கட்டெறும்பு யூ டியூப் சேனல் ஏற்பாட்டில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி
மதுரை ஜூலை 28
கட்டெறும்பு யூ டியூப் சேனல் ஏற்பாட்டில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள டெகாத்லான் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் 1000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மதுரை சரவணா மருத்துவமனை சார்பில் அதிமுக மருத்துவ அணி இணைச்செயலாளர் டாக்டர் பா.சரவணன் மற்றும் திரைப்பட நடிகர் விமல் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். போட்டிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்
மதுரையைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு
சென்னை ஜூலை 28
சென்னையில் சன்மார்க் சமூக கல்வி அமைச்சகம் அமைப்பின் நிறுவனர் திருமதி ஞானி ஜெயவர்மன் தலைமையில் நடைபெற்ற டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில், தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் உமா மகேஸ்வரி அவர்களின் பல்வேறு சேவைகளை பாராட்டி மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தனர்.
உடன் தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநில தலைவர் பிச்சைவேல் உள்ளார்.
மதுரை 16 திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா மதுரை விஷால் தி மாலில் சிறப்பாக மதுரை மக்கள் முன்னிலையில் ஆடல் பாடலுடன் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்துனர்களாக டாக்டர் சரவணன் மற்றும் வாட்டர்மெலோன் ஸ்டார் டாக்டர் திவாகர் மற்றும் டைகர் சக்ரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மதுரை 16 திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஸ்ரீதேவி சின்னயாஜீன் வில்லியம்ஸ், இயக்குனர் ஜான் தாமஸ், கதாநாயகன் ஜெரோம் விஜய், கதாநாயகி நிவேதா தினேஷ் மற்றும் பட குழுவினர்கள் பலர் பங்குபெற்றர்.
மேலும் இந்த நிகழ்ச்சியை மதுரை அடங்கா அஜித் குரூப்ஸ் தல சபி தொகுத்து வழங்கினார். மேலும் இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் மதுரை 16 திரைப்பட கலைஞர்களை வாழ்த்தினர் முற்றிலும் புது முகங்கள் நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் ஒரு அரசியல் கிரைம் திரில்லர் படமாக இந்த திரைப்படம் 200 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் செப்டம்பர் முதல் வாரத்தில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்.
மதுரை அனைத்து மோட்டார் வாகனம் பழுது பார்ப்போர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
மதுரை ஜூலை 28
மதுரை அனைத்து மோட்டார் வாகனம் பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பாக சங்கப் பொதுக்குழு கூட்டம் மதுரை அருள்தாஸ்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சங்க உறுப்பினர்களுக்கு கண் மற்றும் பொது மருத்துவ முகாம் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனைகளை குட்செட் தெரு எம் எம் எம் கண் மருத்துவமனை மற்றும் என் டி சி சிறப்பு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவக் குழுவினர் மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் சங்கத் தலைவர் மாரி, இணைச்செயலாளர் முத்துப்பாண்டி, பொருளாளர் ரெங்கராஜ், சட்ட ஆலோசகர் முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள்.
நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலும், வீடியோவும் கேட்டோம். ஆனால் எங்களுக்குத் தரவே இல்லை. அதற்காக அரசு விதியையே மாற்றி, வீடியோக்களைக் கொடுக்காமல் பார்த்துக்கொண்டது. மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன், 1 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டார்கள்.
கர்நாடகாவிலும் நாங்கள் ஆழமான ஆய்வு செய்தோம் — மிகப்பெரிய மோசடி அங்கே வெளிச்சத்திற்கு வந்தது. நான் உங்களுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் காட்டத் தயார் — என்ன வஞ்சனை நடந்தது என்பதையும், எங்கே நடந்தது என்பதையும் முழுமையாக, ஆதாரங்களுடன் காட்ட முடியும்.
பாஜகவின் நாடகத்தை நாங்கள் புரிந்துகொண்டுவிட்டோம்.
கர்நாடகாவில் ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து, 6 மாதமாக முழுமையாக ஆய்வு செய்தோம் — அதிலேயே இவர்கள் எப்படி தேர்தலை திருடுகிறார்கள் என்ற முழு விபரங்களையும் பிடித்தோம்.
புதிய வாக்காளர்கள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்?
யார் உண்மையில் வாக்கு செலுத்துகிறார்கள்?
எங்கிருந்து அந்த வாக்குகள் போட்டுக்கப்படுகின்றன?
இப்போது அவர்களுடைய முழு திருட்டுத்தனமும் எங்களுக்குத் தெரிந்துவிட்டது — அவர் அதையும் உணர்ந்துவிட்டார்கள். அதனால்தான் இப்போது பீகாரில் அந்த முறையையே மாற்றி— ஆனால் ஒரு புதிய வடிவில் — பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்.
தற்போது அவர்கள் வாக்காளர்களையே நீக்கிவிட்டு, தங்களுக்கேற்ற முறையில் புதிய வாக்காளர் பட்டியலை உருவாக்கப்போகிறார்கள். இந்தியாவில் தேர்தல்கள் திருடப்படுகின்றன. இதுதான் நம் ஜனநாயகத்தின் கடுமையான உண்மை.
உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும் என்று கார்த்திக் ப. சிதம்பரம், .M.P. கேட்டுக்கொண்டுள்ளார். இதனை ஆராய்ச்சி துறை முழுமையாக முன்மொழிகிறது.
– DR.R. மாணிக்கவாசகம் MSC., AOM., PhD, மாநில தலைவர் – ஆராயச்சி துறை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.
#NDTVExclusive | Congress MP Karti Chidambaram (@KartiPC) expressed concerns over the growing health and safety concerns posed by stray dogs in the country as the Centre informed Parliament that over 37 lakh cases of dog bites were reported last year.
அவிநாசி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்பாட்டிலும் அவிநாசி மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் கார்த்திகேயன் அவர்கள் ஏற்பாட்டிலும் அவிநாசி அரசு மேல்நிலை பெண்கள் பள்ளியில், இன்று காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 350 க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வடை பாயசத்துடன் அறுசுவை விருந்து என்று வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் மாணிக்கம், தற்போதைய நகராட்சி உறுப்பினர் கருணாபால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊட பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் சாய் கண்ணன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க! கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்
பிடியதன் உருமை கொளமிகு கரியது வடிகொடு தனது அடி வழிபடும் சுபர் இடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில் வலிவலம் முறை இறையே -விநாயகர் காப்பு
இறையன்புடையீர், எல்லாம் வல்ல உமையொரு பாகன் திருவருளால் அமைந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு கள்ளியழ சித்தர் குருபூஜை விழா நிகழும் மங்களகரமான விசுவாவசு ஆண்டு வைகாசி மாதம் 27 – ஆம் நாள் (10.06.2025) செவ்வாய்கிழமை பௌர்ணமி திதியில் காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் ஸ்ரீ செல்வ விநாயகர் வழிபாடு, கள்ளிபழ சித்தர் குருபூஜை விழா வெகுவிமர்சையாக நடையெறுவதால் ஆன்மீக சான்றோர்கள், பக்தகோடிகள், பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு குருபூஜை விழாவை சிறப்பான முறையில் நடத்தி கொடுத்து சித்தரின் அருளையும், அருட்பிரசாதத்தையும் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம் ஊர் பொதுமக்கள், ஆத்துமேடு – அரவக்குறிச்சி.
குறிப்பு : 10.06.2025 செவ்வாய்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் சித்தர் குருபூஜை அன்னதானம் நடைபெறும். அன்னதானத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, பால், தயிர், காய்வகைகள் கொடுத்து உதவும்படி கேட்டுக்கொள்கிறோம். சென்ற ஆண்டு அன்னதானத்திற்கு நிதியுதவி, பொருளுதவி வழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
வரவனை கிரமத்திற்குட்பட்ட 21 குளங்களையும் தூர் வார முடிவெடுத்து எயிட் இந்தியா மற்றும் கைஃபா அமைப்பின் உதவியுடன் பசுமைக்குடி தூர் வாரி வருகிறது. இதுவரை பாப்பனம்பட்டி அருகில் மத்தியமடைகுளம் , கோட்டப்புளிபட்டி மணியாரண்மடை குளம், தலையாரியூர் தலையாரிகுளம், சுண்டுக்குழிப்பட்டி குளம், பாப்பனம்பட்டி வெள்ளாட்டுக்காரன் குளம் ஆகிய குளங்கள் தூர் வாரும் பணி முடிவடைந்து 6 வது குளமாக பாப்பான்குளம் என்னும் குளம் தூர்வாரும் பணி ஆரம்பித்தது.
குளம் தூர் வாருவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் குளம் எப்படி பராமரிப்பது, விவசாயத்தை மீட்டெடுப்பது என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மட்டன் பிரியாணியுடன் நடந்த அசைவ விருந்தில் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
வரவனை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஜே சி பி டிரைவர் ஆதி மூலம் ஆகியோருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இத்திருவிழாவை முன் நின்று நடத்திய பாப்பனம்பட்டி திரு. பழனிவேல், முன்னாள் கவுன்சிலர் திரு. நரசிங்கமூர்த்தி, திரு ஐயம்பெருமாள் ஆகியோர் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு நன்றி.