Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 18)

செய்திகள்

All News

இன்று 18/7/2024 மாலை 4 மணிக்கு கரூர் VNC மஹாலில் கரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்…

இன்று 18/7/2024 மாலை 4 மணிக்கு கரூர் VNC மஹாலில் (அப்போலோ மருத்துவமனை எதிரில்) கரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்த கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் நமது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் திரு. கு.செல்வப்பெருந்தகை., MLA., அவர்களை வரவேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தல் மற்றும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

ஆகையால் கரூர் மாவட்ட பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள், வட்டாரப் பொறுப்பாளர்கள், இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள், OBC பிரிவு பொறுப்பாளர்கள், மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர்கள், சிறுபான்மையினர் பிரிவு பொறுப்பாளர்கள், SC/ST பிரிவு பொறுப்பாளர்கள், INTUC பொறுப்பாளர்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பொறுப்பாளர்கள், வழக்கறிஞர் அணி பொறுப்பாளர்கள், மற்றும் இதர துணை அமைப்பு பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு செயல்வீரர்கள் கூட்டத்தை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு,
கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி.

#congress #selvaperunthagai #jothimani #maheswaran #itwingkarur #balamurugankandasamy #ilangyarkural

கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு பாடம் புகட்டுகிற வகையில் மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத வகையில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்

கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு பாடம் புகட்டுகிற வகையில் மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத வகையில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். கடந்த 2019 தேர்தலை விட 63 இடங்கள் குறைவாக பா.ஜ.க.வுக்கு கிடைத்திருக்கிறது. இந்த தோல்விக்கு பிறகு 40 நாட்கள் கழித்து தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூலை 13 ஆம் தேதி வெளிவந்தது. இதில் 13 தொகுதிகளில் 10 தொகுதிகளில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும், தி.மு.க. 1 இடத்திலும் மற்றும் ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. பா.ஜ.க., மொத்தம் 13 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இது பா.ஜ.க.வுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வியாகும். தமிழகத்தை பொறுத்தவரை சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகத்தான சாதனை புரிந்திருக்கிறார். இது முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் சாதனைகளுக்கு கிடைத்த மிகச் சிறந்த நற்சான்றாகும். இந்த தேர்தல் தீர்ப்பின் மூலம் சந்தர்ப்பவாத, கொள்கையற்ற பா.ம.க., பா.ஜ.க. கூட்டணிக்கு உரிய பாடத்தை விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி மக்கள் புகட்டியிருக்கிறார்கள். அன்புமணி ராமதாஸ், அண்ணாமலையின் சந்தர்ப்பவாத, சுயநல அரசியலுக்கு விக்கிரவாண்டி வாக்காளர்கள் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்கள். கடந்த மக்களவை தேர்தலிலேயே பா.ஜ.க. ஏற்கனவே வெற்றி பெற்ற 303 இடங்களில் இருந்து 240 இடங்களாக குறைந்தும், ஒட்டுமொத்த தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே வெற்றி வெற்றிருக்கிறது. மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் சார்பாக எதிர்கட்சி தலைவராக திரு. ராகுல்காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கடந்த மக்களவை தேர்தல் நடைபெற்ற போது தலைவர் ராகுல்காந்தி ஆற்றிய உரையை எதிர்கொள்ள முடியாமல் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் திணறி திக்கு முக்காடியதை தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்கள் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. கடந்த காலங்களில் எதேச்சதிகாரமான முறையில் பிரதமர் மோடி மக்களவையில் செயல்பட்டதைப் போல இனியும் செயல்பட முடியாத அளவிற்கு பா.ஜ.க.வுக்கு மக்கள் கடிவாளம் போட்டிருக்கிறார்கள். கடந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் இந்தியா கூட்டணி பெற்ற வாக்குகள் ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இடைத் தேர்தல் நடைபெற்ற 13 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 50 சதவிகிதத்திற்கும் கூடுதலான வாக்குகளை பெற்றிருந்தது. இதற்கு பிறகு 40 நாட்களில் தற்போது நடைபெற்ற அதே 13 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களில் பா.ஜ.க.வின் வாக்கு 35 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. அதேநேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட தி.மு.க. போன்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவிகிதம் உயர்ந்திருப்பதை புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 7 மாநில இடைத் தேர்தலை பொறுத்தவரை பா.ஜ.க.வுக்கு எதிராக தேசிய அளவில் மக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இனி வருகிற காலங்களில் பா.ஜ.க.விற்கு கடும் வீழ்ச்சி வர இருப்பதை இந்த இடைத் தேர்தல் முடிவுகள் உறுதி செய்கின்றன. இனி சில மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களிலும் பா.ஜ.க.வுக்கு உரிய பாடத்தை புகட்டுவதற்கு மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதையே 7 மாநில இடைத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. எனவே, பா.ஜ.க.வின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது. இந்தியா கூட்டணியின் எழுச்சி தொடங்கி விட்டது.

செயற்கை கருத்தரித்தல் மையத்தை செல்வப்பெருந்தகை திறந்து வைத்தார்

Image

சென்னை, தண்டலத்தில் உள்ள சவீதா பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கல்லூரியில் செயற்கை கருத்தரித்தல் மையத்தை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து திறந்து வைத்தோம். நிகழ்ச்சியில் திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், வளம்பக்குடி அருகில் இன்று (17.07.2024) காலை சுமார் 7.00 மணியளவில் கந்தர்வகோட்டையில் இருந்து சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுகொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக ஈச்சர் வாகனம் மோதிய விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், கல்லாக்கோட்டை ஊராட்சி, கண்ணுகுடிபட்டியைச் சேர்ந்த முத்துசாமி (வயது 60) த/பெ.சின்னையன், ராணி (வயது 37) க/பெ. முருகன், மோகனாம்பாள் (வயது 27) க/பெ. ரமேஷ் மற்றும் மீனா (வயது 26) க/பெ. கார்த்திக் ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இவ்விபத்தில் தனலட்சுமி (வயது 36) க/பெ. செல்வராஜ் என்பவர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில், பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சங்கீதா க/பெ.கவியரசன் என்பவருக்கு சிறப்பு சிகிக்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் வீழ்ச்சி ஆரம்பம்.. இந்தியா கூட்டணியின் எழுச்சி தொடங்கி விட்டது: செல்வப்பெருந்தகை நம்பிக்கை!!

பாஜகவின் வீழ்ச்சி ஆரம்பம்.. இந்தியா கூட்டணியின் எழுச்சி தொடங்கி விட்டது: செல்வப்பெருந்தகை நம்பிக்கை!!

சென்னை: பா.ஜ.க.வின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது, இந்தியா கூட்டணியின் எழுச்சி தொடங்கி விட்டது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு பாடம் புகட்டுகிற வகையில் மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத வகையில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். கடந்த 2019 தேர்தலை விட 63 இடங்கள் குறைவாக பா.ஜ.க.வுக்கு கிடைத்திருக்கிறது.

இந்த தோல்விக்கு பிறகு 40 நாட்கள் கழித்து தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூலை 13 ஆம் தேதி வெளிவந்தது. இதில் 13 தொகுதிகளில் 10 தொகுதிகளில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும், தி.மு.க. 1 இடத்திலும் மற்றும் ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. பா.ஜ.க., மொத்தம் 13 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இது பா.ஜ.க.வுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வியாகும்.

தமிழகத்தை பொறுத்தவரை சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகத்தான சாதனை புரிந்திருக்கிறார். இது முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் சாதனைகளுக்கு கிடைத்த மிகச் சிறந்த நற்சான்றாகும். இந்த தேர்தல் தீர்ப்பின் மூலம் சந்தர்ப்பவாத, கொள்கையற்ற பா.ம.க., பா.ஜ.க. கூட்டணிக்கு உரிய பாடத்தை விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி மக்கள் புகட்டியிருக்கிறார்கள்.

அன்புமணி ராமதாஸ், அண்ணாமலையின் சந்தர்ப்பவாத, சுயநல அரசியலுக்கு விக்கிரவாண்டி வாக்காளர்கள் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்கள். கடந்த மக்களவை தேர்தலிலேயே பா.ஜ.க. ஏற்கனவே வெற்றி பெற்ற 303 இடங்களில் இருந்து 240 இடங்களாக குறைந்தும், ஒட்டுமொத்த தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே வெற்றி வெற்றிருக்கிறது. மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் சார்பாக எதிர்கட்சி தலைவராக ராகுல்காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த மக்களவை தேர்தல் நடைபெற்ற போது தலைவர் ராகுல்காந்தி ஆற்றிய உரையை எதிர்கொள்ள முடியாமல் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் திணறி திக்கு முக்காடியதை தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்கள் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. கடந்த காலங்களில் எதேச்சதிகாரமான முறையில் பிரதமர் மோடி மக்களவையில் செயல்பட்டதைப் போல இனியும் செயல்பட முடியாத அளவிற்கு பா.ஜ.க.வுக்கு மக்கள் கடிவாளம் போட்டிருக்கிறார்கள். கடந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் இந்தியா கூட்டணி பெற்ற வாக்குகள் ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

இடைத் தேர்தல் நடைபெற்ற 13 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 50 சதவிகிதத்திற்கும் கூடுதலான வாக்குகளை பெற்றிருந்தது. இதற்கு பிறகு 40 நாட்களில் தற்போது நடைபெற்ற அதே 13 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களில் பா.ஜ.க.வின் வாக்கு 35 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. அதேநேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட தி.மு.க. போன்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவிகிதம் உயர்ந்திருப்பதை புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 7 மாநில இடைத் தேர்தலை பொறுத்தவரை பா.ஜ.க.வுக்கு எதிராக தேசிய அளவில் மக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இனி வருகிற காலங்களில் பா.ஜ.க.விற்கு கடும் வீழ்ச்சி வர இருப்பதை இந்த இடைத் தேர்தல் முடிவுகள் உறுதி செய்கின்றன. இனி சில மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களிலும் பா.ஜ.க.வுக்கு உரிய பாடத்தை புகட்டுவதற்கு மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதையே 7 மாநில இடைத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. எனவே, பா.ஜ.க.வின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது. இந்தியா கூட்டணியின் எழுச்சி தொடங்கி விட்டது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தடைகளை உடைப்பதே திமுகவின் பணி – மு.க ஸ்டாலின்.!

தடைகளை உடைப்பதே திமுகவின் பணி - மு.க ஸ்டாலின்.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு பரிமாறியதுடன் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தி மகிழ்ந்தார்.

அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது:- * காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து மிக மிக மகிழ்ச்சியோடு உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். * பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பசி போக்குவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் காலை உணவு திட்டம்.

“பெற்றோருக்கு உரிய பாச உணர்வோடு நான் தொடங்கிய திட்டம் தான் காலை உணவு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 20 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

திமுக அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் பாராட்டுகின்றனர். காலை உணவு திட்டத்தில் எந்த இடத்திலும் உணவின் தரம் குறைய கூடாது. ஏழை, எளிய மாணவர்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் இந்த சமூகத்தை நலமான, வளமான, அறிவுமிக்க சமூகமாக வளர்த்தெடுக்கிறோம்.

காலை உணவு திட்டம் பெற்றோருக்கான சுமையை குறைத்து பள்ளி வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, குழந்தைகள் பள்ளிக்குப் பசியுடன் வரக் கூடாது. நாம் தொடங்கிய காலை உணவு திட்டம் கனடா போன்ற நாடுகளில் தொடங்கப்பட்டு உள்ளது.

மாணவர்களின் கல்விக்கு எந்த தடை வந்தாலும் அதை உடைப்பதே தி.மு.க.வின் பணி. பொய் செய்திகளை உருவாக்கி குளிர்காய நினைப்பவர்களின் எண்ணம் நடக்காது. ஈரை பேனாக்கும் வேலையை செய்பவர்கள் நம்மை பாராட்டமாட்டார்கள்” என்றுத் தெரிவித்துள்ளார்.

அரசு உதவி பெரும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : 2,23,536 மாணவர்கள் பயன்!

அரசு உதவி பெரும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : 2,23,536 மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15.9.2022 அன்று தொடங்கிவைக்கப்பட்டு, 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 இலட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.

இத்திட்டத்திற்கு மக்களிடையே ஏற்பட்ட வரவேற்பினையும், மாணவ மாணவியர் இடையே ஏற்பட்ட எழுச்சியினையும் கருத்தில் கொண்டு 25.8.2023 அன்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊராகிய திருக்குவளையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டு, 30 ஆயிரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் காலை உணவைச் சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில்,திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்டார்.

இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களுக்கு உரிமைகளும் நீதியும் கிடைக்கும் வரை ஓயப்போவதிலை : ராகுல் காந்தி தடாலடி

நாட்டு மக்களுக்கு உரிமைகளும் நீதியும் கிடைக்கும் வரை ஓயப்போவதிலை : ராகுல் காந்தி தடாலடி

டெல்லி : நாட்டு மக்களுக்கு உரிமைகளும் நீதியும் கிடைக்கும்வரை தாம் ஓயப்போவதிலை என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தமது சமூக வலைதள பதிவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்பது தமக்கு வெறும் பதவி மட்டும் அல்ல என்று குறிப்பிட்ட அவர், பல்வேறு தரப்பினரை சந்தித்தது உள்ளிட்ட காட்சி பதிவுகளையும் வெளியிட்டுள்ளார். மக்களவையில் உறுப்பினராக பதவியேற்றது இம்மாதம் 1ம் தேதி அவையில் பேசியது உள்ளிட்ட காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. மக்கள் பிரச்சனைகளை அறிந்து நாடாளுமன்றத்தில் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் குரல் எழுப்புவதே தமது கடமை என்று அந்த பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மக்கள் தங்களுக்கான உரிமைகளையும் நீதியையும் பெறும் வரை தாம் ஓயப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து உரையாடியது, உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தது, இந்திய ரயில்வே எஞ்சின் ஓட்டுநர்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தியது. மணிப்பூர் சென்று வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தது ஆகிய காட்சிகளையும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலின் அரசின் முடிவு.. மறுக்காமல் ஒப்புதல் அளித்த மத்திய அரசு..!

ஸ்டாலின் அரசின் முடிவு.. மறுக்காமல் ஒப்புதல் அளித்த மத்திய அரசு..!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மின்சாரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு மின்சார வாரிய துறையின் நிதி நிலையும் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியம்.

இந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) தனது நிதி நிலையை மேம்படுத்தும், நிதி ஆதாரங்களைச் சிறப்பாக பயன்படுத்தும், நிர்வாகத்தை மேம்படுத்தவும் முக்கியமான முடிவை சில மாதங்களுக்கு முன்பு எடுத்தது.இதன் படி Tangedco அமைப்பைத் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் – Tamil Nadu Power Generation Corporation Limited (TNPGCL) மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் – Tamil Nadu Power Distribution Corporation Limited (TNPDCL) என இரண்டு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளது.Tangedco அமைப்பை இரண்டாகப் பிரிப்பதன் மூலம் ஒரு நிறுவனத்தை அனல் மின் உற்பத்தியிலும் மற்றொன்று விநியோகத்திலும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்து முடியும். இதன் மூலம் வருமானம், கடன் ஆகியவற்றைச் சிறப்பாக நிர்வாகம் செய்ய முடியும் என்பது தமிழ்நாடு அரசின் திட்டம். இந்த நிறுவன பிரிப்பு மூலம் மின்சாரத் துறையில் நிதி நிலையை மேம்படுத்தவும் பெரிய அளவில் உதவும்.Tangedco அமைப்பை 2 பிரிவுகளாகப் பிரிக்கத் தமிழ்நாடு சில மாதங்களுக்கு முன்பு முடிவு செய்த நிலையில், இந்த புதிய கட்டமைப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவிற்கும், வளர்ந்து வரும் தொழிற்சந்தைக்கு மத்தியில் நிலையான வளர்ச்சியை நிலைநிறுத்த இது அவசியமாகும்.இதேபோல் இந்தியாவிலேயே வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இதைப் பசுமை எரிசக்தியில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாடு அரசு கூடுதலாகத் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் (Tamil Nadu Green Energy Corporation Limited) என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.இந்த நிறுவனத்தை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையுடன் (TNEDA) இணைக்கப்பட்டுள்ளது என எரிசக்தி துறை செயலர் பீலா ராஜேஷ் ஜனவரி 24 அன்று வெளியிட்ட உத்தரவின்படி வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியானது. இந்த நிறுவனத்தின் வாயிலாக நீர் மின் உற்பத்தி, சோலார், காற்றாலை போன்ற பசுமை மின்சார உற்பத்தியை ஊக்குவிப்பது மட்டும் அல்லாமல் பெரிய அளவிலான முதலீடுகளையும் ஈர்க்க முடியும்.தமிழ்நாடு அரசின் Tangedco கடனைக் குறைப்பதற்கும், அதன் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும் இரண்டாக உடைக்கும் ஆலோசனையை 2023ல் முன்னணி ஆலோசனை நிறுவனமான EY இந்தியா வழங்கியது. இதன் அடிப்படையில் பல பிரிவுகளில் ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட்ட முயற்சி தான் இது.

BSNL வர்றாரே.. கதற விட போறாரே.. மாசத்துக்கு ரூ.79 போதும்.. 300 நாட்களுக்கு வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்!

BSNL வர்றாரே.. கதற விட போறாரே.. மாசத்துக்கு ரூ.79 போதும்.. 300 நாட்களுக்கு வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்!

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்களின் கஸ்டமர்களே பிஎஸ்என்எல் திட்டங்களை (BSNL Plan) பார்த்து மூக்கில் விரல் வைத்து வரும் நேரத்தில், மாதத்துக்கு வெறும் ரூ.79 செலவில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை கொடுப்பது மட்டுமல்லாமல், 300 நாட்களுக்கு வேலிடிட்டியையும் கொடுத்து பிஎஸ்என்எல் தட்டித்தூக்கி இருக்கிறது.

இவ்வளவு மலிவான விலையில் எப்படி சலுகைகள் கிடைக்கிறது? வேலிடிட்டி முழுவதும் டேட்டா சலுகை கிடைக்குமா? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

டெலிகாம் கட்டணங்கள் உயர்வுக்கு பிறகு பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அதிக கஸ்டமர்கள் குவிந்து வருகின்றனர். ஏனென்றால், அவ்வளவு மலிவான விலையில் ப்ரீபெய்ட் திட்டங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கிடைக்கின்றன. மற்ற நிறுவனங்கள் கொடுக்கும் விலையில் இருந்து கிட்டத்தட்ட பாதி விலைக்கு கூட பிஎஸ்என்எல்லில் திட்டங்கள் இருக்கின்றன. இதில் ரூ 797 மதிப்பிலான திட்டம் மிரள விட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ 797 திட்ட விவரங்கள் (BSNL Rs 797 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) வருடாந்திர திட்டம் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், 300 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 10 மாதங்களுக்கு சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த நாட்களில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) போன்ற முக்கிய சலுகைகள் வருகின்றன.

இருப்பினும், அதிகப்படியான சலுகைகளை பெற்று கொள்ள முடியாது. விலைக்கு ஏற்பவும், தேவைக்கு ஏற்பவும் சலுகைகள் கிடைக்கிறது. அதாவது, இந்த ப்ரீபெய்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை கொடுக்கப்படுகிறது.

டேட்டாவை பொறுத்தவரையில், தினசரிக்கு 2 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம். அதிகபட்சமாக 120 ஜிபி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த 2 ஜிபிக்கு பிறகு ஃபேர் யூசேஜ் டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம்.

மொத்தமாக 6000 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். ஆகவே, முக்கியமான மூன்று சலுகைகளையும் பயன்படுத்தலாம். ஆனால், மேற்கூறிய மூன்று சலுகைகளும் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே கஸ்டமர்களுக்கு வழங்கப்படும். இந்த 60 நாட்களுக்கு பிறகு 300 நாட்களுக்கு வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும். அதாவது, தொடர்ந்து சிம் ஆக்டிவாக இருக்கும். இருப்பினும், வேறு சலுகைகள் கிடைக்காது.

இந்த 60 நாட்களுக்கு பிறகு பயன்படுத்தும் சலுகைகளுக்கு கட்டணங்களும் இருக்கின்றன. அதாவது, லோக்கல் கால்களுக்கு நிமிடத்துக்கு 1 ரூபாயும், எஸ்டிடி கால்களுக்கு 1.5 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். டேட்டாவை பொறுத்தவரை 1 எம்பிக்கு 25 பைசா வீதம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்படும். லோக்கல் எஸ்எம்எஸ்களுக்கு 80 பைசா வசூலிக்கப்படும்.

அதேபோல நேஷனல் எஸ்எம்எஸ்களுக்கு 1.20 ரூபாயும், இன்டர்நேஷனல் எஸ்எம்எஸ்களுக்கு 6 ரூபாயும் கட்டணமாக இருக்கிறது. ஆகவே, சிம் ஆக்டிவ் மற்றும் இன்கம்மிங் கால் வருடம் முழுவதும் வர வேண்டும், இதற்கேற்ப திட்டங்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் பக்கா ஆப்ஷனாக இருக்கிறது. எப்படி பார்த்தாலும் மற்ற நிறுவனங்களைவிட இது மலிவான விலைதான்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES