Tuesday , January 27 2026
Breaking News
Home / செய்திகள் (page 25)

செய்திகள்

All News

Earthquake: ஷாக்! இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.4!

Earthquake: ஷாக்! இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.4!

இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது ஹிங்கோலி. இங்கு இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இது பதிவாகியுள்ளது.

தேசிய நிலநடுக்கவியல் மையம் அளித்துள்ள தகவலின்படி, காலை 7.14 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹிங்கோலியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திற்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்:

மகாராஷ்ட்ராவில் நிலநடுக்கம் ஏற்பட்ட 3 மணி நேரத்தில் இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்திய பெருங்கடலில் 10 கிலோ மீட்டராக இது பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக பெரியளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மக்களே தெரிஞ்சிக்கோங்க..! வங்கிக் கணக்கில் பணம் திருடப்படாமல் தடுப்பது எப்படி.? போலீசார் அறிவுரை.!!

மக்களே தெரிஞ்சிக்கோங்க..! வங்கிக் கணக்கில் பணம் திருடப்படாமல் தடுப்பது எப்படி.? போலீசார் அறிவுரை.!!

போலீசார் அறிவுரை: இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது .

இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் வங்கி கணக்கில் இருந்து மர்ம நபர்கள் பணம் திருடுவதை தடுக்க சைபர் கிரைம் போலீஸ் அறிவுரை வழங்கியுள்ளது.

அதாவது, OTP மட்டுமல்லாது PIN அமைக்கும்படியும், SMS, லிங்குகளை நம்பி டவுன்லோடு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பணத்தை திருடும் முயற்சி நடப்பதாக உங்களுக்கு சந்தேகம் எழுந்தால் 1930 என்ற எண் அல்லது www.cybercrim.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

“அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்காவிட்டால் வழக்கு” – செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

"அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்காவிட்டால் வழக்கு" - செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

சென்னை: ‘குற்றப்பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் எனது பெயர் இருப்பதாக என்மீது அவதூறு பரப்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

இல்லாவிட்டால் அவதூறு வழக்கும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்படும்’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து சத்தியமூர்த்தி பவனில் இன்று அவர் அளித்த பேட்டி: ‘எனது பெயர் குற்றப்பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். உண்மைக்குப் புறம்பாகவும் அவதூறாகவும் பேசினால் என்ன வழக்கு வரும் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு தெரியாதா?. காந்தியைக் கொலை செய்தீர்கள். எங்கள் நடத்தையை குற்றம் சொல்கிறீர்கள். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவீர்களா!.

எல்லா குற்றவாளிகளையும் கட்சியில் சேர்த்துவிட்டு, தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு பற்றி பேசுகிறார். தமிழக பாஜகவில் உள்ள ரவுடிகள் பட்டியலை 32 பக்க உளவுத் துறை அறிக்கையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அந்தக் கட்சியில் சேர்ந்த 261 குற்றவாளிகள் மீது 1977 வழக்குகள் உள்ளன.

என்னை ரவுடி எனக் கூறும் அண்ணாமலை எந்த காவல்நிலையில் என்ன வழக்கு என் மீது உள்ளது என நிரூபிக்க முடியாமா?. என்னை அவதூறாகப் பேசியதற்கு அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இது கடைசி எச்சரிக்கை. மன்னிப்புக் கேட்காவிட்டால், அவதூறு வழக்கும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்படும்.

அதன்பின்னர் முன்ஜாமீனில் கூட வெளிவர முடியாது. எனவே, அண்ணாமலை மன்னிப்புக் கேட்கும் வரை விடமாட்டோம். பாஜக மாநிலத் தலைவர் இப்படி அவதூறகப் பேசிய விவகாரத்தை இந்திய அளவில் மக்களிடம் கொண்டு செல்வோம். அண்ணாமலையின் வாழ்க்கை தற்போது காங்கிரஸ் கட்சியிடம் 

இந்த மாதம் வானத்தை பிரகாசிக்க இரட்டை விண்கல் ஒளி மழை: எப்படி எப்போது பார்க்க வேண்டும்

இந்த மாதம் வானத்தை பிரகாசிக்க இரட்டை விண்கல் ஒளி மழை: எப்படி எப்போது பார்க்க வேண்டும்

ஒரு அற்புதமான வான காட்சி ஜூலை இறுதியில் நெருங்குகிறது மற்றும் பூமி முழுவதும் எல்லா இடங்களிலிருந்தும் நிர்வாணக் கண்ணுக்குத் தெரியும்.

கண்கவர் விண்கற்கள் ஒரே நேரத்தில் நிகழும் மற்றும் அனைத்து ஆஸ்ட்ரோஃபில்களுக்கும் ஒரு விருந்தாக இருக்கும். மாத இறுதியில் விண்கற்கள் பொழிவு உச்சத்தை அடைந்து நட்சத்திரங்களை சுடும் அழகிய காட்சியை கொடுக்கும்.

விண்கல் பொழிவை எப்போது, ​​எங்கு பார்க்க வேண்டும்

டெல்டா அக்வாரிட்ஸ் மற்றும் ஆல்பா காப்ரிகார்னிட்ஸ் ஜூலை பிற்பகுதியில் இருந்து ஆகஸ்ட் நடுப்பகுதி வரை இயக்கத்தில் அமைக்கப்படும். இருப்பினும், வான நிகழ்வு ஜூலை 30 அன்று உச்சத்தை எட்டும், அது இருண்ட வானத்திற்கு எதிராக பூமியில் இருந்து அதிகமாகத் தெரியும். எர்த்ஸ்கியின் கூற்றுப்படி, ஷூட்டிங் நட்சத்திரங்களைக் காண சிறந்த நேரம் மாலையில் இருந்து விடியற்காலை வரை மற்றும் 2:00 UTC அல்லது 10pm ET மணிக்கு கதிர்வீச்சு அதிகமாக இருக்கும், மேலும் விடியற்காலையில் மந்தமாகத் தோன்றும். மழையின் போது எதிர்பார்க்கப்படும் மணிநேர விகிதம் வானத்தில் சந்திரன் இல்லாமல் உச்சத்தில் 15 முதல் 20 விண்கற்கள் இருக்கும். வான நிகழ்வின் சிறந்த காட்சியை உறுதிசெய்ய, அமாவாசை கட்டத்தில் அதிக உயரமுள்ள இடம் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இரண்டு விண்கற்கள் பொழிவுகளில் மிகப் பெரியது டெல்டா அக்வாரிட்ஸ் பூமியில் இருந்து முதலில் பார்க்கப்படும். வானம் தெளிவாக இருந்தால், கும்பம் விண்மீனைச் சுற்றியுள்ள மகரம், அக்கினி மற்றும் மீனம் ஆகிய விண்மீன்களையும் ஒருவர் கவனிக்கலாம்.

விண்கற்களைப் பார்ப்பதற்கு நினைவில் கொள்ள வேண்டிய புள்ளிகள்

விண்கல் பொழிவுகளை அவற்றின் உச்சத்தில் கூட கண்டறிவது பார்வை, நேரம், வானிலை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றின் அற்பமான விஷயம். வருடாந்திர வான நிகழ்வின் சரியான பார்வையை உறுதிப்படுத்த அனைத்து காரணிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் இருப்பிடத்தை உறுதி செய்வதாகும். Earth.com இன் படி, ஒளி குறுக்கீட்டைக் குறைக்க நகர்ப்புற விளக்குகள் மற்றும் கிராமப்புற பகுதிகள் அல்லது இருண்ட வானம் பூங்காக்கள் போன்ற பகுதிகளிலிருந்து ஒரு இடத்தைத் தேர்ந்தெடுப்பதை உறுதிசெய்யவும்.

பூமியில் தெரிந்தாலும் கூட, உங்கள் காட்சிகள் இரவு வானத்துடன் சரிசெய்ய சிறிது நேரம் தேவைப்படும். எனவே இருண்ட வானத்தை சரிசெய்ய உங்கள் கண்களுக்கு 20-30 நிமிடங்கள் கொடுங்கள். விண்கற்களைப் பார்ப்பதற்கு தொலைநோக்கிகள் தேவையில்லை, இருப்பினும், சிற்றுண்டிகள் மற்றும் பானங்களுடன் வானத்தை வசதியாகப் பார்த்து மகிழுங்கள்.

பெங்களூருவில் 30 பேருடன் சென்ற பேருந்து தீ விபத்து

பெங்களூருவில் 30 பேருடன் சென்ற பேருந்து தீ விபத்து | கேமில் சிக்கியது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை காலை 30 பயணிகளுடன் ஓடும் பேருந்து தீப்பிடித்து எரிந்தது .

பெங்களூருவில் உள்ள அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகே பிஎம்டிசி பேருந்தின் இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் சிறிது நேரத்தில் உயிர் தப்பினர்.

பயணிகள் அனைவரும் உடனடியாக இறக்கிவிடப்பட்டனர், தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

தமிழ்நாடு வானிலை புதுப்பிப்பு: புயல்கள் பெங்களூரிலிருந்து கிழக்கு நோக்கி நகர்வதால் சென்னையில் லேசான மழை பெய்யும்

தமிழ்நாடு வானிலை புதுப்பிப்பு: புயல்கள் பெங்களூரிலிருந்து கிழக்கு நோக்கி நகர்வதால் சென்னையில் லேசான மழை பெய்யும்

தமிழ்நாடு வானிலை புதுப்பிப்பு: பெங்களூருவின் சில பகுதிகளில் கனமழையைக் கொண்டு வந்த இடியுடன் கூடிய புயல் கிழக்கே வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்துள்ளது .

இருப்பினும், இந்தப் புயல்கள் பயணிக்கும்போது கணிசமாக வலுவிழந்தன.

இந்த இடியுடன் கூடிய மழையால் சென்னையில் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை லேசான தூறல் மற்றும் மழை பெய்தது. லேசான மழை விரைவில் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்குப் பருவமழை மேற்குக் கடற்கரையில் தொடங்குவதால், கடலோர தமிழகம் இன்று முதல் இடியுடன் கூடிய மழை குறைவதைக் காணலாம், வெள்ளிக்கிழமை சுற்றிலும் புயல்களுக்கான மற்றொரு சுருக்கமான சாளரம் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு: புதிய குற்றவியல் சட்டங்களை ஆய்வு செய்ய திமுக அரசு குழு அமைக்கிறது

சென்னையைப் பொறுத்தவரை, ஆர்எம்சி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று கணித்துள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26°C ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை விமான நிலையத்தில் ஜூலை 8, 2024 திங்கட்கிழமை (17 ஆசாதா 1946) அதிகபட்ச வெப்பநிலையான 39.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என்று வானிலை நிறுவனம் மேலும் கூறியது.

ரேபரேலியில் ராகுல் காந்தி!

ரேபரேலியில் ராகுல் காந்தி!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியான ரேபரேலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ராகுல் காந்தி சென்ற விமானம் ஃபர்சத்கஞ்ச் விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வானிலை காரணமாக லக்னெளவில் தரையிறங்கியுள்ளார்.

அங்கிருந்த சாலை வழியாக ரேபரேலி செல்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக ரேபரேலி செல்லவுள்ள ராகுல் காந்தி கட்சித் தொண்டர்கள் மற்றும் மக்களை சந்திக்கவுள்ளார்.

மேலும், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

தொடர்ந்து, கடந்தாண்டு சியாச்சின் தீ விபத்தில் மக்களவை காப்பாற்றும்போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் அன்சுமான் சிங்கின் குடும்பத்தினரையும் அவர் சந்திக்கவுள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னதாக அன்சுமான் சிங்குக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கீர்த்தி சக்ரா விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

நேற்று அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்ததுடன் நாடாளுமன்றத்தில் குரலெழுப்புவோம் என்று உறுதி அளித்திருந்தார்.

ரவுடிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்

ரவுடிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்

சென்னை: ரவுடிசம் மற்றும் லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை அளிப்பேன் என சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்றார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன். குற்றவாளிகளை பிடிக்க முன்னுரிமை அளிப்பேன். சென்னை எனக்கு புதிது அல்ல. எல்லா பொறுப்புகளிலும் பணிபுரிந்துள்ளேன்.

புள்ளி விவரங்களின் படி சென்னையில் குறைவான குற்றங்கள் தான் நடக்கிறது. @subtitle@நடவடிக்கை@@subtitle@@ரவுடிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை அளிப்பேன். ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும். ரவுடிகளை கட்டுப்படுத்துவதில் முனைப்பு காட்டப்படும்.

போக்குவரத்து சிக்கல்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன். போலீஸ் அதிகாரிகள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போது தான் குற்றங்கள் நடப்பது குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

SBI வாடிக்கையாளர்களுக்கு ஆபத்து.. இந்த தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க.. வங்கி நேரடி எச்சரிக்கை.. என்ன விஷயம்?

SBI வாடிக்கையாளர்களுக்கு ஆபத்து.. இந்த தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க.. வங்கி நேரடி எச்சரிக்கை.. என்ன விஷயம்?

எஸ்பிஐ (SBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank Of India) தற்போது அதன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு (SBI bank customers) ஒரு முக்கியமான எச்சரிக்கை செய்தியை (Warning message) வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் (SMS) மூலம் நிகழக்கூடிய மோசமான மோசடி ஆபத்து குறித்து, பாரத ஸ்டேட் வங்கி தற்போது எச்சரித்துள்ளது. இந்த மோசடியில் வாடிக்கையாளர்கள் தெரியாமல் கூட சிக்கிட வேண்டாம் என்றும், அதேபோல், இதுபோன்ற மோசடிகளில் SBI வாடிக்கையாளர்கள் சிக்காமல் தப்பிக்க என்ன செய்ய வேண்டுமென்ற தகவலையும் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது.

அசால்ட்டாக 50 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை கையாண்டு வரும் எஸ்பிஐ (SBI) வங்கி தற்போது அதன் அணைத்து வகையான வங்கி கணக்கு (Sbi bank accounts) வாடிக்கையாளர்களுக்கும் ஒரு புதிய எச்சரிக்கை செய்தியை (SBI warning message to customers) வெளியிட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் (Sbi X Page) வழியாக ஒரு முக்கியமான தகவலை அதன் வங்கி வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்துள்ளது.

SBI வாடிக்கையாளர்களுக்கு ஆபத்து.. வங்கியே நேரடியாக வெளியிட்ட எச்சரிக்கை செய்தி:

SBI வங்கி வாடிக்கையாளர்களின் KYC அப்டேட் (SBI KYC Update) மற்றும் ரிடீம் ரிவர்ட் (SBI Reward Redeem) போன்ற போலியான எஸ்எம்எஸ் மூலம் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். மோசடிக்காரர்களின் புதிய மோசடி முயற்சியாக, இத்தகைய மோசடிகள் இப்போது இந்தியா முழுக்க பரவி வருவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணிற்கு (mobile number) நேரடியாக ஒரு போலி SMS மெசேஜ் அனுப்பப்படுகிறது.

அதில் உங்கள் KYC அப்டேட்டை இன்றே உடனே செய்து முடிக்காவிட்டால் உங்கள் அக்கௌன்ட்டின் சேவை முடக்கப்படும் என்று அந்த எஸ்எம்எஸ் செய்தியில் (SMS message) குறிப்பிடப்பட்டுள்ளது. உடனே உங்கள் KYC தகவலை இலவசமாக அப்டேட் (Free KYC update) செய்ய இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும் (clik this link) என்று ஒரு போலி இணையதள லிங்க்கையும் அந்த எஸ்எம்எஸ் உடன் மோசடிக்காரர்கள் இணைத்து அனுப்புகிறார்கள்.

இதேபோல், கிரிக்கெட் ரிவார்டு (Cricket reward) என்ற பெயரில் உங்கள் SBI வங்கி கணக்கிற்கு ரூ. 4,999 ரிவார்டு பாயிண்ட்களாக (reward points) வழங்கப்பட்டுள்ளது. உடனே இவற்றை ரொக்கமாக மாற்ற, இந்த லிங்கை கிளிக் செய்யவும் என்று போலியான மோசடி லிங்க்குடன் மற்றொரு எஸ்எம்எஸ் செய்தி, SBI வங்கி வாடிக்கையாளர்களிடம் பகிரப்பட்டு வருகிறது. மொபைல் போனிற்கு வரக்கூடிய எஸ்எம்எஸ்கள் பார்ப்பதற்கு அதிகாரப்பூர்வமாக இருப்பது போல தெரிந்தாலும், அவை போலியானதாக இருக்கிறது.

போலி SMS மற்றும் SBI வங்கியின் அசல் மெசேஜ்களை எப்படி அடையாளம் காண்பது?

இந்த மெசேஜ்களில் வரும் போலியான லிங்க்களை கிளிக் செய்வதன் மூலம், வாடிக்கையாளர்கள் அவர்களின் வங்கி கணக்கையும் அதில் உள்ள பணத்தை மொத்தமாக இழக்கக்கூட வாய்ப்புள்ளது என்று SBI வங்கி எச்சரித்துள்ளது. போலியான SBI மெசேஜ் (Fake SBI bank SMS messages) மற்றும் அசல் வங்கியின் SMS மெசேஜ்களை எப்படி அடையாளம் காண்பது? SBI அல்லது SB என்ற குறுகிய அடையாளங்களுடன் வரும் SMS மட்டுமே அதிகாரப்பூர்வ வங்கி மெசேஜ்களாகும்.

அதேபோல், வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கங்கள் எப்போதும் “.sbi” என்ற அடையாளங்களுடன் நிறைவு பெரும். உதாரணமாக, “https://bank.sbi அல்லது http//onlinesbi.sbi” என்று குறிப்பிடப்படும். அதேபோல், HTTP மற்றும் பேட் லாக் (Pad lock) விபரங்களை கண்காணிக்க மறக்காதீர்கள். ஒருவேளை நீங்கள் ஏமாற்றப்பட்டாலோ அல்லது சைபர் கிரைம் பற்றி புகார் அளிக்க விரும்பினாலோ உடனே “1930” என்ற உதவி எண்ணிற்கு (helpline) அழைப்பு கொடுக்கவும். அல்லது https//cybercime.gov.in மூலம் புகார் அளிக்கலாம்.

அடையலாம் தெரியாத எண்ணில் இருந்து பரிசு தொகை என்ற பெயரில் அல்லது கிரிக்கெட் ரிவார்டு என்ற பெயரிலோ எஸ்எம்எஸ் வந்தால், அதனுடன் இருக்கும் லிங்கை மட்டும் கிளிக் செய்துவிட வேண்டாம் எண்று SBI வாடிக்கையாளர்களை வங்கி எச்சரித்துள்ளது.

சுதந்திர போராட்ட வீரரும், சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சருமான திரு.பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்கள் பிறந்தநாள் இன்று சென்னை, சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தேன். விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள்.

அதன் பின்பு, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES