Wednesday , December 11 2024
Breaking News
Home / செய்திகள் (page 110)

செய்திகள்

All News

சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக நிற்கும் வாகனம்

கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட காஞ்சிரம்பரம்பு கரையிலிருந்து கண்ணவிளை கருங்கல் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக நிற்கும் வாகனம் இந்த வாகனத்தின் உரிமையாளரும் சுமிதா ஸ்டுடியோ உதயமார்த்தாண்டம் உரிமையாளருமான ரவியிடம் பலமுறை அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர் இதனை அவர் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர் அதுமட்டுமல்லாது கிராம பஞ்சாயத்துக்கு பலமுறை அப்பகுதி மக்கள் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் இருகின்றனர்.
செய்தியாளர் கிருஷ்ண மோகன்
ஒளிப்பதிவாளர் ஜாக்சன் ஜெனோபட்

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் உடைய பொதுக்குழு

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின்  பொதுக்குழு இன்றைக்கு நடைபெற்றது, அதில் 2020 2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் ஆண், பெண் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி ஒரு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

குறிப்பாக இன்றைக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் ஒரு கோடி ரூபாய் வரை வழக்குகளை தாக்கல் செய்யலாம் ஆனால் ஒருசில மாவட்டங்களில் தலைமை நீதிபதி இல்லாமல் காலியாக இருக்கின்றது அதேபோல் தமிழக அரசு ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியாக மாவட்டக் குறைதீர் ஆணையத்தில் கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கும் இன்னும் பல்வேறு மாவட்டங்களில் அது அந்த பணி நடைபெறாமல் இருக்கின்றது அதேபோல் இன்றைக்கு பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆகவே அந்த பாதுகாப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளன தீர்வுகளை இந்த சட்டத்தை கடுமையாக அமல் படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் அதேபோல் பரிசோதனைக்காக ஒருசில தனியார் மருத்துவமனையில் பரிசோதனை என்ற பெயரில் தவறான ஒரு அறிக்கை குறித்து மக்களிடையே ஒருவர் கிட்டே பணம் கொடுக்கக் கூடிய ஒரு சூழல் இருக்கிறது அது போன்ற தனியார் மருத்துவமனைகளையும் ஆய்வகங்களில் ஆய்வு செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ஒரு சில தீர்மானங்கள் நிறைவேற்ற தமிழக அரசு அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

திருப்பூரில் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சாலை மறியல்….

திருப்பூர் மாவட்டத்தில் மிக பெரிய அரசு மருத்துவமனை என்று தான் பெயர் ஆனால் அதில் எந்த ஒரு பயனும் இல்லை நாட்கள் நாள் மாதம் மாதம் வருடம் வருடம் மருத்துவமனை மீது அதிக குற்றங்கள் சொல்கின்றனர் போது மக்கள் பிரசவசம் என்றாலும் அவசர சிகிச்சை என்றாலும் மருத்துவரை பார்ப்பது மிக கடினம் போது நாட்களில். இப்போது கோரோனா நாட்களில் மருத்துவர்களே இருப்பது இல்லை அனைத்தும் செவிலியர்கள் பார்த்து கொள்கிறார்கள் பிரசம் என்றாலும் செவிலியர்கள் அவசர சிகிச்சை என்றாலும் செவிலியர்கள் தான் இருக்கிறார்கள் மருத்துவர்கள் இருப்பதே இல்லை .கொரோனா வைரஸ் தாக்கம், மருத்துவத்துறையில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. திருப்பூர் அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதேபோல, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அறிகுறி இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.இதற்கிடையே, கட்டுமானப் பணியின்போது, மின் வொயர்கள் துண்டிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குச் செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாக ஆக்ஸிஜன் வழங்குவதில் ஏற்பட்ட கோளாறால், அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்ததாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
இதை கண்டித்து தமிழ்நாட்டு இளைஞர் கட்சியினர் காலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் அரசு மதுபானக் கடைகளைைை நிரந்தரமாக மூடுவது குறித்தும் முழக்கமிட்டனர். இந்த இளைஞர்களின் கோஷம் வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த இளைஞர்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி

இளைஞர் குரல்.

அன்னம் அறக்கட்டளையின் நமக்கு நாமே பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி மக்களுக்கு விழிப்புணர்வு

அன்னம் அறக்கட்டளை தனது சேவையை தொடர்ந்து ஓராண்டு காலமாக சிறப்பான முறையில் சேவை செய்து இரண்டாம் ஆண்டிற்குள் அடி எடுத்து வைக்க உள்ளது .இந்த அருமையான தருணத்தை மக்களாகிய உங்களுடன் இணைந்து தனது சேவையை தொடர விரும்புகிறோம். அன்னம் அறக்கட்டளையின் நமக்கு நாமே பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சி காவல்துறை மற்றும் அன்னம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நமக்கு நாமே விழிப்புணர்வு முக்கிய சந்திப்புகளில் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் நடத்தப்பட்டது இதற்கு நமது அன்னம் அறக்கட்டளை சார்பாக ஒத்துழைத்த அனைத்து காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு எங்கள் அன்னம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அரவக்குறிச்சியில் மகளிர் காவல் நிலையம் வேண்டும் – தமிழ்நாடு இளைஞர் கட்சி கோரிக்கை

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள் உள்ளன. இங்கு அரவக்குறிச்சி, பள்ளபட்டி ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. சுமாராக 50% மேல் பெண்கள் அரவக்குறிச்சி பகுதியில் வசித்து வருகின்றனர். தாலுகா தலைமையிடமான அரவக்குறிச்சி சுமாராக 40 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆனால் இங்கு ஒரு மகளிர் காவல் நிலையம் கூட இல்லை.

பெண்கள் புகார் கொடுக்க அரவக்குறிச்சி பகுதியில் இருந்து 40 கி.மீ தூரமுள்ள கரூர் காவல் நிலையத்திற்குத்தான் செல்ல வேண்டிய சிரமமான நிலை உள்ளது. அரவக்குறிச்சியில் மகளிர் காவல் நிலையம் அமைக்க உயர் அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அரவக்குறிச்சியில் காவல் நிலையம் அமைக்கவேண்டி தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியினர் கூறுகையில், கரூர் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலகம் கடந்த ஒரு சில மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனை உடனடியாக திறக்க வேண்டும் எனவும் மேற்கண்ட மனுவில் தெரிவித்துள்ளதாகக் கூறினர்.

தையல் இயந்திரம் வாங்கி கொடுத்தவரைப் பார்த்து மிரண்டு போனேன்.!

டீ விற்கும் இளைஞன் சைக்கிள் வாங்கிக் கொடுத்த உண்மைக்கதை ஏழைப் பெண்ணுக்கு…..

சென்னை சோழிங்கநல்லூர், காந்தி நகர், எரிக்கரை பகுதியில் வசித்து வரும் சூரிய கலா என்ற பெண் என்னிடம் உதவி கேட்டிருந்தார்.கணவர் பிரிந்து சென்று விட்டதாகவும் இரண்டு குழந்தைகளுடன் 1200 ரூபாய் வாடகை வீட்டில் இருக்கிறேன், வீட்டு வேலை செய்து வந்தேன், இப்போது வேலை இல்லை.
ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். ஜாக்கெட் தைக்க நன்கு தெரியும் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே, இந்த பெண்மணியின் பெற்றோரை அறிவேன். சிந்தாதிரிப்பேட்டையில் வசித்தவர்கள்.மிக மிக ஏழ்மையான குடும்பம்.
ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்தால் கண்டிப்பாக இக் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என்று முடிவு செய்து என் நண்பர்கள் மற்றும் தொண்டு உள்ளங்கள் நிறைந்த வாட்ஸ்அப் குழுக்களுக்கு இந்த தகவலை பகிர்ந்தேன்.
நான் பகிர்ந்தவுடன் மதுரையில் வசிக்கும் ஒரு அன்பரிடம் இருந்து போன் வந்தது .நீங்கள் குறிப்பிட்ட குடும்பம் உதவுவதற்கான தகுதி படைத்தவர்களா ?என்று அந்த தொலைபேசியில் பேசியவர் கேட்டார்.
உடனே நான் 100% தகுதியான குடும்பம் என்றதும் ,தையல் மிஷின் எவ்வளவு என்ற விவரத்தை தெரிவிக்க சொன்னார்.
நான் சம்பந்தப்பட்ட கடையில் விசாரித்து பதினெட்டாயிரம் என்று தெரிவித்தேன். உடனடியாக, என்னுடைய வங்கி கணக்கு விவரங்களை அனுப்ப சொன்னார்.
நான் சொன்னேன், நீங்கள் அந்த தையல் மிஷினை விற்பனை செய்யும் கடைக்கே அனுப்பி விடுங்கள் என்று அந்த விவரத்தை கொடுத்தேன்.
அந்த கடைக்கு தொகையை அனுப்பியிருந்தார்.
நான் ஒரு குட்டி யானையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, 45 நாட்களுக்கு தேவையான மளிகைப் பொருள்களுடன் அந்த தையல் மிஷினுக்கு உடனடியாக தேவைப்படும் நூல்கள், பட்டன்கள், கொக்கிகளையும் வாங்கிக் கொண்டு சோளிங்கநல்லூர் சென்றேன்.
இவ்வளவு விரைவான உதவியை அவர்கள் எதிர்பார்க்க இல்லை. உடனடியாக அந்த மிஷினில் அப்பெண்மணியை உட்காரச் சொல்லி தைக்கச் சொல்லிவிட்டு, மதுரையிலுள்ள அந்த நண்பருக்கு வீடியோ காலில் தொடர்பு கொண்டு காண்பிக்க முற்பட்டேன்.
வீடியோ காலில் அவரைப் பார்த்ததும் மிரண்டு போனேன். ஒரு நடுத்தர வயது கொண்ட அதிகாரியாக அல்லது தொழிலதிபராக இருப்பார் என்று நினைத்தேன்.
ஆனால் அந்தப் பையனுக்கு சுமார் 25 வயதுதான் இருக்கும். டீ கேனுடன் கூடிய சைக்கிளுடன் நின்றிருந்தான். தெருத்தெருவாக சென்று டீ விற்கும் இளைஞன்.
அவனுக்கு பின்னால் துளாவி பார்த்தேன். அவனுடைய எஜமானர் யாரும் இருக்கிறார்களா! என்று தேடினேன்.
உதவி செய்தது …யார்? என்றேன். நான் தான் என்றான். எனக்கு தூக்கி வாரிப்போட்டது அதன் பிறகுதான் அவனுடைய முழு விவரம் தெரிய வந்தது.
அவன் பெயர் தமிழரசன், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவன். வேலை தேடி சென்னைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டு, பசியின் கொடுமையை அறிந்து மீண்டும் மதுரைக்குச் சென்று சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வருவதும், தினந்தோறும் தன் வருமானத்தில் 20, 30 ஏழை மக்களுக்கு உணவுவாங்கிக் கொடுத்து பசிப்பிணி ஆற்றி மகத்தான சேவை புரிந்து வருவதையும் அறிந்தேன்.
அவன் செயல்பாட்டை பாராட்டும் வகையில் சமீபகாலமாக நிறைய பேர் அவனுக்கு உதவிக்கரம் நீட்ட முன் வந்ததுள்ளதாகவும் அந்த உதவிகளையும் இப்படி திருப்பிவிட்டு ஏழை எளிய மக்களுக்கு மேலும் நன்மைகள் செய்து வருவதையும் அறிந்து மெய்சிலிர்த்துப் போனேன்.!

இந்த செய்தி சோசியல் மீடியாவில் தீயை பரவிவருகிறது இதுபோல் உள்ள நல்லுள்ளம் கொண்ட கொடை வள்ளல்கள் அனைவருக்கும் உணர்ச்சி கலந்த நன்றியை இளைஞர் குரல் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய பாஜக அரசே! உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு! பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு! – மே பதினேழு இயக்கம்

இந்திய பாஜக அரசே! உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு! பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு! – மே பதினேழு இயக்கம்

பார்ப்பனரல்லாத, பிற்படுத்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட-பட்டியலின ஏழை-எளிய மாணவர்களின், தேசிய இன மக்களின் கல்வி உரிமையை பறிக்கும் புதிய கல்விக் கொள்கையை, கடும் எதிர்ப்புகளைத் தாண்டி கொரோனா என்ற பேரிடர் காலத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்துள்ளது மக்கள் விரோத பாஜக அரசு. இன்னும் சொல்லப்போனால், புதிய கல்விக் கொள்கையானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைக்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் உள்ளது. பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கையின் பார்ப்பனத்துவ உருவமாக இந்த புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு, மக்களின்-கல்வியாளர்களின் எதிர்ப்புகளை மீறி அவசர அவசரமாக ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய ஒன்றியம் முழுமைக்கும் ஒரே பாடத்திட்டம்; 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு, கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்துவிதமான உயர்கல்விக்கும் பொது நுழைவுத்தேர்வு; மும்மொழித் திட்டத்தின் மூலம் சமஸ்கிருத-இந்தி திணிப்பு; பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி என்கிற பெயரில் குலக்கல்வி திட்டத்தை நுழைத்தல்; யூ.ஜி.சி, எம்.சி.ஐ போன்ற உயர்க் கல்வி நிறுவனங்களுக்குப் பதிலாக மையப்படுத்தப்பட்ட ஒற்றை நிறுவனத்துக்கு கீழ் அனைத்து துறைகளையும் (மருத்துவம், சட்டம் தவிர்த்து) கொண்டுவருதல்; அனைத்து கல்லூரிகளுக்கும் தன்னாட்சி வழங்குதல் என்று பட்டியல் நீள்கிறது.

இருமொழிக் கொள்கை உடைய தமிழ்நாடு தான் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் 49% உடன் முதல் இடத்தில் இருக்கிறது. இந்திய ஒன்றியத்தின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 26% தான். அதனை 50% ஆக மாற்ற வேண்டும் என்பது இந்திய அரசின் இலக்கு. அதனை தனி மாநிலமாக கிட்டத்தட்ட அடைந்து இந்தியாவிலேயே உயர்கல்வியில் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது தமிழ்நாடு. அப்படியான நோக்கம் உண்மையென்றால், இந்தியா தமிழ்நாட்டின் சமூகநீதிக்கான கல்விக்கொள்கையை தான் பின்பற்ற வேண்டும். குடிமக்கள் மீது அக்கறை இல்லாத இந்திய அரசோ தோற்றுப்போன மும்மொழிக் கொள்கையினை தமிழகம் மாதிரியான முன்னோடி மாநிலத்தின் தலையில் கட்டப்பார்க்கிறது. இந்திய அரசுக்கு குடிமக்களின் கல்வி அறிவை மேம்படுத்துவது எல்லாம் நோக்கம் கிடையாது என்பதற்கு ஒரு சிறிய சான்று தான் இந்த புள்ளிவிவரம்.

கல்வியில் ஒற்றைத்தன்மையை கொண்டுவந்து தேசிய இன மக்களின் வரலாற்றை, மொழியினை, பண்பாட்டினை இல்லாமல் செய்வது, நுழைவுத்தேர்வு மட்டுமே அடிப்படையாக வைத்து கல்வி அமைப்பை வடிவமைப்பது, மாநிலங்களின் உரிமையை மொத்தமாக பறிப்பது, உலக வர்த்தகக் கழகத்தின் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தனியாருக்கு கல்வியினை தாரை வார்ப்பது என்பதை மட்டுமே மொத்த நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல், ஒரே வரி, ஒரே நுழைவுத்தேர்வு என்று அதிகாரத்தை மையப்படுத்தி மாநிலங்களுக்கு ஒரு மாவட்டத்திற்கு அதன் நிலத்தின் மீது இருக்கும் உரிமையை விட பலவீனமான அதிகாரத்தை வழங்கும் முனைப்பிலேயே இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்து-இந்தி-இந்து ராஷ்டிரம் என்பதை நோக்கியே ஒவ்வொரு காயையும் நகர்த்தி வருகிறது ஆளும் பாஜக அரசு.

புதிய கல்விக் கொள்கை மட்டுமல்லாது, இந்த இக்கட்டான சூழலை பயன்படுத்தி, சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு மக்கள் கருத்தை கேட்டறியத் தேவையில்லை என்ற மசோதாவையும், தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய 12 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை தர மறுப்பதும், விவசாயதிற்கான இலவச மின்சாரத்தை தடை செய்வதும், நியாயவிலைக் கடைகளில் விலையில்லா பொருட்கள் வழங்க தடை செய்வதும் என பல்வேறு திட்டங்களை மக்கள் எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றி ஒன்றிய அரசு வருகிறது. கொரோனா காலத்தில் மக்கள் போராட முன்வரமாட்டார்கள், மக்கள் ஜனநாயகப்பூர்வ எதிர்ப்பை பதிவு செய்யும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க தேவையில்லை போன்ற காரணங்களினால் அவசர அவசரமாக இந்த மக்கள் விரோத திட்டங்களை, சட்டங்களை அரசு நிறைவேற்றுகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டிவிட்டது. தொற்றைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார இழப்புகளைத் தடுக்கவும் எந்தவிதமான ஆக்கப்பூர்வமான திட்டங்களையும் தற்போதுவரை செயல்படுத்தாத இந்திய அரசு, மக்கள் விரோத திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மட்டும் தீவிரம் காட்டி வருகிறது. இதனை மே பதினேழு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தித் திணிப்பை எதிர்த்து மாணவர்கள் வீதிக்கு வந்து போராடி இந்தியாவையே உற்றுப் பார்க்க வைத்த வரலாறு தமிழ்நாட்டிற்கு இருக்கிறது என்பதை பாஜக அரசு மறந்துவிடக் கூடாது!

இந்திய அரசே! மக்கள் விரோத புதிய கல்விக் கொள்கையினை உடனடியாகத் திரும்பப்பெறு. கல்வியினை மாநிலப் பட்டியலுக்கே மாற்றிடு! ஊரடங்கு காலத்தில் மக்கள் விரோத சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்திடு! தமிழக அரசே! இருமொழிக் கொள்கையை அரசின் கொள்கை முடிவாக இருக்கும் நிலையில்,மும்மொழிக் கொள்கை மூலம் மறைமுகமாக இந்தியை திணிக்கும் புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டிற்கு எதிரானது என உடனடியாக பகிரங்கமாக அறிவி! அமைச்சரவையை கூட்டி, எந்த நிலையிலும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது என்று தீர்மானம் நிறைவேற்று! ஒன்றிய அரசின் மக்கள் விரோத திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதிக்காது உடனடியாக எதிர்ப்பினை பதிவு செய்!

மே பதினேழு இயக்கம்
9884072010

கரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமையும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமையும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.

குளித்தலை புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்துவரும் தமிழக அரசுக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுக்கும் கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி ஆதரவும் ஒத்துழைப்பும் அளிக்கும் என்றும், ஒரு சில தனிநபர்களும் அரசியல்வாதிகளும் பேருந்து நிலையம் வர கூடாது என சில குழப்ப செயல்களை செய்து கொண்டுள்ளார்கள் என்றும் எனவே தமிழக அரசு விரைவாக பேருந்து நிலைய பணிகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கையாக வைக்கப்பட்டது அதற்கு தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தமிழக அரசின் முயற்சியில் கட்டாயம் குளித்தலைக்கு புதிய நவீன பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்கப்படும் என உறுதியளித்தார்.

கொரோனா – வரமா, சாபமா

Nanda Third Eye

கொரோனா – வரமா, சாபமா

July 24, 2020

நம் மனித சமுதாயம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் நிகழ்வை தற்சமயம் சந்தித்துக் கொண்டுள்ளது. ஆம், கொரோனா என்ற ஒரு கொடிய நோய் உலக மக்கள் அனைவரையும் மிகவும் அச்சுறுத்திக்கொண்டுள்ளது. மாபெரும் பொருளாதார முன்னேற்றம் கண்டுள்ள முதற்கட்ட நாடுகள் முதல் உலகின் மூன்றாம் நிலை நாடுகள் வரை அனைத்தும் கண் பிதுங்கி நிலைகுலைந்து என்ன செய்வதென அறியாமல் திண்டாடிக்கொண்டுள்ளன.

இதுவரை நம் மனிதகுலம் கால வரையறையை BC, AD அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, கிறிஸ்துக்கு பின்பு என வரையறுத்தது. ஆனால் தற்போது அதே BC, AC என்ற காலக்குறியீடு கொரானாவுக்கு முன், கொரானாவுக்கு பின் என்ற மாற்றி அமைக்கப்படவேண்டிய அளவுக்கு இவ்வுலகம் கொரோனாவின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
 
எவ்வளவு பலம் பொருந்திய மனிதராயினும் பலமற்ற மனிதராயினும், எவ்வளவு புகழ் பெற்ற மனிதராயினும் சாதாரண மனிதராயினும், எவ்வளவு பொருள் படைத்த மனிதாராயினும் பொருளற்ற மனிதராயினும், எச்சாதி   மனிதராயினும், எம்மதத்தை சார்த்தவராயினும், எந்நாட்டை சார்ந்தவராயினும்,  எம்மொழி பேசுபவராயினும் கொரோனாவின் முன் அனைவரும் சமமே. சாதரணமாக நாம் அனைவரும் கடவுள் முன் சமமே என்று பலர்கூறக்கேட்டுள்ளோம், ஆனால் தற்போது கொரோனாவின் முன் அனைவரும் சமமே என்று கண்கூட கண்டுகொண்டோம். என்ன சாதி, என்ன மதம், என்ன மொழி, என்ன இனம், என்ன நாடு என்று பார்த்து வரவில்லை இந்த கொரோனா. அதற்கு தெரிந்திருக்கிறது நாம் அனைவரும் மனிதர்கள் என்று.
 
பல்லாயிரம் ஆண்டுகளாக இறைவனாலும் ஒன்று படுத்தமுடியாத, பல்வேறு கூறுகளாக பிரிந்துகிடந்த மனித சமுதாயத்தை ஒரு சில நாட்களில் மாதங்களில் மனிதர்களிடையே எவ்வித வேறுபாடுகளும் வித்தியாசங்களும் இல்லை நாம் அனைவரும் ஒன்று தான் என்ற எண்ணத்தை மிக ஆழமாக பதித்திருக்கிறது இந்த கொரோனா.
 
பொருளாதார முன்னேற்றம் மட்டுமே வாழ்க்கையின் வெற்றி என்ற அற்ப நம்பிக்கையில் உறவுகளின் உன்னதத்தை மறந்து, பெரியோரின் பண்புகளை மறந்து, படிப்பின் அடிப்படை நோக்கத்தை மறந்து, உற்ற நண்பர்களின் நட்பை மறந்து, நம்மை ஆளாக்கிய குடும்பத்தின் தியாகத்தை மறந்து, நாட்டை மறந்து எதனையும் விட எவரையும் விட பணம் என்ற ஒன்றே மிகவும முக்கியம் எனக்கருதி ஓடிக்கொண்டிருந்த நம் அனைவருக்கும் கன்னத்தில் அறைந்தாற்போல் உண்மையை உணரவைத்திருக்கிறது இந்த கொரோனா.
 
இதுவரை நாம் அனைவருமே அலுவலகங்களுக்கோ, தொழிற்சாலைகளுக்கோ, பாடசாலைகளுக்கோ தொடர்ந்தாற்  போல ஒரு பத்து நாட்கள் விடுமுறையெடுத்தால் கூட இவ்வுலகமே நின்று போய்விடுவது போல வாழ்ந்து வந்தோம். நாம் அனைவரும் இவ்வுலகையே நாம் தான் தாங்கிக்கொண்டுள்ளதாகவும் நாம் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது என்றும் எண்ணம் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது மூன்று நான்கு மாதங்களாக எதுவும் நம்மால் நடப்பதில்லை, நடக்கும் நிகழ்வுகளின் ஒரு சிறிய துகளின் அளவே நமது செயல்பாடு என்று உணரவைத்திருக்கிறது இந்த கொரோனா. 
 
பொருளாதார அளவில் பெரும்பான்மையான மக்களுக்கு இந்த கொரோனா மிகவும் கெடுதலையே செய்துள்ளது, ஆம் பணத்தின் மதிப்பீடு அளவில். ஆனால் பணத்தின் மீது மனிதன் கொண்டுள்ள அடிப்படை புரிதலை மிகவும் விளங்கிக்கொள்ள உறுதுணையாக விளங்கியுள்ளது இந்த கொரோனா என்றால் அது மிகையில்லை. இதுவரை எவ்வளவு இருந்தாலும் போதவில்லை என்று எண்ணிக்கொண்டிருந்த மனிதனின் மனதில் தற்போது நாம் நலமாக வாழ எவ்வளவு இருந்தால் போதுமானது என்ற எண்ணத்தை உருவாகியுள்ளது இந்த கொரோனா. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பது நம் முன்னோர் வாக்கு. அவ்வுன்னதமான வாழ்விற்கு அடிப்படை வித்தாய் அமைந்துள்ளது இக்கொரோனா.
 
எப்போதுமே எப்படி பணத்தை ஈட்டுவது ஈட்டிய பணத்தை எப்படி பெருக்குவது அப்பணத்தை கொண்டு எந்த வாகனம் வாங்கலாம் எவ்வளவு தங்கம் வாங்கலாம் எவ்வளவு நிலம் வாங்கலாம் எங்கே வீடு வாங்கலாம் இன்னும் என்னென்னவெல்லாம் வாங்கலாம் என்று சர்வகாலமும் எண்ணிக்கொண்டிருந்த நாம், கடந்த மூன்று நான்கு மாதங்களாக பொருளின் மீது கொண்டிருந்த அளவில்லா அவாவினை மறந்து நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற நம் முன்னோரின் மந்திர வார்த்தையை உணர்ந்து நம் உடலையும் உயிரையும் காக்கும் நற்செயல்களில் நமது முழு கவனத்தையும் செலுத்த தொடங்கிவிட்டோம். நம்மிடம் எவ்வளவு குறைவற்ற செல்வம் இருப்பினும் அது நம் உயிரை காக்க உதவாது என்ற மாபெரும் உண்மையை நமக்கு உணரச்செய்திருக்கிறது இக்கொரோனா.
 
அதுமட்டுமல்லாமல் நாம் நலமாக இருந்தால் மட்டும் போதாது நமது அண்டை வீட்டாரும் எதிர் வீட்டாரும் அனைவரும் நலமாக இருந்தால் தான் நாமும் நலமாக இருக்க முடியும் என்ற மாபெரும் உண்மையை  உணர்த்தியிருக்கிறது இக்கொரோனா. ஏனெனில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுவது இக்கொரோனா. எனவே நம்மை சுற்றியுள்ளோர் நலமாக இருந்தால் மட்டும் தான் நாம் நலமாக இருக்க முடியும். எனவே இதுவரை தனக்காகவே சுயநலமாக இறைவனை வேண்டிக்கொண்டிருந்த மனிதனை தன்னை சுற்றியுள்ள அனைத்து மனிதர்களுக்காகவும் பொதுநலத்துடன் இறைவனை வழிபடசெய்துள்ளது இக்கொரோனா.
 
மக்களிடையே இத்தகைய பல உன்னதமான மாற்றங்களை கொண்டு வந்துள்ள இக்கொரோனா உண்மையில் வரமா சாபமா, நீங்களே நீதிபதி.
 
வாழ்க தமிழகம்!!!     வளர்க பாரதம்!!!
 
க.நந்தகுமார்
24/07/2020

சீனா-அமெரிக்கா வர்த்தகப் போர் முற்றியது.

2018- ஜூன்,ஜூலை.. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பொருளாதார வர்த்தகப் போர்(Trade War) தொடக்கம்.

2019-செப்டம்பர்..சீனா-அமெரிக்கா வர்த்தகப் போர் முற்றியது.

2019- அக்டோபர்..சீன அதிபர் இந்தியா வருகை.மகாபலிபுரம் ஜி ஜின் பிங்க்- மோடி பேச்சுவார்த்தை.

2019- டிசம்பர்..சீனாவில் வூகான் நகரில் கொரோனா தொற்று பரவல்.

2020-பிப்ரவரி..அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை.மோடியுடன் பேச்சுவார்த்தை.

2020-மார்ச்..இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அமல்.

2020-மே..இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல் எல்லையில் பதற்றம்.

2020 மே-ஜூன்-ஜூலை..இந்திய அரசின் பொது சொத்துகளான வங்கிகள்,ரயில்வே,விண்வெளி,பாதுகாப்புத்துறை உட்பட அனைத்தையும் தனியார் மயமாக்குவதற்கான தீவிர முயற்சிகளை எடுக்கிறது மோடி அரசு.இந்தியாவில் முதலீடு செய்ய் வருமாறு அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களை கூவிக் கூவி மோடி அரசு அழைக்கிறது.

இதன் தொடர்ச்சியாக பல அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் முகேஷ் அம்பானியின் நிறுவனத்தில் முதலீடு..உலகப் பணக்காரர்கள் வரிசையில் 16 ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்துக்கு முகேஷ் அம்பானி சில மாதங்களிலேயே முன்னேற்றம்..

மேற்கண்ட நிகழ்வுகளை வரிசைப்படுத்திப் பார்க்கும் போது கொரோனா என்பது சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தகப் போரின் விளைவாக ஏற்பட்டது என்பது புரியும்.மேலும் இந்த வர்த்தகப் போரில் தேவையின்றி இந்தியாவையும் மோடி அரசு இழுத்துவிட்டு நாட்டின் பொருளாதாரத்தையும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் வாழ்வாதாரங்களையும் நாசம் செய்துள்ளதையும் புரிந்து கொள்ளலாம்.

மோடிக்கு வேண்டிய சில கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வெறிக்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலன் காவு கொடுக்கப்படுகிறது.

சீனாவுடனான வர்த்தகத்தில் தனக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவை பயன்படுத்த திட்டமிடுகிறது அமெரிக்கா.இந்த திட்டத்தோடு தான் ஜியோ போன்ற நிறுவனங்களில் அமெரிக்க கார்ப்பரேட்டுகள் பெருமளவில் முதலீடு செய்கின்றன.

கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக மட்டுமே செயல்படும் மோடி அரசு அமெரிக்காவின் இந்த திட்டத்துக்கு உடந்தையாக செயல்படுகிறது.

இதனால் அந்நிய கார்ப்பரேட்டுகளும் இந்திய கார்ப்பரேட்டுகளும் இந்தியாவின் பொது சொத்துக்களையும் இந்திய மக்களையும், நாட்டின் இயற்கை வளங்களையும் கூட்டுக்கொள்ளை அடிப்பதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. நாட்டில் பஞ்சமும் பசியும் பட்டினி சாவுகளும் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றன.

இதற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமாக வேண்டும்.சொந்த நாட்டிலேயே மக்களை அகதிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் மாற்றும் மோடி அரசு வீழ்த்தப்பட வேண்டும்.

மக்களின் நலனைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரு அரசை உருவாக்குவதே நாட்டுப்பற்றுள்ள அனைவரின் முன் உள்ள கடமையாகும்.

-நந்தினி ஆனந்தன்..

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES