில் ஒரு மிக முக்கியமான சந்தையாகும். இப்பகுதி மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட, நாங்கள் சேவையாற்றும் சமூகங்களோடு நெருக்கமான பிணைப்பு கொண்ட, உள்ளூர் பண்டிகைகளைக் கொண்டாடும், ஒரு ‘அண்டை வீட்டு வங்கி’ என்ற எங்களின் அடையாளத்தை இந்தப் பொங்கல் விளம்பரத் திரைப்படம் மேலும் உறுதிப்படுத்துகிறது,” என்றார். எளிமையான மற்றும் உணர்ச்சிகரமான கதைக்களத்தின் மூலம் இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘ஹியூமன் ஸ்டோரிஸ்’ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, ‘ஃபர்ஸ்ட் பிக்சர் ஷோ கம்பெனி’ தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், டிஜிட்டல் தளங்களில் வெளியான மூன்றே நாட்களில் 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து தமிழ்நாட்டின் மக்கள் மத்தியில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா,எம்.எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, பா.குமார், பேராசிரியர் உசிலை ஜெயபால்,வி.பி.ஆர் செல்வகுமார், ஜெயம்.ஜெயபாண்டி, பி.ஆர்.சி மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கரிமேடு எம்.அஸ்வின் குமார், எம்.ஏ பாண்டி, ஏ.கே மணிகண்டன், எஸ்.பி.சேகர். வி.கே.எம் திருப்பதி, பாரதிராஜா, தத்தனேரி பாலமுருகன், சுதந்திரம், கணேஷ்பாபு, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

வ.உ.சி சிலைக்கு இந்து ராஷ்டிரா தலைவர் கருணாநிதி சுவாமிகள் மாலை அணிவித்து மரியாதை
மதுரை செப் 06
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் அவரது திருவுருவச் சிலைக்கு, வேளீர் மக்கள் கட்சியின் நிறுவனர் பாலசுப்ரமணியம் தலைமையில்,அகண்ட இந்து ராஷ்டிரா தலைவர் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் ஜனநாயக மக்கள் நீதி கழக தலைவர் வேல்முருகன்,
வ உ சி இளைஞர் நலச்சங்க தலைவர் அண்ணாமலை ராஜன், முக்குலத்தோர் வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் பூவை ம.ஜெயக்குமார், வழக்கறிஞர் முருககணேஷ், பாஜக மகளிரணி தலைவி ரேணுகா தேவி, சுந்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை
மதுரை செப்டம்பர்
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் 310-வது பிறந்த நாளை முன்னிட்டு, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சேதுராமன் ஆணைக்கிணங்க, மதுரை மாட்டுத்தாவணி லேக் ஏரியாவில் உள்ள தலைமை அலுவலகத்தில், பூலித்தேவரின் திருவுருவப்படத்திற்கு, மாநில தலைமைக் கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இவ்விழாவில் மாநில துணைத்தலைவர் எஸ்.முத்துராமலிங்கம், மதுரை மண்டல தலைவர் எஸ்.எம். நாகராஜ் தேவர், மாநில தொழிற்சங்க பொருளாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் ராமையாத்தேவர், இராசு, சண்முகவேல், சேகர், அர்ச்சுனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைவது குறித்து டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு
மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தில் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் 01.09.2025 முதல் டாஸ்மாக் நிர்வாகம் அமுல்படுத்தபடும் நிலையில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்களின் கூட்டுக்குழு சார்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் டாஸ்மாக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக் கோரி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு காலி பாட்டில் திரும்பப் பெறும் வழிகாட்டு திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
இந்த வழிகாட்டி நெறிமுறையில் குழு அமைத்து அனைத்து தொழில் சங்கங்களின் கருத்துக்களை கேட்டறிந்து செயல்படுத்த கூறியுள்ளது. ஆனால் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் பின்பற்றாமல் இந்த திட்டத்தை தன்னிச்சையாக முடிவெடுத்து திட்டத்திற்கு போதிய பயிற்சி அளிக்காமலும், கால அவகாசம் வழங்காமலும், உடனடியாக செயல்படுத்துவது டாஸ்மாக் பணியாளர்களிடம் குழப்பத்தையும். அச்சத்தையும் ஏற்படுத்துவதால் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு அமைத்து. டாஸ்மாக் தொழிற்சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி செயல்படுத்திட வேண்டும்,டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற்று சேமித்து வைக்க போதிய இடவசதி இல்லாமல் உள்ளது.
ஆகையால் காலி பாட்டில்களை சேகரித்து பாதுகாக்க இடவசதியினை டாஸ்மாக் நிர்வாகம் ஏற்படுத்தி தரவேண்டும்,டாஸ்மாக் கடைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. ஆகையால் இந்த திட்டத்தினை செயல்படுத்துவதில் மிகவும் சிரமம் இருக்கிறது. ஆகையால் இந்த புதிய திட்டத்திற்கு பிரத்யோகமாக டாஸ்மாக் நிர்வாகம் புதிய ஆட்களை தெரிவு செய்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் பாட்டில்களின் வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை விலையை விட கூடுதலாக ரூ.10/- வசூலிக்கும் போது பணியாளர்களுக்கும். பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் பணியாளர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது,டாஸ்மாக் நிர்வாகம் ஏற்கனவே மதுக்கூடத்திற்கு காலிப்பாட்டில்களை வாடிக்கையாளர்களிடமிருந்து ஒப்பந்ததார்ருக்கும். சேகரித்து வைத்துக் கொள்ள உரிமம் வழங்கியுள்ளது. இந்த திரும்ப காலிப்பாட்டில்களை பெறும்போது மதுக்கடை பணியாளர்களுக்கும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது,டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் பாட்டில்களை அதே கடையில் மட்டுமே திரும்ப பெற வேண்டும் என்ற உத்தரவு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை பின்பற்றாமல் உள்ளது.
வாடிக்கையாளர்கள் எங்கு வேண்டுமானாலும் காலி பாட்டில்களை திரும்ப பெறும் வகையில் உத்தரவு வழங்கிட வேண்டும்,டாஸ்மாக் பணியாளர்கள் காலி பாட்டில்களை சேகரித்து வைத்து கையாளும் போது உடையும் பாட்டில்களுக்கு எந்தவித இழப்பீடு தொகை பற்றி சுற்றறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை உள்ளிட்ட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தது
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தினம் அரவக்குறிச்சி நகர தலைவர் திரு. ரயில்வே ராஜேந்திரன் தலைமையில் காந்தி சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கி பொதுமக்கள் மத்தியிலே மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் வட்டார தலைவர் திரு. எஸ் தமிழ்மணி, பெத்தான் கோட்டை திரு.முருகேசன், இந்நாள் வட்டாரத் தலைவர் திரு. கே காந்தி, வழக்கறிஞர் மாநில செயலாளர் திரு. முகமது அலி, கரூர் மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் திரு. பாலமுருகன், முன்னாள் நகர தலைவர் திரு. என். சிதம்பரம், முன்னாள் நகர தலைவர் திரு. முஜி ரகுமான், காங்கிரஸ் கட்சியின் 9வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி. பஷீலா பானு, அரவக்குறிச்சி நகர காங்கிரஸினுடைய துணைத் தலைவர் திரு. AK ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். உடன் குழந்தைவேலு, கிருஷ்ணன், காளிமுத்து, மாரியப்பன், பாலு, தொண்டன் ராஜு, தங்கவேலு, பிரவீன் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற மதுரை காதி மாரத்தான் 2025 மற்றும் இரத்ததான முகாம்..!
மதுரை ஜூலை 31
நம் தேசத்தின் பாரம்பரியமான காதி கிராமத் தொழில்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய த மதுரை காதி மாரத்தான் 2025 மற்றும் மாபெரும் இரத்ததான முகாம் இன்று வியாழக்கிழமை காலை 6.00 முதல் 7.00 மணி வரை, மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகளால் அவ்வளாகத்தில் தொடங்கி, தெப்பக்குளம் சுற்றுச்சுவர் முழுவதும் சுற்றி இனிதே நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் இந்திய அரசு கிராமத் தொழில்கள் மற்றும் காதி வாரியத்தின் தலைவர் மனோஜ்குமார் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர், பேராசிரியர் மு.இராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
அவர்களை கல்லூரி தலைவராகிய திரு எம்.கே.ஜவஹர் பாபு, தாளாளர் திருமதி எம்.வி. ஜனரஞ்சனிபாய், செயலாளராகிய திருமதி என்.எம்.ஹெச். கலைவாணி மற்றும் முதல்வர் முனைவர் கே.எஸ். கோமதி ஆகியோர் மரியாதையுடன் வரவேற்று சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம், மதுரை பிராந்திய இயக்குநர் செந்தில் இராமசாமி, தேசிய சேவை திட்டம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம். பாண்டி மற்றும் துணை முதல்வரும் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலருமான முனைவர் எஸ்.மஹிமா ஆகியோர் இணைந்து இந்நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்தனர்.

நான்கரை ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் கடன்சுமையில் மட்டுமல்ல ஊழலில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக உள்ளது என அதிமுக மருத்துவரணி இணைச்
செயலாளர் டாக்டர் பா.சரவணன் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை
. இதுகுறித்து அவர் கூறுகையில்:-
இந்த நான்கரை ஆண்டு கால ஸ்டாலின் ஆட்சியில் ஏறத்தாழ 5 லட்சம் அளவில் கடன் சுமையை உயர்ந்துவிட்டது இதனால் இந்தியாவில் கடன் வாங்கும் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.இந்த கடன் சுமையால் தமிழகத்தில் உள்ள 2 கோடியே 24 லட்சம் மேல் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 3 லட்சத்து 71,000 கடன் சுமை உள்ளது.
அதே,போல் கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் திமுக ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்சன் நடைபெற்று வருகிறது என்று கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் கடுமையாக நாள்தோறும் மக்களுக்கு அம்பலப்படுத்துகிறார். ஆனால் இதற்கு இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் ஸ்டாலின் மௌனம் காத்து வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடியை கொள்ளையடித்து விட்டு அதை எங்கே வைப்பது என்று ஸ்டாலினும், சபரீசினும் யோசித்து வருகிறார்கள் என்று அப்போதைய நிதி அமைச்சராக இருந்த பி.டி.ஆர். தியாகராஜன் பட்டவர்த்தமாக கூறினார்அப்போது வழங்கப்பட்ட பொங்கல் பரிசிலே 500 கோடி அளவில் ஊழல் செய்தார்கள். அதுபோல முட்டை கொள்முதலிலும் ஊழல் செய்தார்கள் அதேபோல டாஸ்மார் மூலம் ஆண்டு தோறும் 5400 கோடி அளவில் ஊழல் செய்கிறார்கள்.
அதேபோல சென்னையில் 5000 கோடிக்கு மழை வடிகால் பணியை செய்கிறோம் என்று கூறி அதில் பல கோடியை கொள்ளை அடித்தார்கள்.
அதேபோல நகராட்சி துறையில் பல முறைகேடு நடந்ததாக அமலாகத் துறை கூறி வருகிறது
தற்போது கூட மின் தேவைகளை உற்பத்தி செய்யாமல் தனியார் இடத்தில் கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கி உள்ளார்கள் இதன் மூலம் ஏறத்தாழ 13,000 கோடி ஸ்டாலின் குடும்ப ஜனநாயக சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது .மணலில் 5000 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்று உள்ளது.
அதேபோல திருவண்ணாமலையில் மூன்றே மாதத்தில் கட்டிய பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது தமிழகத்தில் தரமற்ற சாலைகள்
தரமற்ற பாலங்கள் உள்ளதாக பொதுமக்களை குற்றம் சாட்சி கூறுகிறார்கள்.இன்றைக்கு மதுரை மாநகராட்சியில் வரி முறைகேட்டில் 250 கோடி அளவில் ஊழல் நடைபெற்று உள்ளது
கடன் சுமையில்தான் தமிழகம் முதன்மை இடத்தில் இருந்தது, தற்போது ஊழல் செய்வதிலும் தமிழகம் முதன்மை இடத்தில் உள்ளது என்ற அவபெயரை ஸ்டாலின் திமுக அரசுஉருவாக்கி விட்டது
இந்த அவப்பெயரை மாற வேண்டும் என்றால் மீண்டும் எடப்பாடியார்
ஆட்சிக்கு வரவேண்டும் அப்போது
தான் தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியாக இருக்கும் என மக்களே கூறுகிறார்கள் எனக் கூறினார்

மதுரை மாநகருக்கு வருகை தர உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து விளாங்குடி மந்தை திடலில் பகுதி செயலாளர் சித்தன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ ஆலோசனைகளை வழங்கி பேசினார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, பா.குமார், பேராசிரியர் ஜெயபால், வி.பி.ஆர் செல்வகுமார்,திரவியம் மற்றும் வட்டக் கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், கேசவன், மலைச்சாமி,விஜயகுமார், ஜஸ்டிஸ் ராஜா, நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.