டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட இந்தியா கூட்டணியில் உள்ள மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர்.
இருப்பினும் இந்த கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்ட நிலையில் வெளிநடப்பு செய்துவிட்டார். இந்நிலையில் வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் மம்தா; “கூட்டத்தில் எனக்கு பேசுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதாவது தமிழக முதல்வர் x பதிவில்; கூட்டத்தில் ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா?
எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் கூட்டாட்சியா?? என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் எதிர்க்கட்சியினரை எதிரிகளாக நினைத்து ஒடுக்க நினைக்கக் கூடாது எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். எதிர்க்கட்சியின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது கூட்டாட்சிகளில் தத்துவம் என்று அவர் தனது x தளத்தில் கேள்விகளுடன் பதிவிட்டுள்ளார்.