பூம்புகார் கல்லூரி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஊதிய உயர்வுக்காக பெரிதும் போராடிய முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியனுக்கு பயனாளிகள் நேரில் வந்து நன்றிகளை தெரிவித்தனர்..
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மேலையூரில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் இயங்கும் சுயநிதி பிரிவு கல்லூரியில் பணியாற்றும் அலுவலக, ஆய்வக, நூலக உதவியாளர்கள், ஓட்டுநர், இரவு காவலர், துப்புரவு பணியாளர்கள் உட்பட்டவர்களுக்கு பல ஆண்டுகளாக மாதம் ரூபாய் 5000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது.
மிகுந்த பொருளாதார கஷ்டத்திலும் வறுமையிலும் வாடி வந்த ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி ஊதிய உயர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டும் பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்னும் குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட பூம்புகார் கல்வி கல்லூரி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெக வீரபாண்டியனை நேரில் சந்தித்து முறையிட்டார்கள். தொழிற்சங்க விதிப்படி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜெகவீர பாண்டியன் நேரடியாக கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டு கோரிக்கை வைத்தும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் எடுத்துரைத்து நியாயமான இந்த கோரிக்கையினை நிறைவேற்றித் தர பெரும் முயற்சி மேற்கொண்டார்.
மேலும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.எம்.முருகன் உள்ளிட்டவர்களின் கவனத்திற்கும் இப் பிரச்சினையை கொண்டு சென்று தற்பொழுது இந்த மாதம் முதல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி ஊதியத்தை பெற்றுக்கொண்ட பூம்புகார் கல்லூரி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அலுவலக உதவியாளர் ஜெயமணி, சுமதி ஆய்வக உதவியாளர்கள் லட்சுமணன், ராம்குமார், நூலக உதவியாளர் கயல்விழி, ஓட்டுநர் எழிலரசன், இரவு காவலர் சக்கரவர்த்தி, கூட்டுபவர்கள் நிலமதி, சரோஜா, உஷாராணி, துப்புரவு பணியாளர் செல்விமாலதி உள்ளிட்டவர்கள் மயிலாடுதுறையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெக வீரபாண்டியன் அவர்களை அவர்களது அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.
தங்களுடைய நெடுநாளைய கோரிக்கைக்காக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு ஊதிய உயர்வை பெற்று தந்ததற்காக கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது மிகவும் நெகிழி செய்ததாக அமைந்தது.
இந்நிகழ்வின் பொழுது மயிலாடுதுறை மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் குத்தாலம் இரா. மனோகரன் மற்றும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.மேலும் தலைமை செயற்குழு உறுப்பினர் மேலையூர் முத்து மகேந்திரனை சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டார்கள்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் திருமுருகன்