Tuesday , January 27 2026
Breaking News
Home / செய்திகள் (page 31)

செய்திகள்

All News

‘நான் முதல்வன்’ உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தக் கூடுதலாக 2 இணை இயக்குநர் – அரசாணை வெளியீடு!

'நான் முதல்வன்' உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தக் கூடுதலாக 2 இணை இயக்குநர் - அரசாணை வெளியீடு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான “நான் முதல்வன்” திட்டமானது. கடந்த 1.3.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது, இந்த மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான திட்டமானது ஈராண்டுகளைக் கடந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று, வேலைவாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ‘நான் முதல்வன்’ உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தக் கூடுதலாக 2 இணை இயக்குநர் பணியிடங்களுக்கு அனுமதியளித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அரசாணை வெளியிட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில அளவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு மாணவர் நலத்திட்டங்களைச் செயல்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரை சிறைக் கைதிகள் நலனுக்காக JCI மதுரை சென்ட்ரல் அமைப்பு சார்பில் 500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப் பணிகள் துறை சார்பாக நடைபெற்ற இந்த விழாவில் ஜேசிஐ மதுரை சென்ட்ரல் சார்பில் 500 புத்தகங்கள் சிறைக்கைதிகளின் நலனுக்காக வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 2000 புத்தகங்கள் வழங்குவோம் என்று ஜே.சி.ஐ அமைப்பினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக ஜே.சி.ஐ தேசிய இயக்குநர் G.S.வர்மா, மண்டல தலைவர் சுந்தரேஸ்வரன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக மண்டல இயக்குநர் திருமதி பவித்ரா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

மேலும் ஜே.சி.ஐ மதுரை சென்ட்ரல் அமைப்பு தலைவர் அர்ஜுன்பாலா , செயலாளர் கோபிநாத், மதுரை சென்ட்ரல் முன்னாள் தலைவர் மனோஜ் குமார் மற்றும் உறுப்பினர்கள் சர்வேஷ்வேல் ஷங்கர் தக்‌ஷ்ணாமூர்த்தி, கோகுல்நாத், கார்த்திக், ஷ்யாமேஷ் , அபிராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

25-06-2024 | தமிழ்நாடு – கரூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக திருமிகு

@jothims அவர்கள் அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியவாறு பதவியேற்றார்.

“திரும்ப போராட வந்துட்டோம்… .” நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்ற 6 பெண் எம்பிக்களின் வைரல் பதிவு!

"திரும்ப போராட வந்துட்டோம்... ." நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்ற 6 பெண் எம்பிக்களின் வைரல் பதிவு!

ந்தியாவில் நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உட்பட மற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தது.3 வது முறையாக மோடி ஜூன் 9ம் தேதி பதவியேற்றார். 18வது மக்களவை கூட்டத் தொடர் நேற்று காலையில் தொடங்கிய நிலையில் புதிய எம்.பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இதில் கடந்த முறை அதாவது 2019 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற 6 தோழிகள் இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதன்படி தமிழகத்தில் இருந்து கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் மூவரும் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல் மகாராஷ்டிராவில் இருந்து சரத்பவார் மகள் சுப்ரியா சுலேவும் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து மேற்கு வங்கதிலிருந்து திருணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ராவும், உ.பி., அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் என 6 பேரும் இணைபிரியா தோழிகள் நாடாளுமன்ற வளாகத்தில் 6 பேரையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். இவர்கள் 2014ம் ஆண்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தற்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

“எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கினால் மட்டுமே அரசுக்கு ஆதரவு” – ராகுல் காந்தி

"எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கினால் மட்டுமே அரசுக்கு ஆதரவு" - ராகுல் காந்தி

புதுடெல்லி: ‘எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினால், மக்களவை சபாநாயகர் தேர்வில் அரசுக்கு ஆதரவளிப்போம்.’

என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், சபாநாயகர் பதவிக்கு யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்தால் தனிப்பட்ட முறையில் பாஜக சபாநாயகரை தேர்வு செய்தது.

ஆனால் இம்முறை பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் கூட்டணி ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சபாநாயகர் பதவி கொடுக்கப்படலாம் என்ற பேச்சுகளும் உள்ளன.

இந்த நிலையில் புதிய சபாநாயகரை ஒருமனதாக தேர்வு செய்யும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. அந்த அடிப்படையில் எதிர்க்கட்சிகளுடன் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் கிரண் ரிஜ்ஜு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரிடம் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று வரை மட்டுமே உள்ளது. இன்று மனுதாக்கல் செய்யப்பட்டால் நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். இதுவரை அனைத்து சபாநாயகர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் சபாநாயகர் தேர்தல் கவனம் பெற்றுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர்கள் உடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த ஒருவரை துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மிகத் தெளிவாக ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துக் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராகுல் காந்தி கூறுவது என்ன?: மக்களவை சபாநாயகர் தேர்வு குறித்து பேசிய ராகுல் காந்தி, ‘எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினால், மக்களவை சபாநாயகர் தேர்வில் அரசுக்கு ஆதரவளிப்போம். மக்களவை துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே நாடாளுமன்றத்தின் மரபு. எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமாக அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

துணை சபாநாயகர் பதவி கொடுத்தால் மட்டுமே அரசுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு என்பதை ராஜ்நாத் சிங்கிடம் தெளிவாக கூறிவிட்டோம். மீண்டும் அழைப்பதாக ராஜ்நாத் சிங் கூறினார். ஆனால் அவர் இன்னும் அதை செய்யவில்லை. எங்கள் தலைவர் அவமதிக்கப்படுகிறார்.’ என்று தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல்!

#JUST IN : முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல்!

மக்களவை சபாநாயகர் பதவிக்கான வேட்பாளராக பாஜக எம்.பி., ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ தனது வேட்பாளராக ஓம் பிர்லாவை நிறுத்தியுள்ளது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ ஆகியோர் எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்து ஏற்பட ஆலோசனை நடத்தினர். ஆனால் உடன்பாடு எட்டப்படாததால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் வேட்பாளரை நிறுத்துகிறது.

ஒம் பிர்லா பிரதமர் மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்த நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில்,துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கினால் பாஜக கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நிபந்தனை விதித்துள்ளார். சபாநாயகர் பதவிக்கு கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கொடிக்குன்னேல் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். துணை சபாநாயகர் பதவி வழங்கினால் ஒருமித்த கருத்துக்கு பங்களிப்போம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. ஆனால், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. மறுபுறம், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஓம் பிர்லாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

7-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்… கோவை விமான நிலையத்தில் தீவிர சோதனை

7-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்... கோவை விமான நிலையத்தில் தீவிர சோதனை

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வாரம் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அதோடு நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.தொடர்ந்து விமான நிலையம் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டன. பயணிகளின் உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அது வதந்தி என்பது தெரியவந்தது.

இதனிடையே மீண்டும் மின்னஞ்சல் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய்கள், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.வெடிகுண்டு மிரட்டலால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டி என்.ஜி.ஓ நகரில் அக்ரி ரகுவரன்-அனிதா இல்ல புதுமனை புகுவிழா..!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி என்.ஜி.ஓ நகரில், ஜோதி மாணிக்கம் பெருமாள் கோவில் பங்காளி அக்ரி ரகுவரன்-அனிதா இல்ல புதுமனை புகுவிழா நடைபெற்றது.

இவ்விழாவில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கு ஓடை ராமர், அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.டி.கே ஜக்கையன், ஒன்றிய சேர்மன் லோகிராஜன், ஒன்றிய பொருளாளர் லோகநாதன் உள்பட மாவட்ட, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

பாரதிய ஜனசங்கம் ஸ்தாபகர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி நினைவு தினம் :- மதுரை காளவாசல் மண்டலில் மலர் அஞ்சலி செலுத்திய பாஜக நிர்வாகிகள்…!

பாரதிய ஜனசங்கம் ஸ்தாபகர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காளவாசல் மண்டல் சார்பாக மலரஞ்சலி 

மதுரை ஜூன் 23

“பாரதிய ஜனசங்கம் ஸ்தாபகர் “ஷ்யாம்பிரசாத் முகர்ஜியின்” 72 வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவ படத்திற்கு மதுரை காளவாசல் மண்டல் சார்பாக  பாஜக நிர்வாகிகள் மலர் தூவி நினைவு அஞ்சலியை செலுத்தினர்

மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஷியாம் பிரசாத் முகர்ஜி “பாரதிய ஜனசங்கம் என்ற அமைப்பை தொடங்கினார். மேலும் ஜவர்ஹலால் நேரு மந்திரி சபையில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை  அமைச்சராக பதவி வகித்தார். 1980 ஆம் வருடம் பாரதிய ஜன சங்கம் பாரதிய ஜனதா கட்சியாக பெயர் உருவெடுத்தது. இன்று இந்தியாவில் மாபெரும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உருவாகி அதன் பிரதமராக மூன்றாவது  முறையாக நரேந்திரமோடி  பிரதமராக பதவி ஏற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை தலைமையில் வலுவான எதிர்க்கட்சியாக பாஜக மாறி வருகிறது. இந்நிலையில் பாரதிய ஜனசங்கம் 

ஸ்தாபகர் “ஷ்யாம்பிரசாத் முகர்ஜியின்” 72 வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை காளவாசல் மண்டலில், மாவட்ட துணைத் தலைவர் ராஜ்குமார் தலைமையிலும், காளவாசல் மண்டல் தலைவர் முனைவர் பிச்சைவேல் முன்னிலையில்  பிரசாத் முகர்ஜியின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் பாலமுருகன், பொருளாதார பிரிவு மாவட்ட துணைத்தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்டச் செயலாளர் சாய் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட பொதுச்செயலாளர் ஸ்ரீ ராம், மண்டல் செயலாளர் அ.கண்ணன், கிளைத்தலைவர் பொன்முருகன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் கரீம்பாய், கலை கலாச்சார பிரிவு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், திருக்கோவில் பிரிவு கண்ணன்சாமி, மகளிரணி மாவட்ட செயலாளர் உமாராணி  மற்றும் வல்லத்தரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பூப்பூ நீராட்டு விழாவில் பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது…

கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம் வீராணம்பட்டி திரு ஏழுமலை அவர்கள் எனது மகளின் பூப்பூ நீராட்டு விழாவிற்கு, வருகை தரும் உறவினர்களும், நண்பர்களும் மரக் கன்றுகள் வழங்க வேண்டும் என திரு நரேந்திரன் கந்தசாமி கணினி தொழில்நுட்ப ஆலோசகர் (அமெரிக்கா) பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, திரு நரேந்திரன் கந்தசாமி அவர்களின் அறிவித்தலின்படி ஐயா திரு மு கந்தசாமி வரவனை ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் மூலமாக 300 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளும், பழக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

மேலும் பசுமைக்குடி தன்னார்வலர்கள் கருப்பையா, காளிமுத்து, கவிநேசன், செந்தமிழ்செல்வன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். பசுமைக்குடி தன்னார்வலர்கள் போட்டோவுடன் பேனர் வைத்து வரவேற்ற குடும்பத்திற்கு பசுமைக்குடி தன்னார்வலர்கள் சார்பில் நன்றி தெரிவித்தார் கருப்பையா அவர்கள்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES