Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 14)

செய்திகள்

All News

ஆபத்தானதாக மாறும் ரயில் பயணங்கள்.. 20 நாட்களில் மட்டும் ஏழு ரயில் விபத்துகள்.. என்ன தான் காரணம்!

ஆபத்தானதாக மாறும் ரயில் பயணங்கள்.. 20 நாட்களில் மட்டும் ஏழு ரயில் விபத்துகள்.. என்ன தான் காரணம்!

டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலம் ஏற்பட்ட ரயில் விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இதன் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேநேரம் நமது நாட்டில் ரயில் விபத்துகள் என்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் ஏற்படும் ஏழாவது ரயில் விபத்து இதுவாகும். இதனால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இன்றைய தினம் ஜார்க்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் அருகே பாரபம்பு என்ற கிராமத்தில் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மகாராஷ்டிர தலைநகர் மும்பைக்குச் சென்ற ஹவுரா- சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன.

ரயில் விபத்து: இந்த விபத்தில் 2 பயணிகள் உயிரிழந்தனர்.. மேலும் 40 பயணிகள் படுகாயமடைந்தனர். அப்பகுதியில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்தில் காயமடைந்தோர் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விபத்தால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு ரயில் பாதைகளில் மீண்டும் ரயில் போக்குவரத்தைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேநேரம் நமது நமது நாட்டில் ரயில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் நமது நாட்டில் ரயில் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

மேற்கு வங்க ரயில் விபத்து: கடந்த மாதம் 17ம் தேதி மேற்கு வங்கத்தில் மிக மோசமான ரயில் விபத்து ஏற்பட்டது. அன்றைய தினம் காலை 9 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள ரங்கபாணி ரயில் நிலையம் அருகே கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது என்ற மீது சரக்கு ரயில் மோதியது. இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.. மேலும், சுமார் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அடுத்த ஒரே மாதத்தில் உத்தரப் பிரதேசத்தில் மிக மோசமான விபத்து ஏற்பட்டது. கடந்த ஜூலை 18ம் தேதி திப்ருகர் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியது. உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவில் திப்ருகர் எக்ஸ்பிரஸின் பல பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 20 பேர் காயமடைந்தனர். விபத்துக்கு முன்பு மிகப் பெரிய ரத்தம் கேட்டதாக ரயில் டிரைவர் கூறியிருந்தார். அது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தொடரும் விபத்துகள்: அதற்கு மறுநாள் ஜூலை 19ம் தேதி குஜராத் மாநிலம் வல்சாத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது. மறுநாள் ஜூலை 20ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹாவில் சரக்கு ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. மேலும், ஜூலை 21ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கின. அதேநாளில் மேற்கு வங்க மாநிலம் ரணகாட்டில் மற்றொரு சரக்கு ரயில் தடம் புரண்டது.

ஜூலை 26ம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்ட நிலையில், ஜூலை 29ம் தேதி பீகார் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் பீகாரின் சமஸ்திபூரில் சில பெட்டிகள் ரயில் என்ஜினில் இருந்து தனியாக பிரிந்தன. நல்வாய்ப்பாக இந்த விபத்துகளில் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.

என்ன காரணம்: இருப்பினும், நமது நாட்டில் இதுபோல ரயில் விபத்துகள் தொடர்கதையாகி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. விபத்துகளைத் தடுக்க கவாச் தொழில்நுட்பத்தை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியது. இந்த கவாச் தொழில்நுட்பம் ஒரே ரயில் பாதையில் இரண்டு ரயில்கள் வருவதைத் தடுக்கும்.. இருப்பினும், நாடு முழுக்க அதைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதே விபத்து தொடர்கதையாகக் காரணமாக இருக்கிறது.

பழங்குடி சமூகத்தின் அர்ப்பணிப்புள்ள அரசியலையும் பழங்குடியினரின் குரல்களின் முக்கியத்துவத்தையும், அடிப்படை உரிமைகளுக்கான அவர்களின் போராட்டத்தையும், அவர்களின் வாழ்வில் வளர்ச்சி மற்றும் முயற்சிகளின் விளைவுகளையும் காண எங்களுடன் சேருங்கள் – மேராகர் சங்கம்

கல்வராயன் மலை வனப்பகுதிகளில் உள்ள பழங்குடி சமூகங்கள் இன்னும் தேசிய அரங்கில் புறக்கணிக்கப்பட்டதாக உணர்கின்றனர். அவர்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்கேற்க விரும்புகிறார்கள். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவின் சமூக மற்றும் கலாச்சார பன்முக இதயத்துடன் இப்பகுதியை வளப்படுத்த வேண்டும். இதனைபுரிந்துகொள்வதற்கான ஒரு சாளரமாக இந்தப் பகுதி செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கோமுகி அணை, கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலை வட்டத்தில், கச்சிராபாளையம் என்னும் ஊரிலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஓர் அணையாகும். தமிழ்நாட்டின் ஆதாரமாகப் புகழ் பெற்ற இந்தப் பகுதிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

மலைவாழ் சொந்தங்கள் அனைவரும் நம்மை அன்புடன் அழைக்கிறார்கள். கல்வராயன் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம், தமது பாரம்பரிய மரபுகளாலான பழங்குடி சமூகத்தின் அர்ப்பணிப்புள்ள அரசியலையும் பழங்குடியினரின் குரல்களின் முக்கியத்துவத்தையும், அடிப்படை உரிமைகளுக்கான அவர்களின் போராட்டத்தையும், அவர்களின் வாழ்வில் வளர்ச்சி மற்றும் முயற்சிகளின் விளைவுகளையும் காண எங்களுடன் சேருங்கள்.

அன்னை இந்திரா காந்தி அவர்கள் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருக்கும் போது, இந்தப் பழங்குடியின மக்கள் நிர்வாணமாக இயற்கையாக சுற்றித் திரிவதைப் பார்த்து, உடனடியாக அந்தப் பகுதிக்கு கலெக்டரை வரவழைத்து, உடனடியாக அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை சரி செய்திடவும் அவர்களும் சகஜமாக வாழ்வதற்கு ஒரு நல்வழியினை ஏற்பாடு செய்தார். இது சுதந்திர இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாகும்.

இப்போது அங்கே என்ன நடக்கிறது என்பதனை நீங்கள் மேராகர் சங்கத்தின் மூலம் அங்குள்ள மக்களுடன் சென்று, இரண்டு நாள்கள் தங்கி பழகும்போது நேரிலே உணருங்கள்!

வாய்ப்பிற்கு முன்பதிவு செய்யுங்கள்
நிகழ்ச்சித் தேதிகள்:
2024 ஆகஸ்ட் 14 மற்றும் 15 ( இரண்டு நாள்கள்
அதிகபட்சம்: 50 நபர்கள் + 50 நபர்கள் தமிழ்நாடு + புதுச்சேரி (மொத்தம் 100 நபர்கள் மட்டும்)

தொடர்புக்கு அழைக்கவும்:
திரு S. சசிகுமார் – மாநில தலைவர்,
ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் – தமிழ்நாடு
9025282669

திரு.S.அமுதரசன் – மாநில தலைவர்
ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் – புதுச்சேரி
9894744615

மேலும் தகவலுக்கு
கடலூர் க. ரமேஷ் – தேசிய ஒருங்கிணைப்பாளர் RGPRS
9443136862

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரம்.. கைதானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய திட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரம்.. கைதானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய திட்டம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஆற்காடு ரவுடி சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங் அவரது ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசாரின் என்கவுன்டரில் இறந்தவர் திருவேங்கடம் மட்டுமே. அருள், மலர்க்கொடி, வரறிவரரன், ஹரிதரன், சிவா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் முழுமையாக கைது செய்யப்படவில்லை. கைது செய்ய போலீசாரின் தேடுதல் வேட்டை தொடர்கிறது. இந்நிலையில், நாளுக்கு நாள் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வழக்கில் திரைமறைவில் செயல்பட்டதாக கூறப்படும் பிரபல ரவுடிகள் சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 21 பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளனர். வங்கி கணக்கில் உள்ள பணம், கொலைக்கு கொடுக்கப்பட்ட பணம், அதன் மூலம் வாங்கிய சொத்து அளவு குறித்து விசாரணை நடத்தி பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

“மோடியின் சக்கர வியூகம்.. அபிமன்யுவை போல் இந்தியாவை கொன்று வருகிறார்கள்” கொதித்த ராகுல் காந்தி!

"மோடியின் சக்கர வியூகம்.. அபிமன்யுவை போல் இந்தியாவை கொன்று வருகிறார்கள்" கொதித்த ராகுல் காந்தி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜக மீது சரமாரி விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்தியாவை அபிமன்யு உடன் ஒப்பிட்டு பேசிய அவர், “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குருக்ஷேத்திரத்தில் ஆறு பேர் சேர்ந்து அபிமன்யுவை சக்கர வியூகத்தில் சிக்க வைத்து கொன்றனர்.

நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டிய ராகுல் காந்தி: கொஞ்சம் ஆராய்ச்சி செய்தேன். அப்போதுதான், சக்கர வியூகத்திற்கு பத்ம வியூகம் என்று பெயர் இருப்பது தெரிய வந்தது. அதாவது, தாமரை வடிவிலானது என்பது தெரிந்தது. சக்கர வியூகம் என்பது தாமரை வடிவில் உள்ளது. 21 ஆம் நூற்றாண்டில், ஒரு புதிய ‘சக்கரவியூகம்’ உருவாகி இருக்கிறது.

அதுவும் தாமரை வடிவில் உள்ளது. அந்த சின்னத்தை பிரதமர் மார்பில் அணிந்துள்ளார். அபிமன்யுவுக்கு என்ன நடந்ததோ, அதேதான் இந்தியாவுக்கும் நடக்கிறது. இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சிக்கியுள்ளனர்.

இன்றும் சக்கர வியூகத்தில் ஆறு பேர் உள்ளனர். இன்றும் ஆறு பேர் கட்டுப்படுத்துகிறார்கள். நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி மற்றும் அதானி கட்டுப்படுத்தி வருகிறார்கள்” என்றார்.

மக்களவையில் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவைக் கைப்பற்றியுள்ள சக்கர வியூகத்திற்கு பின்னால் 3 படைகள் உள்ளன. 1) ஏகபோக முதலாளித்துவம். இந்தியச் செல்வம் முழுவதையும் 2 பேர் சொந்தமாக்க அனுமதிக்கிறது.

எனவே, சக்கர வியூகத்தின் ஒரு அம்சம் நிதி அதிகார குவியலால் வருகிறது. 2) இந்த நாட்டின் நிறுவனங்கள், ஏஜென்சிகள், CBI, ED, IT, 3) அரசியல் நிர்வாகிகள். இந்த மூன்றும் சேர்ந்து, சக்கர வியூகத்தின் மையமாக உள்ளனர். அவை இந்த நாட்டை சீரழித்துவிட்டன” என்றார்.

28.07.2024 தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு லெனின் பிரசாத் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொறுப்பாளரும், தேசிய செயலாளர் திரு வைசாக், திருமதி சாகரிக்கா ராவ், துணைத் தலைவர் திரு சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் திரு அஸ்வத்தாமன், மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிஐடியு தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு.அ.சௌந்தரராஜன் அவர்கள் இன்று (27.07.2024) சென்னை, சத்தியமூர்த்திபவனில் என்னை சந்தித்தார். நடைபெறும் அரசியல் நிலவரம் குறித்து உரையாடினோம்.

ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா?. “இதுதான் கூட்டாட்சியா?. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..!!

ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா?. "இதுதான் கூட்டாட்சியா?. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..!!

டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது‌.

ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட இந்தியா கூட்டணியில் உள்ள மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர்.

இருப்பினும் இந்த கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்ட நிலையில் வெளிநடப்பு செய்துவிட்டார். இந்நிலையில் வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் மம்தா; “கூட்டத்தில் எனக்கு பேசுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது தமிழக முதல்வர் x பதிவில்; கூட்டத்தில் ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா?
எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் கூட்டாட்சியா?? என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சியினரை எதிரிகளாக நினைத்து ஒடுக்க நினைக்கக் கூடாது எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். எதிர்க்கட்சியின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது கூட்டாட்சிகளில் தத்துவம் என்று அவர் தனது x தளத்தில் கேள்விகளுடன் பதிவிட்டுள்ளார்.

26.07.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின்அவர்கள், புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் சக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நமது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி அவர்கள் கலந்துகொண்டார்

வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் – எங்கு? எப்போது? – விவரம் !

வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் - எங்கு? எப்போது? - விவரம் !

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 2024 – 2025-க்கான பட்ஜெட் கடந்த ஜூலை 23-ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள், பாஜக கூட்டணியான பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களே இடம்பெற்றது. மேலும் அந்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், டெல்லி போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவே இல்லை. வெள்ள பாதிப்பு நிவாரணம், மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்கு நிதி என தமிழ்நாடு எம்.பி-க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், சுத்தமாக ஓரங்கட்டியுள்ளது ஒன்றிய பாஜக அரசு. பாஜக அரசின் இந்த பாரபட்சமான செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியமைந்து நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த முதல் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீட்டில் அப்பட்டமான அரசியல் பாகுபாடு காட்டப்பட்டதாக கடும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக தமிழகம் வஞ்சிக்கப்பட்டதால் வருகிற ஜூலை 27 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடக்க இருந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக அறிவித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

அதேபோல, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த மாநில முதலமைச்சர்களும் தொடர்ந்து புறக்கணிப்பை அறிவித்திருக்கிறார்கள். நிதிநிலை அறிக்கையில் பீகார் மாநிலத்திற்கு ரூ.59,000 கோடியும், ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.15,000 கோடியும் வழங்கப்பட்டு தமிழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு வழங்கிய மொத்த ஜி.எஸ்.டி. தொகை ரூ.12,210 கோடி. ஆனால், தமிழகத்திற்கு சல்லிக் காசு கூட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. அதற்கு முற்றிலும் மாறாக ரூ.1992 கோடி ஜி.எஸ்.டி. தொகை வழங்கிய பீகார் மாநிலத்திற்கு வழங்கிய தொகை ரூ.59,000 கோடி. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு வெள்ள நிவாரண நிதியாக கேட்ட தொகை ரூ.37,000 கோடி. ஆனால் வழங்கியதோ ரூ.276 கோடி.

அதேநேரத்தில் பீகாருக்கு வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தோடு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், தாம்பரம் – செங்கல்பட்டு விரைவு மேம்பால திட்டத்திற்கும் ஒப்புதலும், நிதியும் தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதி கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், தமிழகத்தை வஞ்சிப்பத்தை நோக்கமாகக் கொண்டு காழ்ப்புணர்ச்சியோடு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கூட்டணி அமைத்து தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சித்திருக்கிறார்கள். இத்தகைய தமிழக விரோத போக்கை அரசியல் பேராண்மையோடு தமிழக முதலமைச்சர் எதிர்த்து கண்டன குரல் எழுப்பியிருப்பதை வரவேற்கிறேன். இத்தகைய போக்கு கூட்டாட்சி அமைப்பிற்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. மற்ற மாநிலங்களில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்டு விட்டன. ஆனால், கடந்த 2019, ஜனவரியில் மதுரை தோப்பூரில் ரூ.2600 கோடி முதலீட்டில் தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, சுற்றுச்சுவர் எழுப்பியதை தவிர ஒரு செங்கல் கூட வைக்கவில்லை. நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறக்கிற பிரதமர் மோடி, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு நடத்துவதை விட அப்பட்டமான தமிழக விரோத போக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.

கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவை தேர்தல் என அனைத்திலும் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காமல் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் புறக்கணித்ததை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க., தமிழக மக்களை ஒட்டுமொத்தமாக வஞ்சித்து வருகிறது. பா.ஜ.க. கட்சியின் சார்பாக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் பதவியேற்ற பிறகு அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக அவர் இருக்க வேண்டும்.

ஆனால், அதற்கு மாறாக தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் ஒன்றிய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி, தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து நாளை (27.7.2024) சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் அருகில், தாராபூர் டவர் முன்பாக சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதேபோல, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் ஒன்றிய அரசின் தமிழகத்தை வஞ்சிக்கிற போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், காங்கிரஸ் முன்னோடிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் இந்நாள்- முன்னாள் உறுப்பினர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடி அரசின் நிதிநிலை அறிக்கை மூலமாக நிதி ஒதுக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கிற போக்கை கண்டித்து நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கார்கில் போரின் 25-வது ஆண்டு வெற்றி தின விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவு கூர்வோம்,”என்றார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES